Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மழையால் நோய் பரவுவதை தடுக்க குடிநீரை நன்கு சுத்திகரித்து விநியோகிக்க உத்தரவு சுகாதாரத்துறையினர் உஷார்

Print PDF

தினகரன்                25.11.2010

மழையால் நோய் பரவுவதை தடுக்க குடிநீரை நன்கு சுத்திகரித்து விநியோகிக்க உத்தரவு சுகாதாரத்துறையினர் உஷார்

தேனி, நவ.25: தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், குடிநீர், தேங்கும் மழைநீர் மூலம் நோய் அபாயம் இருப்பதால், சுகாதாரத்துறையினர் விழிப்புடன் செயல்பட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். குடிநீரில் குளோரினேசன் அளவை அதிகப்படுத்த அறிவுறுத்தியுள்ளார்.

தேனி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு கலங்கலாக ஓடுவதால் உறைகிணறுகளில் தண்ணீர் மாசுபட்டுள்ளது. இந்த தண்ணீரை அப்படியே விநியோகித்தால் தொற்று நோய் பரவலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

இதனையடுத்து கலெக்டர் முத்துவீரன், மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளின் ஆணையர், செயல் அலுவலர்கள் மற்றும் தலைவர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், குடிநீரை குளோரினேசன் அளவை அதிகப்படுத்தி நன்கு சுத்திகரிப்பு செய்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும். தவிர, மேல்நிலைத் தொட்டிகளையும் சுத்திகரிப்பு செய்ய அவர் வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து ஆயிரம் லிட்டருக்கு 4 கிராம் குளோரின் என்பது அதிகப்படுத்தப்பட்டுள்ளது. குடிநீரிலோ, தேங்கும் நீரிலோ நோய்கள் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை அலர்ட் செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில், குடிநீரை நன்கு காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுகாதாரப்பணியை தீவிரப்படுத்த கூடுதல் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் உள்ள 8 தலைமை ஆரம்ப சுகாதார நிலையங்களில் 10 சுகாதாரப்பணியாளர்கள் (மஸ்தூர்) நியமிக்கப்பட்டு இருந்தனர். தற்போது கூடுதலாக 5 மஸ்தூர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 120 பேர் தினமும் வீடு, வீடாக சென்று, கொசுக்களை ஒழிக்கும் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

வீட்டில் உள்ள தொட்டிகள், பிளாஸ்டிக்குகள், தேங்காய் சிரட்டைகள், உடைந்த டயர்களில் தேங்கிய தண்ணீரில் கொசு இனப்பெருக்கம் நடக்கிறது. இதனை அப்புறப்படுத்தினாலே கொசுக்கள் உற்பத்தியாகாது. சிக்குன்குனியா, காய்ச்சல் போன்றவை உருவாகாது என அறிவுறுத்துகின்றனர். ஏடிஎஸ், கியூலக்ஸ் வகை கொசுக்கள் குறித்தும் வீடு வீடாக பிரசாரம் செய்யப்படுகிறது.