Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சாலையில் வசிப்பவர்களுக்கு நவீன தங்கும் விடுதி

Print PDF

தினகரன் 22.07.2010

சாலையில் வசிப்பவர்களுக்கு நவீன தங்கும் விடுதி

சேலம், ஜூலை 22: நகர்புறங்களில் வீடின்றி சாலையில் வசிப்பவர்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய தங்கும் விடுதிகளை நாடு முழுவதும் மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகிகள் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் நகர்புறங்களில் வீடில்லாமல் சாலையோரங்களில் குடும்பங்களாகவும், தனியாகவும் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இவர்கள் எவ்வித பாதுகாப்பும் இன்றி மழை, வெயில் போன்றவற்றின் பாதிப்புடன் சாலையோரங்களில் உள்ள கடைகள், கோயில் வாசல்கள், திண்ணைகள் போன்றவற்றில் இரவு நேரங்களில் படுத்து து£ங்குகின்றனர். இவர்களுக்கு உரிய வாழ்வுரிமையை அரசு அளிக்க வேண்டும் என கடந்த 2001ம் ஆண்டு பொதுநல நோக்குடன் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, சாலையோரங்களில் வாழ்பவர்களுக்கு அடிப்படை வாழ்வுரிமை மற்றும் கௌரவத்தை அளிக்கும் வகையில் மாநில அரசுகள் அவர்களுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும். அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன தங்கும் விடுதி அமைத்து தரவேண்டும் என நாடு முழுவதும் உள்ள மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு ஒரு விடுதி என்ற கணக்கில் போதுமான எண்ணிக்கையில் வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் அமைக்க வேண்டும் என கூறியுள்ளது.

இதையடுத்து தமிழக அரசு சமூக நலம் மற்றும் மதிய உணவு திட்டத்தின் கீழ் தங்கும் விடுதிகள் அமைக்க உள்ளது. சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டம் துறை செயலர் ராமமோகனராவ் கடந்த 11.5.2010ம் தேதி நகராட்சி நிர்வாக செயலர் நிரஞ்சன் மார்டிக்கு தங்கும் விடுதிகள் குறித்து செயல்படுத்த கடிதம் அனுப்பினார். இதன் பேரில் நகராட்சி நிர்வாக இயக்குனர் செந்தில்குமார் கடந்த 8.6.10ல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.