Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஒவ்வொரு மாணவனும் ஒரு மரம் நடவேண்டும்

Print PDF

தினகரன்             26.09.2013

ஒவ்வொரு மாணவனும் ஒரு மரம் நடவேண்டும்

அன்னூர்: மரம் நடும் விழாவில் பேசிய சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதாமோகன், ஒவ்வொரு மாணவனும் ஒரு மரம் நடவேண்டும் என வலியுறுத்தினார்.

அன்னூர் பேரூராட்சி மற்றும் சிறுதுளி அமைப்பு சார்பில் பசுமை மரம் நடும் விழா சொக்கம்பாளையத்தில் நடைபெற்றது. பேரூராட்சி தலைவி ராணிசெளந்திரராஜன் தலைமை தாங்கினார்.

இதில் சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதாமோகன் பேசியதாவது: நாம் இயற்¬ கயை பேணிக்காத்த £ல் அது நம்மை பாதுகாக்கும். நாம் இயற்கையை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தத £ல், அது நம்மை நோக்கி பத்து அடி எடுத்துவைக்கும். அப்துல்கலாமால் துவக்கப்பட்ட பசுமை பஞ்சாயத்து திட்டம் மூலம் ஊராட்சிகளுடன் சிறுதுளி நிறுவனம் இணை ந்து மரம் நடுவிழாக்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு மாணவனும் ஒரு மரம் நடவேண்டும்.

சிறுதுளி சார்பில் பசுமை பஞ்சாயத்து திட்டம் பேரூர் பேரூராட்சி அரசூர், மயிலம்பட்டி ஊராட்சிகளில் செயல்படுத்தப்படுகிறது. எல்லோராலும் குளம், குட்டை களை தூர்வார முடியாது. ஆனால் ஒரு மரமாவது நடலாம்.

அனைத்து ஊர்களிலும் மக்கள் தொகைக்கு இணையாக மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும். ஏன் என்றால் ஒவ்வொரு மரமும் ஆக்சிஜன் தரும் தொழிற் சாலை. இவ்வாறு வனிதா மோகன் பேசினார்.

விழாவில் சிறுதுளி செயலாளர் மயில்சாமி, அன்னூர் பேரூராட்சி துணை தலைவர் விஜயகுமார்,பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் திருஞா னம், அன்னூர் பேரூராட்சி செயல்அலுவலர் கல்யாணசுந்தரம், தேவராஜ், மாவட்ட கவுன்சிலர் அமுல்கந்தசாமி, கவுன்சிலர்கள் பூமணிதங்கராஜ், சின்னச்சாமி, கனக ராஜ், திருமூர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.