Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஒதுக்கீட்டு ஆணையை மு.க.ஸ்டாலின் வழங்கினார் 85 சலவை தொழிலாளர்களுக்கு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு

Print PDF

தினகரன்                           22.11.2010

ஒதுக்கீட்டு ஆணையை மு..ஸ்டாலின் வழங்கினார் 85 சலவை தொழிலாளர்களுக்கு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு

சென்னை, நவ.22: சலவை தொழிலாளர்கள் 85 பேருக்கு குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணையை, துணை முதல்வர் மு..ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை பெரம்பூர் பேரக்ஸ் திட்டப்பகுதியில் 120 குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ3.09 கோடி செலலில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடியிருப்பும் ரூ2.58 லட்சம் மதிப்புள்ளது. முதற்கட்டமாக, இவற்றில் 85 வீடுகளை சலவைத் தொழிலாளர்களுக்கு வழங்கும் விழா, சென்னை கோட்டையில் நேற்று நடந்தது. குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணையை, பயனாளிகளுக்கு துணை முதல்வர் மு..ஸ்டாலின் வழங்கினார்.

இதேபோல், பெரம்பூர் கவுதமபுரம் திட்டப்பகுதியில் பழுதடைந்த 48 குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, அதே இடத்தில் ரூ1.07 கோடி செலவில் புதிதாக குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இதில், ஒவ்வொரு குடியிருப்பும் ரூ2.23 லட்சம் மதிப்புள்ளது. ஏற்கனவே, அந்த குடியிருப்புகளில் வசித்து வந்தவர்களுக்கு, மீண்டும் அதே இடத்தில் வசிப்பதற்கான குடியிருப்பு ஆணை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், குடிசை மாற்று வாரியத் துறை அமைச்சர் சுப.தங்கவேலன், வி.எஸ்.பாபு எம்எல்ஏ, வீட்டு வசதித்துறைச் செயலாளர் அசோக் டோங்ரே, குடிசை மாற்று வாரிய மேலாண்மை இயக்குனர் ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.