Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நாளை மறுநாள் மாநகராட்சி பட்ஜெட் சொத்து, தொழில் வரி உயர வாய்ப்பு மலிவு விலை உணவகங்கள் திறக்கப்படுமா?

Print PDF
தினகரன்         09.03.2013

நாளை மறுநாள் மாநகராட்சி பட்ஜெட் சொத்து, தொழில் வரி உயர வாய்ப்பு மலிவு விலை உணவகங்கள் திறக்கப்படுமா?

மதுரை: திங்கள்கிழமை தாக்கல் செய்யப்ப டும் மதுரை மாநகராட்சி பட்ஜெட்டில் ஆண்டு வருவாயை ஆயிரம் கோடி க்கு மேல் உயர்த்த திட்டமிட்டு இருப்பதால் சொத்து, தொழில் வரிகள் உயர வாய்ப்புள்ளது. சென் னையை போல் மதுரையி லும் மலிவு விலை உணவகங் கள் திறக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மதுரை மாநகராட்சி 2013-14ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மேயர் ராஜன்செல்லப்பா நாளை மறுநாள் தாக்கல் செய்கிறார். இதில் மாநகராட்சியின் ஆண்டு வரு வாயை ரூ.747 கோடியில் இருந்து 1000 கோடிக்கு மேல் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே சொத்துவரி, தொழில்வரிகள் உயர்த்தப்படலாம். ஆன்லைன் மூலம் கட்டிட பிளான் அனுமதி அளிக்கும் முறை அமலாகி இருப்பதால் இதற்கான கட்டணமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கோவை மாநகராட்சியில் மார்க்கெட், டூவீலர் ஸ்டாண்ட், நவீன கழிப்பிடங்களின் ஏலத்தில் இ டெண்டர் அனுமதிக்கப்பட்டதால், ரூ.70கோடியாக இருந்த ஏல வருவாய் ரூ.200 கோடிக்கு மேல் உயர்ந்தது. அதேபோல் மதுரையிலும் ஏலத்தில் இ டெண்டர் அனுமதிக்க வேண்டும் என யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1கோடியில் புனரமைக்கப்பட்ட ராணி மங்கம்மாள் சத்திரவிடுதி தனியார் மயமாக்கப்படலாம்.

சென்னையில் மாநகரா ட்சி சார்பில் மலிவு விலை உணவகங்கள் திறக்கப்பட்டு, இட்லி ரூ. 1, சாம்பார் சாதம் ரூ.5, தயிர்சாதம் ரூ. 3 வீதம் விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் மதுரையில் உணவகங்கள் திறக்க அறிவிப்பு வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைகளில் போதிய டாக்டர்கள், வசதிகள் இல்லை. ஏற்கனவே இருந்த மருத்துவ உபகரணங்கள் பழுதடைந்து கிடக்கின்றன. எனவே மருத்துவமனைகளை மேம்படுத்த வேண்டும். கொசுத்தொல்லை, நாய் தொல்லை அதிகரித்துள்ளது.

இதற்கு தீர்வு காண வேண்டும். மாநகராட்சி விரிவாக்க பகுதிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவது முக்கியம் என கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.