Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெங்களூரில் 20 இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பு

Print PDF

தினகரன் 06.10.2010

பெங்களூரில் 20 இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பு

பெங்களூர், அக்.6: பெங்களூர் மாநகர மக்கள் கட்டுமான பணி, வாகனம் சுத்தப்படுத்தல் உள்பட பல தேவை களுக்கு கழிவு நீரை சுத்திகரித்து பயன்படுத்தும் நோக்கத்தில் ரூ.ஆயிரத்து 200 கோடி செலவில் 20 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் திட்டம் வேகமாக நடந்து வருகிறது.

மாநகர மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் காவிரி குடிநீர் 4வது திட்டத்தின் 2வது கட்ட பணி மூலம் 5 ஆயிரம் லட்சம் லிட்டரை தண்ணீரை வீணாகாமல் மக்களுக்கு வழங்கும் நோக்கத்தில் 3 குடிநீர் வினியோக நிலையங்கள் ரூ.11.5 கோடி செலவில் அமைக்க திட்டமிட்டு கடந்தாண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. 2011ல் காவிரி 4வது குடிநீர் திட்டத்தின் 2ம் கட்ட பணி முடிக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

முதல் கட்டமாக நாகர்பாவியில் ரூ.3.24 கோடி செலவில் 50 லட்சம் லிட்டர் வினியோகம் செய்யும் நிலையம், ராஜராஜேஷ்வரி நகரில் உள்ள ஸ்ரீகந்தகாவலுவில் ரூ.4.36 கோடி செலவில் 75 லட்சம் லிட்டர் வினியோக நிலையம் மற்றும் தாசரஹள்ளி எம்..எஸ். லே அவுட்டில் ரூ.3.95 கோடி செலவில் 90 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யும் நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

2ம் கட்டமாக ரூ.28.18 கோடி செலவில் கோவிந்தராஜ்நகர், அன்னபூர்ணேஷ்வரி நகர், நந்தினி லே அவுட், பேட்டராயனபுரா, கிருஷ்ணராஜபுரம், மகாதேவபுரா மற்றும் ஆர்.டி.நகரில் குடிநீர் வினியோக நிலையம் அமைக்கப்படுகிறது. மாநகரில் குடிநீருக்கு பயன்படுத்தும் தண்ணீரை கட்டுமான பணி, வாகனம் சுத்தம் செய்வது, பூங்கா பராமரிப்பு உள்பட பல தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில் வீட்டு பயன்பாட்டை தவிர்த்து பிற தேவைகளுக்கு சுத்தகரிக்கப்படாத தண்ணீரை பயன்படுத்தும் வகையில் ரூ.ஆயிரத்து 200 கோடி செலவில் 20 கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தும் திட்டம் இவ்வாண்டு இறுதியில் தொடங்க அரசு யோசித்து வருவதாக நம்ப தகுந்த வட்டாரம் மூலம் தெரியவருகிறது. கழிவு நீரை சுத்திகரித்து வழங்கப்படும் தண்ணீருக்கு பொதுமக்களிடம் ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.16 வசூலிக்கவும், படிப்படியாக இதை ரூ.5 ஆக குறைக்கும் யோசனையும் அரசிடம் உள்ளது.

இத்திட்டம் செயல்படுத்திய பின் வீட்டு பயன்பாட்டை தவிர பிற பயன்பாட்டிற்கு காவிரி நீரை பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.