Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பற்றாக்குறையாக பட்ஜெட் தாக்கல்நகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றம்

Print PDF
தினமலர்          04.03.2013

பற்றாக்குறையாக பட்ஜெட் தாக்கல்நகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றம்


துறையூர்: துறையூர் நகராட்சி கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், 33 லட்சம் ரூபாய் பற்றாக்குறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.துறையூர் நகராட்சி கூட்டம் தலைவர் முரளி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் திவ்யா, இன்ஜினியர் ரவிச்சந்திரன், கணக்காளர் ரத்தினப்பா, கவுன்சிலர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வருவாய், மூல தன வரவினம், 69 கோடி ரூபாய், வருவாய், மூலதன செலவினம், 70 கோடி ரூபாய். நிகர பற்றாக்குறை 33 லட்ச ரூபாய் என பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வரி சீராய்வு செய்ய வேண்டும். இவ்வாண்டு வரிசீராய்வு செய்தால், நிதி பற்றாக்குறை சரியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. அரசு வழிகாட்டுதலின்படியும், நகராட்சி கமிஷனர், தலைவர் முயற்சியில், நகராட்சி வருவாயிலிருந்து வரும் நிதியாண்டுக்கு, 25 சதவீத தொகையாக, 28.73 லட்ச ரூபாய்க்கு, குடிசைப்பகுதி அத்தியாவசிய தேவையான குடிநீர் ஆதாரத்தினை பெருக்க, இந்த பட்ஜெ ட்டில் முதன் முறையாக வழிவகை செய்யப்பட்டுள்ளது.மேலும் வரும் நிதியாண்டில், மூன்று கோடி ரூபாயில் புதிய அலுவலக கட்டிடம், 77 லட்ச ரூபாயில் பஸ்ஸ்டாண்ட் அபிவிருத்தி பணிகள், ஒரு கோடியே, 23 லட்ச ரூபாயில் தார்ச்சாலை, 27.50 லட்ச ரூபாயில் சிமெண்ட் சாலை, 82 லட்ச ரூபாயில், திட கழிவு மேலாண்மைக்கு, ஜே.சி.பி., மினி ஆட்டோ டம்பர் பின் வாங்கவும், தமிழ்நாடு நகர்புற சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ், ஒரு கோடியே, 50 லட்ச ரூபாயில் தார்ச்சாலை பணிகள் செய்ய, பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் அனைவருக்கும் சீராக வழங்க, ஒரு லட்சம் கொள்ளவு கொண்ட, மூன்று மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள், ஆறு கி.மீ.,க்கு புதிய பைப் லைன் விஸ்தரிப்பு, 16 கி.மீ.,க்கு பழைய பைப் லைன் மாற்றியமைக்கும் பணிக்காக, குடிநீர் வடிகால் வாரியம் மூலம், 14.60 கோடி ரூபாயில் பணிகள் துவங்கப்பட உள்ளது. துறையூர் மக்கள் சுகாதாரத்துடன் வாழ, பாதாள சாக்கடை திட்டம் அமைக்க, குடிநீர் வடிகால் வாரியம் மூலம், 41.80 கோடி ரூபாயில் மதிப்பீடு தயார் செய்து, அரசுக்கு கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பட்ஜெட் மற்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Last Updated on Monday, 04 March 2013 11:16