Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிசைப்பகுதி மேம்பாட்டு திட்டப்பணி நகராட்சி தலைவர் ஆலோசனை

Print PDF

தினமலர்     23.08.2012

குடிசைப்பகுதி மேம்பாட்டு திட்டப்பணி நகராட்சி தலைவர் ஆலோசனை

தஞ்சாவூர்: தஞ்சையில் குடிசைப்பகுதி மேம்பாட்டு திட்டப்பணிகளை விரைந்து செயல்படுத்துவது குறித்து நகராட்சி தலைவர் சாவித்திரி தலைமையில் கவுன்சிலர்கள் ஆலோசனை நடத்தினர்.தஞ்சை நகராட்சி மூலம் ஒருங்கிணைந்த குடிசைப்பகுதி குடியிருப்பு மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான ஆலோசனைக்கூட்டம் தஞ்சை நகராட்சி கூட்ட அரங்கில் தலைவர் சாவித்திரி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் மணிகண்டன், ஆணையர் ஜானகி, உதவி நகரமைப்பு அலுவலர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.இதைத்தொடர்ந்து, நகராட்சி தலைவர் சாவித்திரி, ஆணையர் ஜானகி ஆகியோர் பேசியதாவது:தஞ்சை நகராட்சியில் குடிசைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தில் 1,180 பயனாளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, 480 வீடு கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

350 வீடுகள் கட்டுமான பணி நடந்து வருகிறது. மீதமுள்ள 350 பயனாளிகளுக்கு சில நடைமுறை சிக்கலால் பணி துவங்கப்படவில்லை. அதனால், பயனாளிகளை அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் நேரடியாக அணுகி குடிசைப்பகுதி குடியிருப்பு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த உதவ வேண்டும்.இவ்வாறு அவர்கள் பேசினர்.கவுன்சிலர்கள் மதியழகன், சதீஸ்குமார், பாலசுப்பிரமணியன், அருளழகன், கார்த்திகேயன், சுரேஷ்குமார், கிறிஸ்த்துவ மேரிதாஸ், அமுதா, ரம்யா, ஜெயலட்சுமி, காயத்ரி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.