Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

போட்டிகளில் வெற்றிபெற்ற சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இன்பச் சுற்றுலா

Print PDF

மாலை மலர்    07.08.2012

போட்டிகளில் வெற்றிபெற்ற சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இன்பச் சுற்றுலா

சென்னை, ஆக. 7

போட்டிகளில் வெற்றிபெற்ற சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இன்பச் சுற்றுலா
சென்னை மற்றும் புறநகர் பகுதி மாநகராட்சி பள்ளிகளில் 8-வது வகுப்பு படிக்கும் எஸ்.சி., எஸ்.டி., சிறுபான்மைப் பிரிவு மாணவர்களுக்கு சமீபத்தில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.இதில் சென்னை மாநகராட்சி பள்ளியைச் சேர்ந்த 288 மாணவ-மாணவிகளும்,  புறநகர் பள்ளிகளைச் சேர்ந்த 300 மாணவ-மாணவிகளும் வெற்றி பெற்றனர்.இவர்கள் அனைவரையும் இன்பச் சுற்றுலா அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, அனைவரும் 3 நாள் சுற்றுலாவாக கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களின் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.2062  சென்னை மாநகராட்சி செலவு செய்கிறது.

இந்த மாணவ-மாணவிகள் இன்று காலை பாரத் தர்ஷன் சிறப்பு ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றனர். அவர்களை சென்னை மாநகர மேயர் சைதை. துரைசாமி மற்றும் அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.

Last Updated on Wednesday, 08 August 2012 05:21