Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருச்சி மாநகராட்சியில் திறன் மேம்பாட்டு தொழில் பயிற்சிக்கான பயனாளிகள் தேர்வு முகாம் மேயர் ஜெயா தொடங்கி வைத்தார்

Print PDF

தினத்தந்தி               23.03.2013

திருச்சி மாநகராட்சியில் திறன் மேம்பாட்டு தொழில் பயிற்சிக்கான பயனாளிகள் தேர்வு முகாம் மேயர் ஜெயா தொடங்கி வைத்தார்

திருச்சி மாநகராட்சியில் திறன் மேம்பாட்டு தொழில்பயிற்சிக்கான பயனாளிகள் தேர்வு முகாமை மேயர் ஜெயா தொடங்கி வைத்தார்.

திறன் மேம்பாட்டு பயிற்சி

 திருச்சி மாநகராட்சி எல்லைக்குள் வசிக்கும் ஏழை மக்களுக்கான வேலைவாய்ப்புடன் கூடிய இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் திட்டத்தின் கீழ் 2013–14ம் ஆண்டில் 2 ஆயிரம் பயனாளிகளுக்கு இலவச பயிற்சி அளிக்க அரசால் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கான மானிய தொகை மத்திய மற்றும் மாநில அரசுகள் மூலம் வழங்கப்பட உள்ளது. 2012–13ம் ஆண்டில் 1140 பேர் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி வழங்கப்பட்டு உள்ளது.

என்னென்ன தொழில்கள்?

 இதுதொடர்பாக நகராட்சி நிர்வாக ஆணையரால் 2012–2013 மற்றும் 2014 வரை உள்ள 3 ஆண்டுகளுக்கு பயிற்சி அளிக்கக்கூடிய வகையில் நிறுவனங்கள் மற்றும் பயிற்சி கட்டணங்கள் நிர்ணயம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நவீன தையல் கலை பயிற்சி, தையல் பயிற்சி, சமையல் கலை, நர்சிங், தகவல் தொழில் நுட்பம், கட்டுமானம், பழுது நீக்கம், கணினி, பிளம்பிங், வெல்டிங் மற்றும் எலக்ட்ரீசியன் போன்ற 13 வகையான தொழில் நுட்பத்துடன் கூடிய பயிற்சிகள் அளிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது பயனாளிகள் தேர்வு முகாம் இன்றும் (சனிக்கிழமை) தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேயர் தொடங்கி வைத்தார்

 திருச்சி மாநகராட்சி பகுதியில் வறுமை கோட்டுக்கு கீழ் வசிக்கும் குடும்பங்களில் இருந்து தகுதி பெற்ற பயனாளிகளை தேர்வு செய்ய ஏதுவாக பயனாளிகள் தேர்வு முகாம் நேற்று காலை திருச்சி மாநகராட்சி மெயின் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த முகாமை மேயர் ஜெயா தொடங்கி வைத்து பேசினார். இந்த முகாமிற்கு மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளில் இருந்தும் பயனாளிகள் கலந்து கொள்வதற்கும், பயனாளிகளுக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பம் பெறுவதற்கும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. ஆகவே மாநகராட்சி பகுதியில் உள்ள குறைந்த பட்சம் 8–ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்த 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாநகராட்சி ஆணையர் ப.தண்டபாணி பயனாளிகள் தேர்வு முகாமில் தெரிவித்தார்.

பயனாளிகள் தேர்வு முகாம் தொடக்க நிகழ்ச்சியில் கோட்டத்தலைவர்கள் மனோகரன், எம்.லதா, ஞானசேகரன் நகர் நல அலுவலர் (பொ) ராஜேஸ்வரி, உதவி ஆணையர்கள் தனபாலன், தயாநிதி, கே.ராஜம்மா, உதவி செயற்பொறியாளர்கள் நாகேஷ், சிவபாதம் ஜெயக்குமார், சமுதாய அமைப்பாளர் பத்மா மற்றும் பயிற்சி நிறுவன நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Last Updated on Monday, 25 March 2013 10:15