Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெருந்துறை பேரூராட்சியில் ரூ70 லட்சம் வளர்ச்சிப்பணி அமைச்சர் துவக்கி வைத்தார்

Print PDF

தினகரன்              02.09.2013

பெருந்துறை பேரூராட்சியில் ரூ70 லட்சம் வளர்ச்சிப்பணி அமைச்சர் துவக்கி வைத்தார்

ஈரோடு, : பெருந்துறை பேரூராட்சி பகுதிகளில் பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது. இதில் வருவாய்த்துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் பணியை தொடங்கி வைத்தார். பெருந்துறை பேரூராட்சி பகுதியில் சென்னிவலசு பகுதியில் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக அங்கன்வாடி கட்டிடம், கொங்கு கல்லூரி ரோடு பீரங்கிமேடு, ஸ்ரீநகர் பூங்கா ஆகிய பகுதிகளில் 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆழ்குழாய் கிணறு அமைத்தல், ஊராட்சி ஒன்றிய தெற்குபள்ளியில் 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக ஆழ்குழாய் கிணறு அமைக்கப்படவுள்ளது.

பெரிய வேட்டுவபாளையத்தில் 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், தாளக்கரைப்புதூரில் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், கோட்டைமேடு காலனி பகுதியில் 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், அக்ரஹாரவீதி விநாயகர் கோயில் அருகில் 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் புதியதாக ஆழ்குழாய் கிணறு அமைக்கப்படவுள்ளது.

குன்னத்தூர் ரோட்டில் கள்ளியம்புதூர் பிரிவு, பழைய பஸ் ஸ்டாண்ட் கிழக்கு பகுதி ஆகிய இடங்களில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பழைய குடிநீர் குழாயினை மாற்றி புதியதாக குடிநீர் குழாய்கள் அமைக்கப்படவுள்ளது.

தோப்புப்பாளையம் உயர்நிலைப்பள்ளியில் 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சைக்கிள்கள் நிறுத்துமிடம் கட்டப்படவுள்ளது. பெருந்துறை பேரூராட்சி பகுதியில் 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 10 புதிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்கான பூமி பூஜைக்கு கலெக்டர் சண்முகம் தலைமை தாங்கினார். வருவாய்த்துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தலைமை தாங்கி இதற்கான பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ், பெருந்துறை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பெரியசாமி, பேரூராட்சி தலைவர்கள் பெருந்துறை சரஸ்வதி, கருமாண்டிசெல்லிபாளையம் ஜானகி, பெருந்துறை பேரூராட்சி செயல் அலுவலர் தன்னாசி, இளநிலை பொறியாளர் தியாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.