Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தற்கொலை தடுப்பு ஆலோசனை மையம் திறப்பு

Print PDF

தினமணி 20.09.2010

தற்கொலை தடுப்பு ஆலோசனை மையம் திறப்பு

மதுரை, செப். 19: செல்லூர் மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் சனிக்கிழமை தற்கொலை தடுப்பு மையத்தை மாவட்ட ஆட்சியர் சி.காமராஜ் திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசியது:

தற்கொலை எண்ணண் வந்தால் இம்மையத்தை தொடர்புகொண்டு அந்த எண்ணத்திலிருந்து விடுபட ஆலோசனை பெறலாம். 37 வயதுக்கு உள்பட்டோரில் 37.8% பேர் தற்கொலை செய்வதாக கணக்கெடுப்பில் தெரியவருகிறது. புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள மையத்தில் மனநல மருத்துவர்கள் ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆலோசனை மட்டுமல்லாது பொருளாதார ரீதியிலும் அவர்களுக்கு உதவ ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட மனநல திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சி.ராமசுப்பிரமணியன் பேசியது:

அறிவியல் வளர்ச்சி அபரிமிதமான நிலையில் அதனால் குடும்பத்தில் குழப்பமும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மாணவப் பருவத்தில் பிள்ளைகள் அதிக மனக் குழப்பத்துக்கு ஆளாகி மனநலம் பாதித்தும் காணப்படுகின்றனர். ஆகவே, மனநலம் குறித்த விழிப்புணர்வு அவசியம் தேவையாகிறது.

செல்லூரில் தொடங்கப்பட்டுள்ள தற்கொலை தடுப்பு மையத்தை தொடர்புகொள்ள புதிய தொலைபேசி எண்ணுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (0011 என்ற எண் சனிக்கிழமை செயல்படவில்லை) இதற்கு தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம். சிகிச்சை தேவைப்படுவோருக்கு சிகிச்சை அளிக்கவும் மையம் மூலம் ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மனநலப்பிரிவு டாக்டர் ரவீந்திரன், தல்லாகுளம் போலீஸ் உதவி கமிஷனர் சண்முகநாதன், மாநகராட்சி நகர்நல சுகாதாரத்துறை அலுவலர் சுப்பிரமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.