Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சேலம் மாநகராட்சி பகுதிக்கு ரூ132 கோடியில் தனி குடிநீர் திட்ட இரண்டாம் கட்ட பணிகள் துவக்கம் 2 மகப்பேறு மருத்துவமனைகள் திறப்பு

Print PDF
தினகரன்             13.08.2012
 
சேலம் மாநகராட்சி பகுதிக்கு ரூ132 கோடியில் தனி குடிநீர் திட்ட இரண்டாம் கட்ட பணிகள் துவக்கம் 2 மகப்பேறு மருத்துவமனைகள் திறப்பு
 
சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்திற்கு உட்பட்ட 14வது வார்டு குமாரசாமிப்பட்டியில் ரூ39.50 லட்ச மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட மகப்பேறு நல மருத்துவமனையை அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இதில் 5 படுக்கையும், மருத்துவர் அறை, அதிநவீன சோதனை கருவி அறை, பிரசவ முன் அறை, பிரசவ அறை என அனைத்து வசதியும் உள்ளது. இதேபோல் அம்மாப்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட 42வது வார்டு கிச்சிப்பாளையத்தில் பழைய மருத்துவமனை கட்டடத்தை அகற்றிவிட்டு புதிதாக ரூ39.95 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மகப்பேறு நல மருத்துவமனையை அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி திறந்தார். இங்கு 8 படுக்கையும், மருத்துவர் அறை, பிரசவ அறை, நோயாளிகள் அறை, கழிவறை, மருத்தகம், உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. இந்நிகழ்ச்சியில் திமுக வார்டு கவுன்சிலர் சரளா குணசேகரன் கலந்து கொண்டார். சேலம், :சேலம் மாநகராட்சி பகுதிக்கான தனி குடிநீர் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் ரூ132.12 கோடி மதிப்பீட்டில் அமைச்சர் இடைப்பாடி பழனிசாமியால் துவக்கி வைக்கப்பட்டது.

சேலம் மாநகராட்சி பகுதிக்கு போதுமான அளவு குடிநீர் வழங்குவதற்காக தனி குடிநீர் திட்டம் ரூ320.54 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், ரூ188 கோடி மதிப்பீட்டில் துவங்கப்பட்ட முதற்கட்ட பணிகள் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில் இரண்டாம் கட்ட பணியாக ரூ132.12 கோடியில் சேலம் மாநகர பகுதியில் 22 புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் கட்டவும், 67 கிலோ மீட்டர் தூரத்திற்கு துணை பிரதான குழாய்கள் அமைக்கவும், 212 கிலோ மீட்டருக்கு பகிர்மான குழாய்கள் அமைக்கவும், பழைய பகிர்மான குழாய்களை மாற்றவும் நேற்று திட்ட பணி துவக்க விழா நடந்தது.

இதில் சூரமங்கலம் ரெட்டிப்பட்டி சாலையில் துணை பிரதான குழாய்கள் பதிக்கும் பணிகளையும், களரம்பட்டி துவக்க பள்ளி வளாகத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் அமைக்கும் பணியையும், அம்மாப்பேட்டை கீழ்நிலை தொட்டி வளாகத்தில் பகிர்மான குழாய்கள் அமைக்கும் பணிகளையும் தமிழக நெடுஞ்சாலை துறை அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

இந்த பணிகள் அனைத்தும் 18 மாத காலத்தில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும், தனி குடிநீர் திட்டம் நிறைவடைந்தால் சேலம் மாநகர் பகுதியில் நாள்தோறும் நபர் ஒருவருக்கு 135 லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் மகரபூஷணம், மேயர் சவுண்டப்பன், செம்மலை எம்பி, எம்எல்ஏக்கள் செல்வராஜ், வெங்கடாசலம், மாநகராட்சி கமிஷனர் அசோகன், துணை மேயர் நடேசன், மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் பாலசுப்பிரமணியன், செயற்பொறியாளர்கள் அசோகன், முருகானந்தம், காமராஜ், வெங்கடேஷ், மாநகர் நகர் நல அலுவலர் பொற்கொடி, மண்டல குழு தலைவர்கள் தியாகராஜன், மாதேஸ்வரன், ஜெயபிரகாஷ், சண்முகம், உதவி கமிஷனர் கள் மல்லிகா, ரமேஷ்பாபு, அரங்கநாதன், ஜெகநாதன் மற்றும் கவுன்சிலர்கள், உதவி செயற்பொறியாளர்கள், அரசு அலுவலர் கள் பலர் கலந்துகொண்டனர்.