Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ18 கோடியில் அமைகிறது அதங்கோட்டில் சுத்திகரிப்பு நிலைய பணிகள் தொடக்கம்

Print PDF

தினகரன்              26.11.2010

ரூ18 கோடியில் அமைகிறது அதங்கோட்டில் சுத்திகரிப்பு நிலைய பணிகள் தொடக்கம்

களியக்காவிளை, நவ.26: களியக்காவிளை, மெதுகும்மல், ஏழுதேசம், கொல்லங்கோடு கூட்டுகுடிநீர் திட்டத்துக்காக ரூ18கோடியில் அதங்கோட்டில் அமைய இருக்கும் சுத்திகரிப்பு நிலைய பணி தொடங்கியது.

களியக்காவிளை, கொல்லங்கோடு, ஏழுதேசம் பேரூராட்சிகள் மற்றும் மெதுகும்மல், வாவறை, குளப்புரம், அடைக்காகுழி உள்ளிட்ட ஊராட்சிகள் மற்றும் சுற்றுப்புற பகுதிகள் பயன்பெறும் வகையில் களியக்காவிளை, மெதுகும்மல் மற்றும் ஏழுதேசம் கொல்லங்கோடு கூட்டு குடிநீர்திட்டம் ஏற்படுத்தப்பட்டன.

இதற்காக களியக்காவிளை அருகே அதங் கோடு தாமிரபரணி ஆற்றுப்படுகையில் 10க்கும் மேற்பட்ட உறை கிணறுகள் அமைக்கப்பட்டன. அதில் இருந்து பெறப்படும் தண் ணீர் தங்கள் தேவைக்கு ஏற்ப நீர்த்தொட்டிகளில் சேமித்து வீட்டு குடிநீர் இணைப் புகள் மூலம் விநியோகிக்கப்பட்டு வரு கிறது.

உறைகிணறுகளில் இருந்து அனுப்பப்படும் தண்ணீர் சுகாதாரமற்றதாக இருப்பதால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்வழங்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து களியக்காவிளை மெதுகும்மல் கூட்டுகுடிநீர் திட்டம், கொல்லங்கோடு, ஏழுதேச பகுதியில் உள்ள 27 வழியோர கிராமங்கள், மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 79 வழியோர கிராமங்களுக் கென குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அதங்கோட்டில் இடம் தேர்வு செய்யப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ18 கோடி மதிப்பில் அதங்கோட்டில் அமைய இருக்கும் குடிநீர் சுத்தி கரிப்பு நிலைய பணி கடந்த சில தினங்களுக்குமுன் தொடங்கியது.

முதல்கட்டமாக ஜேசிபி எந்திரம் மூலம் நிலத்தை சீரமைத்து அஸ்திவாரம் தோண்டும் பணி நடந்து வருகிறது. வரும் 2011ம் ஆண்டு இறுதியில் குடிநீர்சுத்திகரிப்பு நிலையம் செயல்பட தொடங்கும்.