Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்க கம்ப்யூட்டர் வசதி

Print PDF
தினகரன்     27.03.2013

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்க கம்ப்யூட்டர் வசதி


சேலம்: ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறப்பு இறப்பு சான்றிதழ்களை உடனடியாக கொடுப்பதற்கு கம்ப்யூட்டர் வசதி செய்து தரவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், அரசு ஊழியர் சங்க கூட்ட அரங்கில் நடந்தது. மாவட்ட தலைவர் பாலாஜி தலைமை வகித்தார். சண்முகம் வரவேற்றார். மாநிலச் செயலாளர் குப்புசாமி துவக்க உரையாற்றினார். பொதுச் செயலாளர் லட்சுமி நாராயணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

கூட்டத்தில், ‘சுகாதார ஆய்வாளர் பயிற்சி முடித்துள்ள அனைவரையும் காலியாக உள்ள இடங்களில் பணியமர்த்த வேண்டும். பிறப்பு இறப்பு சான்றிதழ்களை பதிவு செய்து உடனுக்குடன் வழங்கும் வகையில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் கணினி மற்றும் அதற்கு தேவையான உபகரணங்களை தமிழக அரசு வழங்க வேண்டும். அனைத்து துணை சுகாதார நிலையங்களுக்கும் ஒரு நிரந்த மஸ்தூர் பணியிடம் வழங்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன.

அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பெரியசாமி மற்றும் செல்வம், பன்னீர்செல்வம், லட்சுமிபதி உட்பட ஏராளமானோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.