Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கான்கிரீட் வீடு கட்ட நிதியுதவி

Print PDF

தினமணி                    04.08.2012

கான்கிரீட் வீடு கட்ட நிதியுதவி

தஞ்சாவூர்,  ஆக. 3: நகராட்சிப்  பகுதிகளில் குடிசை  வீட்டில்   வசிப்பவர்கள் கான்கிரீட் வீடு கட்டிக்கொள்ள அரசு மானியத்துடன் நிதி உதவி அளிப்பபடுகிறது என்றார் தஞ்சாவூர் நகராட்சி ஆணையர் பு. ஜானகி ரவீந்திரன்.

 இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நகராட்சிப் பகுதிகளில் குடிசை வீடுகளில்   வாழ்பவர்கள், கான்கிரீட் வீடு கட்டிக் கொள்ள மத்திய-மாநில அரசுகள் ரூ. 72 ஆயிரம் மானியத்துடன் குறைந்தபட்சம் 270 சதுர அடிகான்கிரீட் குடியிப்பு கட்டிக்கொள்ள நிதி உதவி வழங்குகின்றன.

இந்தத் திட்டத்தை தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை நகராட்சி குடிசைப் பகுதி வாழ் மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மானியம் பெறும் குடிசைவாசிகளுக்கு குடிநீர் இணைப்பு மற்றும் புதைவடிகால் சாக்கடை இணைப்பு இலவசமாக வழங்கப்படும். மானியத் தொகையைப் பெற, பயனாளி குடிசைப்பகுதியில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

குடியிருப்பு அமையவுள்ள மனை இடம் குறைந்தபட்சம் 200 சதுர அடி அளவில் பயனாளிகளின் பெயரில் பட்டா, கிரயப் பத்திரம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ரூ. 20 ஆயிரம் வங்கிக் கடன் பெற்றுத் தரப்படும்.

பயனாளிகள் வரும் 10-ம் தேதிக்குள் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகங்களில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என்றார் அவர்.