Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

3 மாதத்தில் வீதிகளில் வாழும் ஏழைகளுக்கு வசிப்பிடம்

Print PDF

தினகரன்                 29.11.2010

3 மாதத்தில் வீதிகளில் வாழும் ஏழைகளுக்கு வசிப்பிடம்

பெங்களூர், நவ.29: நகர்ப்புறங்களில் பஸ், ரயில்நிலையங்கள், நடைபாதைகளில் வசிக்கும் ஏழைகளுக்கு 3 மாதத்தில் வசிப்பிடம் அளிக்க புதிய திட்டம் வகுக்கப்படும் என்று நகர்ப்புற வளர்ச்சி மற்றும் சட்டத்துறைகளுக்கான அமைச்சர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.

பெங்களூரில் நேற¢று நகர்புறமாதல் குறித்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்ள வந்த அமைச்சர் நிருபர்களிடம் பேசும்போது "நகர்ப்புறங்களில் வசிக்கும் குடிசைவாழ் மக்களுக்கு பட்டா வழங்கும் பணிகள் துரிதகதியில் நடந்துவருகின்றன. அதே நேரம் பஸ், ரயில் நிலையங்கள், நடைபாதைகளில் தங்கியிருந்து வாழ்க்கை நடத்துபவர்களால் பொதுமக்களுக்கு பெரும் தொந்தரவு ஏற்படுகிறது.

குளிரிலும், மழையிலும் அவர்கள் இருப்பிடம் இன்றி தங்கியிருப்பதை தடுக்க அரசு புதிய வரைவுத்திட்டம் தயாரித்துவருகிறது. இன்னும் 3 மாதங்களில் இவர்களுக்கு இருப்பிடம் அளிப்பது குறித்த புதிய திட்டம் அறிவிக்கப்படும்.

இருப்பிடம் அளிப்பது மட்டுமின்றி அவர்களுக்கு தேவையான உணவு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக வசிப்பிடங்கள் இன்றி பொது இடங்களில் வாழ்க்கை நடத்துவோரின் எண்ணிக்கையை கணக்கெடுக்கும் பணியில் அரசு ஈடுபட உள்ளது.

2030ம் ஆண்டுக்குள் நகர்ப்புறங்களில்தான் நாட்டின் 50 சதவீத அளவு மக்கள் வசிக்க உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஒட்டுமொத்தமாக நகர்ப்புறங்களுக்கு மக்கள் படையெடுத்து வருவதால் நகர்ப்புறங்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கும் நிலை ஏற்படலாம். எனவே முன்னெச்சரிக்கையாக அப்பிரச்னைகளை தடுக்க தற்போதிருந்தே நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்" என்று அவர் தெரிவித்தார்.