Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

தில்லி மாநகராட்சிப் பள்ளிகளில் 5 ஆயிரம் ஆசிரியர் இடங்கள் காலி

Print PDF

தினமணி                     03.09.2012

தில்லி மாநகராட்சிப் பள்ளிகளில் 5 ஆயிரம் ஆசிரியர் இடங்கள் காலி

புது தில்லி, செப். 2: தில்லியின் மூன்று மாநகராட்சிகளுக்கு உள்பட்ட பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களில் மொத்தம் 5,568 இடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன.தில்லி மாநகராட்சி மூன்றாகப் பிரிக்கப்பட்டு தனித்தனியே இயங்கி வருகின்றன. இவற்றின் கீழ் மொத்தம் 1,750 பள்ளிகள் உள்ளன.வடக்கு தில்லி மாநகராட்சியின் கீழ் வரும் பள்ளிகளில் 1,971 இடங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. அதையடுத்து, கிழக்கு தில்லி மாநகராட்சிக்கு உள்பட்ட பள்ளிகளில் 1,958 ஆசிரியர் பணியிடங்களும் தெற்கு தில்லி மாநகராட்சி பள்ளிகளில் 1,639 ஆசிரியர்களும் நியமிக்கப்பட வேண்டும்.தில்லி மாநகராட்சி பிரிக்கப்படாமல் ஒருங்கிணைந்த நிலையில் இருந்தபோது, 2009-10ம் கல்வியாண்டு முதல் 2011-12-ம் கல்வியாண்டு வரையில் மொத்தம் 3,848 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.தில்லி உள்ளாட்சி அமைப்புகள் நடத்தும் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்கும் பணியை "தில்லி சபார்டினேட் சர்வீசஸ் செலெக்ஷன் போர்டு' மேற்கொண்டு வருகிறது.

இதன் மூலம் ஆசிரியர்களை நியமிக்கும் பணி வெகு விரைவில் மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

 

மாநகராட்சி பள்ளியில் கணித ஆய்வுக்கூடம்

Print PDF

தினமலர்      27.08.2012

மாநகராட்சி பள்ளியில் கணித ஆய்வுக்கூடம்

சென்னை : சென்னை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவியருக்கென நவீன கணித ஆய்வுக்கூடம் அமைக்கப்பட உள்ளது.பெரம்பூர், பள்ளிச் சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 3,400க்கும் மேற்பட்டவர்கள் படித்து வருகின்றனர்.

மாநகராட்சி பள்ளிகளில் அறிவியல் பாடத்திற்கென, செய்முறை விளக்கங்கள் கற்றுக் கொள்ள, ஆய்வுக்கூடம் உள்ளது. இதனால் மாணவியர் அறிவியல் பாட செய்முறைகளை ஆய்வு செய்ய முடிகிறது.இந்த யுக்தியை, கணித பாடத்திலும் புகுத்தினால், மாணவியர் கணித உபகரணங்களின் பயன்பாடுகளை எளிதில் புரிந்து கொள்ள முடியும் என்ற நோக்கில் கணித செய்முறைக் கூடம் அமைக்கப்படவுள்ளது.இந்த ஆய்வுக்கூடம் ஆறு முதல், பிளஸ் 2 வரை உள்ள மாணவியர் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அமைக்கப்படும்.இதுகுறித்து, அப்பள்ளி தலைமையாசிரியர் கூறும் போது, ""கணித ஆய்வுக்கூடம் அமைக்கும் பணிகள் முடிந்தவுடன் உபகரணங்கள் வைக்கப்படும்.விரைவில் செயல்பாட்டுக்கு வரும்.

கணித உபகரணங்கள் மூலம் செய்முறை விளக்கங்கள் கொடுத்தால், கணித பாடத்தையும் மாணவியர் எளிதில் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்,'' என்றார்.

 

ஆர்வமுடன் பங்கேற்ற மாநகராட்சி பள்ளி மாணவர்கள்

Print PDF

தினமணி             25.08.2012

ஆர்வமுடன் பங்கேற்ற மாநகராட்சி பள்ளி மாணவர்கள்

புது தில்லி, ஆக. 24: வடக்குத் தில்லி மாநகராட்சியின் கல்வித் துறை, அனைத்து வட்ட வளர்ச்சிக்கான சொûஸட்டி (எஸ்.ஏ.ஆர்.டி.) ஆகியவை இணைந்து சிவிக் சென்டர் வளாகத்தில் மாணவர்களுக்கான ஓவியப் போட்டியை வியாழக்கிழமை நடத்தின.அதில் என்.டி.எம்.சி. முனிசிபல் பள்ளிகளைச் சேர்ந்த 128 மாணவர்கள் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் பேசிய வடக்கு தில்லி மாநகராட்சி மேயர் மீரா அகர்வால், "வடக்கு தில்லி மாநகராட்சிப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட உள்ள "பிரபோதினி' எனும் மாணவர்களுக்கான ஓவியங்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்படும் இந்தப் போட்டி, மாணவர்களின் திறமையை வெளிக்கொணர்வதற்காக அமைந்துள்ளது.

மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் திறமை மிக்கவர்கள் என்பதற்கு அவர்கள் வரைந்துள்ள இந்த ஓவியங்களே சான்று' என்றார்.போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை மேயர் வழங்கினார்.நிகழ்ச்சியில் மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் யோகேந்தர் சந்தாலியா, துணைத் தலைவர் விஜய் பிரகாஷ் பாண்டே, கல்விக் குழு உறுப்பினர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 


Page 21 of 111