Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருவொற்றியூரில் 3,616 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள்: ஜெயலலிதா திறந்து வைத்தார்

Print PDF
தினமணி               07.05.2013

திருவொற்றியூரில் 3,616 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள்: ஜெயலலிதா திறந்து வைத்தார்

http://media.dinamani.com/2013/05/07/jay3.jpg/article1578633.ece/alternates/w460/jay3.jpg

சென்னை திருவொற்றியூரில் 3 ஆயிரத்து 616 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளை முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

தலைமைச் செயலகத்தில் விடியோ கான்ஃபரன்சிங் முறை மூலம், இந்தக் குடியிருப்புகளை முதல்வர் திறந்து வைத்தார்.

இது குறித்து தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

குடிசைப் பகுதிகளில் வறிய நிலையில் வாழ்ந்து வரும் குடும்பங்கள் மழை, வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் போன்ற இன்னல்களுக்கு ஆளாகாமல் நல்ல உறைவிடத்தில் சுகாதாரமான சூழ்நிலையில் வாழ தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை திருவொற்றியூரில் அகில இந்திய வானொலி நில திட்டப் பகுதியில் ரூ.139 கோடியில் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடியிருப்புகள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தக் குடியிருப்புகள் உலக வங்கி நிதியுதவியுடன் கூடிய அவசர சுனாமி மறுகுடியமர்வு திட்டம் மற்றும் மாநில நிதியுதவியுடன் தரைதளம் மற்றும் மூன்று தளங்களுடன் 113 கட்டட தொகுதிகளாகக் கட்டப்பட்டுள்ள 3 ஆயிரத்து 616 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 19 கிராமங்களிலுள்ள 1,941 பயனாளிகள், சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 15 பகுதிகளிலுள்ள 1,014 பயனாளிகள், கட்டமைப்பு விரிவாக்கத் திட்டத்தால் பாதிக்கப்பட்ட 661 பயனாளிகள் என மொத்தம் 3,616 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

திறப்பு விழா நிகழ்ச்சியில், வீட்டு வசதித் துறை அமைச்சர் வைத்திலிங்கம், தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், வீட்டுவசதித் துறை செயலாளர் பணீந்திரரெட்டி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.