Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

துப்புரவு பணியாளர்களுக்கு புதிய வீடு: சேர்மன் ஆய்வு

Print PDF

தினமலர் 21.06.2010

துப்புரவு பணியாளர்களுக்கு புதிய வீடு: சேர்மன் ஆய்வு

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு வீடு கட்டுவதற்கான இடத்தை சேர்மன் ஆய்வு செய்தார்.நெல்லிக்குப்பம் நகராட்சி துப்புரவு பணியாளர் களுக்கு 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட குடியிருப்புகள் தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளதால் புதிய வீடுகள் கட்டித்தர வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து துப் புரவு பணியாளர்களுக்கு இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் அதே இடத்தில் 42 வீடுகள் கட்டித்தர முடிவு செய்யப்பட்டது.இதனைத் தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளை சேர்மன் கெய்க்வாட் பாபு நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர்களிடம் வீடுகளை காலி செய்து தரும்படி கேட்டுக் கொண்டதில், மாற்று இடவசதி செய்தால் உடனடியாக காலி செய்வதாக குடியிருப்போர் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து மாற்று இடம் ஏற்பாடு செய்யப்படும் என சேர்மன் உறுதியளித்தார்.உடன் துப்புரவு அலுவலர் கிருஷ்ணகுõர், ஆய் வாளர் அரிநாராயணதாஸ் ஆகியோர் இருந்தனர்.