Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிசை மேம்பாட்டு திட்டம் ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு

Print PDF
தினமலர்     07.05.2013

குடிசை மேம்பாட்டு திட்டம் ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு


ஓசூர்: ஓசூர் நகராட்சி குடிசைப்பகுதியில், ஒருங்கிணைந்த குடிசை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஏழை, எளிய மக்கள் வீடுகள் கட்ட ஒருங்கிணைந்த குடிசை மேம்பாட்டு திட்டத்தில், 806 பயனாளிகளுக்கு, 90 ஆயிரம் ரூபாய் வீதம், ஏழுகோடி ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

ஓசூர் நகராட்சி, 45 வார்டுகளில் குடிசைப்பகுதியில் வசிக்கும் வீடு இல்லாத ஏழை, எளியோர் கணக்கெடுக்கப்பட்டு, அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியின் கீழ் வீடுகள் கட்ட கொடுக்க ஒருங்கிணைந்த குடிசை மேம்பாட்டு திட்டம் துவங்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட பயனாளிகளுக்கு மொத்தம், 90 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. மேலும், அப்பகுதியில் தார்சாலை வசதி, பூங்கா உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நகராட்சி, 45 வார்டுகளையும் சேர்த்து மொத்தம், 806 குடிசைப்பகுதி பயனாளிகள் கணக்கெடுக்கப்பட்டு, அவர்களுக்கு வீடுகள் கட்ட, 90 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க ஆணை வழங்கப்படுகிறது.

நகராட்சி வார்டு அந்திவாடி காலனி குடிசைப்பகுதியை சேர்ந்த, 25 பயனாளிகளுக்கு நேற்று குடிசைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தில் வீடு கட்ட நிதியுதவி ஆணை பத்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கவுன்சிலர் வாசுதேவன் தலைமை வகித்தார். நகராட்சி துணைத்தலைவர் ராமு, நகரமைப்பு அலுவலர் சீனிவாசன் முன்னிலை வகித்தனர். நகராட்சி தலைவர் பாலகிருஷ்ணரெட்டி, 25 பயனாளிகளுக்கு வீடுகள் கட்ட நிதியுதவி பத்திரங்களை வழங்கி பேசினார். நகராட்சி தலைவர் பாலகிருஷ்ணரெட்டி பேசினார்.இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு, 22 ஆயிரத்து, 500 ரூபாய் வீதம் நான்கு தவணையாக நகராட்சி வழங்குகிறது. நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சுந்தரமூர்த்தி மற்றும் குடிசைப்பகுதி மேம்பாட்டு திட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.