Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய பணிகளுக்கு தமிழக அரசு ரூ.879.78 கோடி நிதி ஒதுக்கீடு சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் தகவல்

Print PDF

தினத்தந்தி               21.06.2013

மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய பணிகளுக்கு தமிழக அரசு ரூ.879.78 கோடி நிதி ஒதுக்கீடு சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் தகவல்

சென்னை பெருநகர் கழிவுநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் டாக்டர் பி.சந்தரமோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

சென்னை பெருநகர் வளர்ச்சித்திட்டம் 2012–2013–ன் கீழ் சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் வாரியம் செயல்படுத்த வேண்டிய பணிகளுக்கு தமிழக அரசு ரூ.879.78 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் அண்மையில் சென்னை மாநகராட்சியுடன் சேர்க்கப்பட்ட நொளம்பூர், காரம்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், சோழிங்கநல்லூர், காரப்பாக்கம், ராமாபுரம், நந்தம்பாக்கம், ஒக்கியம்–துரைப்பாக்கம் மற்றும் மணப்பாக்கம், ஆகிய 9 இடங்களில் முழுமையான குடிநீர் திட்டம் மற்றும் கத்திவாக்கம், சோழிங்கநல்லூர், காரப்பாக்கம், ராமாபுரம் ஆகிய 4 இடங்களில் கழிவுநீர் அகற்றும் திட்டங்களுக்காக ரூ452.77 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளுக்காக ஒப்பந்தபுள்ளிகள் கோரப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. திட்டப் பணிகள் 24 மாதங்களில் செய்து முடிக்கப்படும். இத்திட்டங்களின் வாயிலாக மொத்தமாக 7 ஆயிரத்து 527 குடிநீர் வீட்டு இணைப்புகள் வழங்கப்படும். குடிநீர் இணைப்புகள் வழங்கப்படுவதன் மூலம் 49 ஆயிரத்து 230 மக்கள் பயன் பெறுவார்கள்.

இவ்வாறு டாக்டர் பி.சந்திரமோகன் கூறியுள்ளார்.