Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உக்கடம் கழிவுநீர் பண்ணையில் அடுக்குமாடி கட்டடம்

Print PDF

தினமலர்              15.12.2010

உக்கடம் கழிவுநீர் பண்ணையில் அடுக்குமாடி கட்டடம்

கோவை : மாநகராட்சி விதிமுறையையும், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய நெறிமுறைகளையும் மீறி உக்கடம் கழிவு நீர் பண்ணையில் 9,600 பேருக்கு அடுக்குமாடி கட்டடம் கட்டுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்து காங்., தி.மு.., தவிர அனைத்து கட்சி கவுன்சிலர்களும் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர். கோவை மாநகராட்சி அவசரக்கூட்டம் நேற்று நடந்தது. மேயர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். ஜவஹர்லால் நேரு நகர புனரமைப்பு திட்டத்தின் கீழ் உக்கடம் கழிவுநீர் பண்ணையில் மூன்றாம் கட்டமாக, 9,600 பேருக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டுதல், பில்லூர் குடிநீர்த் திட்டத்தில், இரும்பு குழாய் அமைப்பது, சிறப்பு சாலை திட்டம் 2010- 2011 ல் சிப்பம் 1ன் கீழ் மறு ஒப்பந்தப்புள்ளி கோருவது தொடர்பான 3 தீர்மானத் கொண்டு வரப்பட்டது.

ராஜ்குமார் (.தி.மு.., கட்சி தலைவர்): அம்மன் குளம் பகுதியில் குடிசைப்பகுதிமாற்று வாரியம் கட்டிய அடுக்குமாடி குடியிருப்புகள் மண்ணில் புதைந்தன. அதை சரிப்படுத்த மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. இதனால் புதைந்த கட்டடத்தை இடித்து வருகின்றனர். இத்தனைக்கும் காரணம் குடிசைப்பகுதிமாற்று வாரிய அதிகாரிகளும், கட்டடம் கட்டிய எஸ்.பி.,சுந்தரசாமி அன் கோ கட்டுமான நிறுவனமும் தான் என்பது வெளிப்படையாக தெரிகிறது. இச்சூழலில் தவறு செய்த ஒருவரிடமே, உக்கடம் கழிவுநீர் பண்ணையில் ஏழை மக்களுக்கான அடிப்படை வசதி திட்டத்தில் அடுக்குமாடி கட்டடம் கட்டிக் கொடுக்க ஒப்புதல் தெரிவிக்கும் தீர்மானத்தை மன்றத்துக்கு தி.மு.., காங்., கூட்டணி கொண்டு வந்துள்ளது. இதை ஏற்க முடியாது. அம்மன்குளம் வீடு புதைந்த பிரச்னை, பாதாள சாக்கடை பிரச்னை, நஞ்சுண்டாபுரம் கழிவுநீர் பண்ணை என்று ஏராளமான பணிகள் ஜவஹர்லால் நேரு நகர புனரமைப்புத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டம் குறித்து விரிவாகவும், தெளிவாகவும் அலசி ஆராய, ஒரு நாளை தேர்வு செய்து சிறப்புக் கூட்டம் கூட்ட நாங்கள் பலமுறை கோரிக்கை வைத்துவிட்டோம், மூன்றில் ஒரு பங்கு மெஜாரிட்டியோடு கமிஷனரிடமும் கடிதம் கொடுத்து விட்டோம், என்றார். மேயர்: அம்மன் குளம் விஷயம் குறித்து விவாதிக்க எதுவுமில்லை. தொழில்நுட்ப கோளாறினால் கட்டடம் புதைந்தது. மற்ற கட்டடங்கள் நல்ல நிலையிலுள்ளன. ஒரு கட்டடத்தை வைத்து, மற்ற கட்டடத்தை பேச முடியாது. இருந்தாலும் ஜவஹர்லால் நேரு நகர புனரமைப்புத்திட்டம் குறித்து விவாதிக்க சிறப்புக் கூட்டத்தை கூட்டுகிறேன் என்றார். இதை ஏற்காமல், மா.கம்யூ., பத்மநாபன், முருகேசன், .கம்யூ., புரு÷ஷாத்தமன், கல்யாணசுந்தரம், .தி.மு., ராஜேந்திரன், தங்கவேல், தே.மு.தி.., கண்ணதாசன், சாவித்திரி, .தி.மு.., சுப்புலட்சுமி, ஆதிநாரயணன், பிரபாகரன் உள்ளிட்ட கவுன்சிலர்கள் நேற்று வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்