Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகரம், பேரூராட்சி பகுதிக்கும் கலைஞர் வீடு வழங்கும் திட்டம் கீற்று உற்பத்தியாளர் சங்கம் வலியுறுத்தல்

Print PDF

தினகரன்               15.11.2010

நகரம், பேரூராட்சி பகுதிக்கும் கலைஞர் வீடு வழங்கும் திட்டம் கீற்று உற்பத்தியாளர் சங்கம் வலியுறுத்தல்

மயிலாடுதுறை, நவ.15: கலைஞர் வீடுகட்டும் திட்டத்தை நகர பேரூராட்சி பகுதிகளிலும் விரிவுபடுத்த கீற்று உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மயிலாடுதுறை பொதுதொழிலாளர் சங்கத்தின் ஓர் அங்கமான கீற்று உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் சங்க அலுவலகத்தில் சங்க தலைவர் நாஞ்சில்சேகர் தலைமையில் நடைபெற்றது.

செயலாளர் பாண்டியன் வரவேற்றுப் பேசினார். பொருளாளர் பாலு, துணைத்தலைவர் விஸ்வநாதன், தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஜெகவீரபாண்டியன் சிறப்புரையாற்றினார்.

பொதுத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் அப்பர்சுந்தரம், தென்றல் கோவிந்தராஜ், சாமிநாதன், குருசங்கர், கீற்று உற்பத்தி யாளர் சங்கத்தின் சின்னகுஞ்சு, கோவிந்தராஜ், ரேவதி, விஜயா, பரமசிவம், பாலு, சுந்தரமூர்த்தி, கல்யாணம் உள்ளிட்டோர் பேசினர்.

குடிசைஇல்லா தமிழகம் என்ற இலக்குடன் தொடங்கப்பட்டுள்ள கலைஞர் வீடுகட்டும் திட்டத்தை தமிழகம் முழுவதும் சிறப்பாக செயல்படுத்தும் தமிழக முதல்வருக்கும், துணை முதல்வருக்கம் நன்றி, கலைஞர் வீட்டு வசதி திட்டத்தை நகரம் மற்றும் பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும், மத்திய அரசின் திட்டமான 100 நாள் வேலை திட்டத்தையும், நகர புறத்திற்கும் விரிவுபடுத்த மத்திய அரசை கேட்டுக்கொள்வது, மயிலாடுதுறை கீற்று உற்பத்தியாளர்கள் வகிக்கும் கீழநாஞ்சில்நாட்டில் உள்ள மினிபவர் பம்பு சுகாதார வளாகம் ஆகியவை செயல்படவில்லை. உடனடியாக நகராட்சி நிர்வாகம் சரி செய்ய கேட்டுக்கொள்வது, கீழநாஞ்சில்நாட்டில் உள்ள குளத்திற்கு ரிவிட்மென்ட் அமைத்துத்தரவும், குளத்திலுள்ள வெங்காயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும்.

இப்பகுதியில் உள்ளவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏகாம்பரம் நன்றி கூறினார்.