Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மும்பையில் 2011&ம் ஆண்டில் குடிசைவாசிகளின் எண்ணிக்கை 87 லட்சமாக அதிகரிக்கும்

Print PDF

தினகரன்              16.11.2010

மும்பையில் 2011&ம் ஆண்டில் குடிசைவாசிகளின் எண்ணிக்கை 87 லட்சமாக அதிகரிக்கும்

மும்பை, நவ.16: நாட்டின் பொருளாதார தலைநகரமான மும்பையில் அடுத்த ஆண்டுவாக்கில் குடிசைவாசிகளின் எண்ணிக்கை 86 லட்சத்து 80 ஆயிரமாக அதிகரிக்கும் என்று மத்திய அரசு நியமித்த நிபுணர் குழு கணித்துள்ளது.

இந்தியாவை குடிசைகள் இல்லாத நாடாக மாற்றும் நோக்கத்துடன் ராஜிவ் காந்தி வீட்டு வசதி திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. கடந்த 2001ம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் நாட்டில் உள்ள குடிசைவாசிகளின் எண்ணிக்கை சரியான முறையில் கணக்கிடப்படவில்லை என மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் கருதியது. இதனையடுத்து உண்மையானகுடிசைவாசிகளின் எண் ணிக் கையை மதிப்பீடு செய்ய நிபுணர் குழு ஒன்றை அந்த அமைச்சகம் அமைத்து இருந்தது. இந்த குழு புதிய வழிமுறை ஒன்றை பின்பற்றி நாட்டில் உள்ள குடிசைவாசிகளின் எண்ணிக்கையை கணித்து இருக்கிறது.

இதன்படி மும்பையில் அடுத்த ஆண்டுவாக்கில் 86 லட்சத்து 80 ஆயிரம் குடிசைவாசிகள் இருப்பார்கள். மும்பைக்கு அடுத்த படியாக டெல்லியில் 31 லட்சத்து 60 ஆயிரம் குடிசைவாசிகள் இருப்பார்கள். கடந்த 2001ம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பில் டெல்லியில் 23 லட்சம் குடிசைவாசிகள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2001ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மும்பையில் 65 லட்சம் குடிசைவாசிகள்தான் இருந்தார்கள் என்ற போதிலும் நிபுணர் குழுவின் புதிய மதிப்பீட்டின்படி இந்த எண்ணிக்கையை 68 லட்சம் என நிபுணர் குழு கணித்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் குடிசைப் பகுதி மக்களின் எண்ணிக்கை 1 கோடியே 78 லட்சம் அதிகரித்து இருப்பதாகவும் நிபுணர் குழு கூறியுள்ளது. அடுத்த ஆண்டுவாக்கில் நாட்டின் குடிசைவாசிகளின் எண்ணிக்கை 9 கோடியே 30 லட்சமாக இருக்கும். 2001ம் ஆண்டில் இது 7 கோடியே 52 லட்சமாக இருந்தது.

மெட்ரோ நகரங்களில் மும்பை மற்றும் டெல்லிக்கு அடுத்தபடியாக கொல்கத்தாவில் அடுத்த ஆண்டில் 17 லட்சத்து 80 ஆயிரம் குடிசைவாசிகள் இருப்பார்கள். சென்னையில் 10 லட்சத்து 2 ஆயிரம் குடிசைவாசிகள் இருப்பார்கள்.

மாநில அளவில் அடுத்த ஆண்டுவாக்கில் மகாராஷ்டிராவில் 1.81 கோடி குடிசைவாசிகளும், உத்தரபிரதேசத்தில் 1.08 கோடி குடிசைவாசிகளும், மேற்கு வங்கத்தில் 85 லட்சம் குடிசைவாசிகளும், ஆந்திராவில் 81 லட்சம் குடிசைவாசிகளும் இருப்பார்கள் என நிபுணர் குழு கணித்து இருக்கிறது.