Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

இணையதளத்தில் விண்ணப்பிப்போருக்கு பிறப்பு, இறப்பு சான்றிதழ் கூரியரில் அனுப்பப்படாது மாநகராட்சி முடிவு

Print PDF

தினகரன்           24.11.2010

இணையதளத்தில் விண்ணப்பிப்போருக்கு பிறப்பு, இறப்பு சான்றிதழ் கூரியரில் அனுப்பப்படாது மாநகராட்சி முடிவு

புதுடெல்லி, நவ. 24: இணையதளத்தில் விண்ணப்பிப்போருக்கு சம்பந்தப்பட்ட மருத்துவமனை அல்லது மண்டல அலுவலகத்தில் மட்டுமே பிறப்பு, இறப்பு சான்றிதழ் தரப்படும். இனிமேல் கூரியரில் இவை அனுப்பப்படாது என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரத்துறை தலைவர் வி.கே.மோங்கா கூறியதாவது:

பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற மாநகராட்சியின் இணையதளத்திலேயே பதிவு செய்யும் வசதியை, சுகாதாரத்துறை அறிமுகப்படுத்தியது. கிரெடிட் கார்டு மூலம் இந்த சான்றிதழ்களுக்கு பணம் செலுத்திவிட்டால் போதும். அவர்களின் தகவல்களின் அடிப்படையில் கூரியர் மூலம் சான்றிதழ் அனுப்பி வைக்கப்பட்டு வந்தது.

ஆனால், இணையதள வசதியை பயன்படுத்திக் கொண்டு பலர் போலி தகவல்களை தெரிவித்து இந்த ஆவணங்களை பெற்று வருவது தெரியவந்தது. இதனால் இனிமேல் இணையதளத்தில் விண்ணப்பிப்பவர்களுக்கு கூரியர் மூலம் சான்றிதழ் அனுப்புவதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் மற்றும் மண்டல அலுவலகங்களில் மட்டுமே பெற்று கொள்ள வேண்டும் என்று புதிய விதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இணையதளத்தில் பிறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பிப்போர், மருத்துவமனையில் குழந்தை பிறந்திருந்தால் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு சென்று பெற்றுக் கொள்ளலாம். வீட்டிலேயே குழந்தை பிறந்திருந்தால், மண்டல அலுவலகத்துக்கு சென்று பிறப்பு சான்றிதழை பெறலாம்.முதலில் மாநகராட்சியின்

ஷ்ஷ்ஷ்.னீநீபீஷீஸீறீவீஸீமீ.ரீஷீஸ்.வீஸீ என்ற இணையதளத்துக்கு சென்று பதிவு செய்து கொள்ளவேண்டும். இணையதளத்துடன் நகரில் உள்ள 281 மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றில் தினமும் பிறப்பு, இறப்பு எண்ணிக்கை பதிவு செய்யப்படுகிறது என்றார்