Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி பகுதிகளில் குப்பைகள் தேங்கக் கூடாது புதிய கமிஷனர் கிரண்குராலா கண்டிப்பு

Print PDF

தினத்தந்தி           26.11.2013

மாநகராட்சி பகுதிகளில் குப்பைகள் தேங்கக் கூடாது புதிய கமிஷனர் கிரண்குராலா கண்டிப்பு

மாநகராட்சி பகுதிகளில் குப்பைகள் தேங்கக் கூடாது என்று புதிய கமிஷனர் கிரண்குராலா கண்டிப்புடன் கூறினார்.

வரித்தொகை

மதுரை மாநகராட்டியின் புதிய கமிஷனராக கிரண்குராலா பொறுபேற்றுள்ளார். அவர் நேற்று மண்டலம்–4 அலுவலகத்தில் ஆய்வு பணி மேற்கொண்டார். நேற்று காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த ஆய்வு பணி மதியம் 2.30 மணி வரை நடந்தது. ஆய்வின் போது அவர் தகவல் மையம், வருவாய் பிரிவு, பொறியியல் பிரிவு, கம்ப்யூட்டர் பிரிவு போன்றவற்றை பார்வையிட்டார்.

மேலும் வரி வசூலில் தற்போதைய நிலை மற்றும் வசூலிக்க வேண்டிய நிலுவை தொகை குறித்து கேட்டறிந்தார். மண்டல அலுவலகங்களுக்கு வரும் மக்களிடம் அவர்களின் குறைகளை கேட்டு உடனடியாக தீர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதே போல் அலுவலகத்திற்கு வரும் தபால்கள் மற்றும் கோப்புகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். கமிஷனரின் இந்த ஆய்வின் போது மண்டல உதவி கமிஷனர் தேவதாஸ் உடன் இருந்தார்.

ஆய்வு கூட்டம்

இந்த ஆய்விற்கு பின்னர், மாநகராட்சி அண்ணாமாளிகையில் துப்புரவு பணி குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கமிஷனர் கிரண்குராலா தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

மதுரை மாநகராட்யின் முக்கிய பணி துப்பரவு பணியாகும். எனவே அனைத்து சுகாதார ஆய்வாளர்களும் வார்டு வாரியாக துப்பரவு பணியாளர்கள் வருகை, குப்பை வாகனங்கள், குப்பை தொட்டிகள் எண்ணிக்கை, குப்பை அகற்றுதல், ஆகிய விவரக்ன்களை அந்தந்த மண்டல ஆய்வாளருக்கு தினந்தோறும் அறிக்கையாக கொடுக்க வேண்டும். பின்னர் அந்த அறிக்கையை எனக்கு தெரிவிக்க வேண்டும்.

கண்டிப்பு

மாநகராட்சி பகுதிகளில் உள்ள டீ மற்றும் சாலையோர கடைகள் குப்பைகள் மற்றும் டீ கப்புகளை குப்பை தொட்டி தவிர கண்ட இடங்களில் போட கூடாது என முதலில் எச்சரிக்கை கொடுக்க வேண்டும். மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். ஆற்றுக்கரையில் தீவிர துப்புரவுப்பணி மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் கமிஷனர் கிரண்குராலா, கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் மாநகராட்சி பகுதிகளில் குப்பைகள் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பை தேங்கி நிற்கிறது என்ற புகார் இருக்கக் கூடாது. இதனை தவறாது கடைபிடிக்க வேண்டும் என்று கண்டிப்புடன் கூறினார். கூட்டத்தில் துணை கமிஷனர் லீலா, நகர் பொறியாளர் மதுரம், நகர் நல அலுவலர் யசோதாமணி உள்பட அதிகாரிகளும், துப்புரவு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.