Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெண்களுக்கான நவீன உடற்பயிற்சி கூடம் ஆயிரம் விளக்கு தொகுதியில் ரூ3 கோடியில் வளர்ச்சி பணிகள்

Print PDF

தினகரன்              29.11.2010

பெண்களுக்கான நவீன உடற்பயிற்சி கூடம் ஆயிரம் விளக்கு தொகுதியில் ரூ3 கோடியில் வளர்ச்சி பணிகள்

சென்னை, நவ. 29: சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் முடிக்கப்பட்ட வளர்ச்சி பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிகள் நேற்று மாலை 5 இடங்களில் நடந்தது. இதில் துணை முதல்வர் மு..ஸ்டாலின் பங்கேற்று வளர்ச்சி பணிகளை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிகளுக்கு மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் முன்னிலை வகித்தார். மேயர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

முதலாவதாக கோபாலபுரம் கான்ட்ரான் ஸ்மித் சாலையில் ரூ19 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள பெண்களுக்கான நவீன உடற்பயிற்சி கூடம், கோபாலபுரம் விளையாட்டு மைதானத்தில், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ26.34 லட்சத்தில் அமைக்கப்பட்ட 400 மீட்டர் ஓடுதளம், கூடைப்பந்து மைதானம் ஆகியவற்றை துணை முதல்வர் திறந்து வைத்தார்.

சென்னை மாநகரில் பிறக்கும் குழந்தையின் பெயரால் மரக்கன்று நடும் திட்டத்தின் கீழ் குழந்தையின் பெற்றோர் பெயர், பிறந்த தேதியுடன் கூடிய பாதுகாப்பு வளையத்துடன் 60 மரக்கன்றுகளை கோபாலபுரம் விளையாட்டு மைதானத்தில் துணை முதல்வர் நட்டார். இதையடுத்து 112வது வார்டு, அம்மையப்பன் சந்தில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ17.42 லட்சம் செலவில் கட்டப்பட்ட சத்துணவுக்கூடம், உடற்பயிற்சி கூடத்தினையும் அவர் திறந்து வைத்தார். மூன்றாவது நிகழ்ச்சியாக, ராயப்பேட்டை மீர்ஜா ¬உறதர் அலிகான் தெருவில் சென்னை மாநகராட்சியும், இந்து நாளிதழ் நலவாழ்வு மையம், டி.டி.கே.அமைப்பும் இணைந்து மது மற்றும் போதைக்கு அடிமையானவர்களுக்கு, 20 படுக்கைகளுடன் சிறப்பு மறுவாழ்வு மையம் தொடங்கப்பட்டுள்ளது. அதை திறந்து வைத்த பின்னர், கிரீம்ஸ் சாலையில் ரூ2.43 கோடி செலவில் விரிவாக்கப்பட்ட கழிவுநீர் அகற்று நிலையம் மற்றும் புதிய பணிமனையை ஸ்டாலின் திறந்து வைத்தார்.

நேற்று ஒரே நாளில், ஆயிரம் விளக்கு தொகுதியில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில், ரூ3 கோடியே 5 லட்சத்து 75 ஆயிரம் செலவில் வளர்ச்சி பணிகள் துவக்கி வைக்கப்பட்டன.

நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையிலுள்ள அசெம்ஷன் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் 2,290 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் களை வழங்கினார். நிகழ்ச்சியில், மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையத்தில் பணிபுரிய 7 இளநிலை பயிற்சி அதிகாரிகளுக்கும், ஒரு பணிமனை உதவியாளருக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கினார். மேலும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவி திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழும் 66 பேருக்கு ரூ6.60 லட்சம் உதவித் தொகையும் வழங்கினார்.