Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

27 ஆண்டு பிரச்னைக்கு தீர்வு 25 நபர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா

Print PDF

தினகரன் 05.10.2010

27 ஆண்டு பிரச்னைக்கு தீர்வு 25 நபர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா

பொள்ளாச்சி, அக். 5: பொள்ளாச்சி அருகே ஜமீன் ஊத்துக்குளியில் கடந்த 27 ஆண்டு போராட்டத்துக்கு முடிவு ஏற்பட்டதை தொடர்ந்து 24 நபர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாக்களை ஆர்.டி.. அழகிரிசாமி நேற்று வழங்கினார்.பொள்ளாச்சியை அடுத்த ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சிக்குட்பட்ட குஞ்சிபாளையம் பிரிவு அருகேயுள்ள காளிங்கராயர் நகரில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்குவதற்காக 4.91 ஏக்கர் நிலம் ஆதிதிராவிடர் நலத்துறையால் கையகப்படுத்தப்பட்டது. இந்த இடத்தில் 85 நபர்களுக்கு தலா 3 சென்ட் வீதம் பிரித்து வழங்க ஆதிதிராவிடர் நலத்துறை முடிவு செய்தது. அதற்குள் மேற்படி நிலத்தின் உரிமையாளர்கள் அந்த நிலத்தை தங்களுக்கே வழங்க வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கில் மேற்படி நிலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று கடந்த 2000ம் ஆண்டில் கோர்ட் தீர்ப்பளித்தது. இதனையடுத்து தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் 85 பேரில் 60 நபர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டு அவர்களுக்கான இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்போது 60 குடும்பங்களும் அப்பகுதியில் குடியேறின.

ஆனால் அந்த நிலத்தின் முன்னாள் உரிமையாளர்கள் மீண்டும் கோர்ட்டில் வழக்கு தொடுத்ததால் மீதமுள்ள 25 பயனாளிகளுக்கு நிலத்தை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் அப்பகுதியில் மின்சாரம், குடிநீர் உள்ளி ட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முடியாத நிலைக்கு பேரூராட்சி நிர்வாகம் தள்ளப்பட்டது. இதுகுறித்த விபரங்கள் அறிந்த நிலையிலும் அப்பகுதி மக்களில் சிலர் அவ்வப்போது அடிப்படை வசதிகோரி சாலை மறியல், பேரூராட்சி அலுவலகம் முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.தற்போது மீதமுள்ள 25 பயனாளிகளுக்கும் அந்த இடத்தை பிரித்து வழங்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து மேற்படி பயனாளிகள் 25 நபர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாக்களை ஆர்.டி.. அழகிரிசாமி நேற்று வழங்கினார்.

அப்போது பேரூராட்சி தலைவர் லிங்கம்மாள், முன்னாள் தலைவர் யு.என். கிருஷ்ணசாமி, துணைத் தலைவர் ஜெயராமச்சந்திரன், அப்பகுதி வார்டு கவுன்சிலர் வெள்ளைச்சாமி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். 27 ஆண்டு போராட்டத்துக்கு பிறகு ஒதுக்கப்பட்ட இடத்திற்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதால் பயனாளிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் அப்பகுதியில் இனி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்று பேரூராட்சித் தலைவர் லிங்கம்மாள் தெரிவித்துள்ளார். ஆர்.டி.. வழங்கினார்