Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

தேசப்பற்றை வளர்க்கும் நிகழ்ச்சி மாநகராட்சிப் பள்ளி முதலிடம்

Print PDF

தினகரன்      14.08.2012

தேசப்பற்றை வளர்க்கும் நிகழ்ச்சி மாநகராட்சிப் பள்ளி முதலிடம்

திருப்பூர், : பள்ளி மாணவ, மாணவியர் இடையே தேசப்பற்றை வளர்க்கும் கலை நிகழ்ச்சி, திருப்பூரில் நடந்தது. இதில் அரண்மனைப்புதூர் மாநகராட்சி பள்ளி முதலிடம் பெற்றது.திருப்பூர் தெற்கு இன்னர்வீல் சங்கம் சார்பில், பள்ளி மாணவ, மாணவியர் இடையே தேசப்பற்றை வளர்க்கும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சங்க தலைவி நித்யா தலைமை வகித்தார். “நாட்டை நல்வழிப்படுத்துவதில் உன்னுடைய செயல்பாடு என்ன‘ என்ற தலைப்பில் பாட்டு, பேச்சு மற்றும் நடனப் போட்டிகள் நடந் தன. அரண்மனைப்புதூர், காதர்பேட்டை, தேவாங்கபுரம், கருவம்பாளையம் ஆகிய மாநகராட்சி நடுநிலைப்பள்ளிகளின் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

திட்ட ஒருங்கிணைப்பாளர் சரஸ்வதி, உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் கீதா, மாவட்ட துணை தலைவர் சரஸ்வதி ஆகியோர் நடத்தினர். அரசு பள்ளி மாணவ, மாணவியர் இடையே உள்ள திறமையை வெளிக்கொண்டு வந்து, அவர்களை ஊக்கப்படுத்துவதே, இந்நிகழ்ச்சியின் நோக்கம். அதிக புள்ளிகளை எடுத்த அரண்மனைப்புதூர் மாநகராட்சி பள்ளி முதலிடம் பெற்றது. தேவாங்க புரம் பள்ளி இரண்டாமிடம், காதர்பேட்டை பள்ளி மூன்றாமிடம் பெற்றது. வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு ரோட்டரி தலைவர் தேவராஜ் பரிசு வழங்கினார். சங்க செயலாளர் பிரபா நன்றி கூறினார்.

 

கணினி பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்

Print PDF

தினமணி             13.08.2012

கணினி பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்

களியக்காவிளை, ஆக. 12:÷களியக்காவிளை பேரூராட்சியில் நகர்ப்புற ஏழைமக்களுக்கு வேலைவாய்ப்பு வசதிகளை மேம்படுத்தும் திறன் வளர்ப்பு திட்டத்தின் கீழ், கணினிப் பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது

.÷இத்திட்டத்துக்காக இப்பேரூராட்சிக்கு தமிழக அரசு ரூ. 2,06,900 ஒதுக்கீடு செய்திருந்தது. இதன் மூலம் 26 மாணவிகள் கணினி பயிற்சி பெற்று வந்தனர்.

÷பயிற்சி முடித்த இம்மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. பேரூராட்சித் தலைவர் டி.ஆர். ஆஷாடயானா மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி பேசினார்.

÷நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் ஜி.சுதீர்குமார், வார்டு உறுப்பினர்கள் விஜயகுமாரி, விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி அதிமுக செயலர் கே.ஜி. உதயகுமார், சரிதாஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் எஸ்.என். தினேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

விழுப்புரம் நகராட்சி பள்ளியில் இலவச "லேப் டாப்' வழங்கல்

Print PDF

தினமலர்           12.08.2012

விழுப்புரம் நகராட்சி பள்ளியில் இலவச "லேப் டாப்' வழங்கல்

விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சி பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் சண்முகம் லேப் டாப்களை வழங்கினார். விழுப்புரம் நகராட்சி ஆண்கள் பள்ளியில் இலவச லேப் டாப் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் சம்பத் தலைமை தாங்கினார். சி.இ.ஓ., (பொறுப்பு) ஜோசப்அந்தோணிராஜ் வரவேற்றார். நகர சேர்மன் பாஸ்கரன், டி.ஆர்.ஓ., பிருந்தாதேவி, ஆர்.டி.ஓ., ராதாகிருஷ்ணன், தாசில்தார் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.அமைச்சர் சண்முகம் பங்கேற்று, நகராட்சி ஆண்கள் பள்ளி மாணவர்கள் 345 பேருக்கும், கீழ்பெரும்பாக்கம் அரசு பள்ளி மாணவர்கள் 262 பேருக்கும், என மொத்தம் 85 லட்சம் ரூபாய் மதிப்பிலான இலவச லேப் டாப்களை வழங்கி பேசினார். தொடர்ந்து நாடக மன்ற அரங்கத்தை திறந்து வைத்தார். விழாவில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சம்பத், நகர மன்ற கவுன்சிலர்கள் ராஜேஸ்வரி, ராமச்சந்திரன், சக்திவேல், அபிராமன், அ.தி.மு.க., தொகுதி செயலர் மூர்த்தி, எம்.ஜி.ஆர்., மன்றம் ஜானகிராமன், திருப்பதி பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியர் கோபால கிருஷ்ணன் நன்றி கூறினார்.
Last Updated on Monday, 13 August 2012 06:26
 


Page 22 of 111