Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வேலூர் மாநகராட்சி பட்ஜெட் நாளை தாக்கல்

Print PDF
தினத்தந்தி        09.04.2013

வேலூர் மாநகராட்சி பட்ஜெட் நாளை தாக்கல்


வேலூர் மாநகராட்சிக்கான பட்ஜெட்டை (புதன்கிழமை) நடக்கும் கூட்டத்தில், மேயர் கார்த்தியாயினி தாக்கல் செய்கிறார்.

பட்ஜெட

வேலூர் மாநகராட்சிக்கு சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், கடைவாடகை, தரை வாடகை என்று பல்வேறு இனங்கள் மூலம் வருவாய் கிடைக்கிறது. அந்த வருவாயின் மூலம் வேலூர் மக்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகள் கொடுக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மாநகராட்சிக்கு கிடைக்கும் வருவாய் எவ்வளவு, திட்டமிடப்பட்டுள்ள செலவு எவ்வளவு, முடிவில் நிதி தன்னிறைவு பெற்றுள்ளதா? அல்லது பற்றாக்குறையாக உள்ளதா? பற்றாக்குறையை ஈடுகட்ட என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையெல்லாம் கவுன்சிலர்களும், பொதுமக்களும் வெளிப்படையாக தெரிந்து கொள்ளும் வகையில் ஆண்டு தோறும் பட்ஜெட் வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பட்ஜெட் இன்று (புதன்கிழமை) தாக்கல் செய்யப்படுகிறது.

மேயர் தாக்கல்

இன்று காலை 11 மணிக்கு மாநகராட்சியின் அவசர கூட்டம் மேயர் கார்த்தியாயினி தலைமையில் நடைபெறுகிறது. கமிஷனர் ஜானகி, துணை மேயர் தருமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். கூட்டத்தில் மேயர் கார்த்தியாயினி கலந்து கொண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசுகிறார்.

கூடுதல் வரி விதிப்பு

கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் வரவு ரூ.124 கோடியே 96 லட்சம் ஆகவும், செலவு ரூ125 கோடியே 84 லட்சம் ஆகவும் இருந்தது. பற்றாக்குறை ரூ.88 லட்சம் என தாக்கல் செய்யப்பட்டது. அந்த பற்றாக்குறையை தொழில் வரி, மனைப்பிரிவுகளில் காலி மனை வரிவிதிப்பு செய்வதின் மூலமும் மற்றும் அரசிடம் இருந்து பெறப்படும் நிதி உதவி மூலமும் சீர் செய்யப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது.

ஆனால் இந்த ஆண்டு மாநகராட்சிக்கு பல்வேறு வகைகளில் அரசின் நிதி உதவி கிடைக்க இருப்பதாலும், நிலுவை வரி பாக்கியை வசூல் செய்யும் பணி திருப்தியாக இருப்பதாலும், இதுவரை வரி விதிக்கப்படாத கட்டிடங்கள் மற்றும் இதர இனங்களுக்கு புதிதாக வரிவிதிக்கப்பட உள்ளதாலும் பற்றாக்குறை பட்ஜெட்டாக இருக்காது என்றும், வேலூர் மக்களுக்கு சுமை தராத பட்ஜெட்டாக இருக்கும் என்றும் அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

குடிநீர் பிரச்சினை


கோடை காலம் நடைபெற்று வருவதால், வேலூர் மாநகராட்சி பகுதியில் குடிநீர் பிரச்சினை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் லாரி, டிராக்டர் போன்ற வாகனங்களில் குடிநீர் சப்ளை செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. அது பற்றி கமிஷனர் ஜானகியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–

வாகனங்களில் குடிநீர் சப்ளை செய்யும் பணி நிறுத்தப்படவில்லை. ஒப்பந்த காலம் முடிந்து விட்டதால் நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் வருகிற 16–ந் தேதி ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. அதே சமயம் அவசர, அத்தியாவசியம் கருதி ஏற்கனவே செய்யப்பட்ட பழைய ஒப்பந்த அடிப்படையில் வாகனங்கள் மூலம் குடிநீர் சப்ளை செய்ய ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்று வேலூர் மாநகராட்சியில் அடங்கிய 4 மண்டல அலுவலகங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் குடிநீர் பிரச்சினை உள்பட இதர தேவைகளுக்கும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அது போல அரசிடமும் நிதி உதவி கேட்கப்பட்டுள்ளது. அது பற்றியெல்லாம் இன்று வெளியிடப்படும் பட்ஜெட்டில் தெரியவரும். இவ்வாறு கமிஷனர் கூறினார்.