Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி 2-வது மண்டலத்தில் ரூ.83 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள் மண்டல கூட்டத்தில் தலைவர் ஜான் தகவல்

Print PDF

தினத்தந்தி                30.01.2014

மாநகராட்சி 2-வது மண்டலத்தில் ரூ.83 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள் மண்டல கூட்டத்தில் தலைவர் ஜான் தகவல்

திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டலத்தில் ரூ.83 லட்சம் மதிப்பீட் டில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட உள் ளது என்று மண்டல கூட்டத்தில் தலைவர் ஜான் கூறினார்.

மண்டல கூட்டம்

திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டல கூட்டம் தொட்டிபாளையம் மண்டல கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மண்டல தலை வர் ஜான் தலைமை தாங்கி னார். மாநகராட்சி உதவி கமிஷனர் வாசுகுமார் முன் னிலை வகித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்கள் வார்டு பிரச் சினை குறித்து கூறிய தாவது:-

சபரீஸ்வரன்:- குமாரசாமி நகரில் சிமெண்ட் ரோடு போட வேண்டும். பாதாள சாக்கடை கால்வாயை சீரமைக்க வேண்டும். கங்கா நகரில் உள்ள ரேஷன் கடை வீதி, கல்யாண மண்டப வீதியில் சாக்கடை கால்வாய் அமைத்து தார்சாலை போட வேண்டும். கேத்தம்பாளையம் அரசு பள்ளியில் மாணவ- மாணவி களுக்கு கழிப்பிடம் கட்டித்தர வேண்டும்.

கால்வாயில் அடைப்பு

கனகராஜ்:- எனது வார்டில் உள்ள மயான பகுதியில் தனியார் மற்றும் மாநகராட்சி வாகனங்கள் மூலம் குப்பை கொட்டுவதை நிறுத்த வேண் டும். லக்கி நகரில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற் பட்டு சாக்கடை நீர் ரோட்டில் செல்கிறது. அடைப்பை சரி செய்ய வேண்டும். பிச்சம்பாளையம் புதூர் அரசு பள்ளியில் உள்ள கழிப்பிடம் மோசமாக உள்ளது. இதை பராமரிக்க வேண்டும்.

விஜயகுமார்:- கண்ண பிரான்நகர், அவினாசிநகர், சதாசிவம் நகரில் 6 மாதத்திற்கு முன்பு ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டும் இன்னும் மின் இணைப்பு கொடுக்கப் படவில்லை மின் இணைப்பு கொடுத்து உப்பு தண்ணீரை உடனடியாக வினியோகம் செய்ய வேண்டும். போயம் பாளையம் பகுதியில் இடம் (சைட்) பிரித்து விற்பவர்கள் மாநகராட்சியிடம் தார் சாலையை ஒப்படைக்க வில்லை. இந்த நிலையில் அங்கு கட்டிடம் கட்டியவர் களுக்கு உரிமம் வழங்கப்பட்டு வரி போடப்பட்டுள்ளது. அதே சமயம் தார்சாலை ஒப்படைத்த பகுதி மக்கள் உரிமம் பெற முறைப்படி கோரியும் அனுமதி வழங்கப் படவில்லை.

மின் இணைப்பு

கலைவாணி:- வாவிபாளை யம் தெற்கு பகுதியில் உள்ள அரிஜன காலனி பகுதியில் சாக்கடை கால்வாய் கட்டித் தர வேண்டும். இந்த பகுதி களில் கடந்த 6 மாதமாக 2-வது திட்ட குடிநீர் வருவ தில்லை. குருவாயூரப்பன் நகர், சேடர்பாளையத்தில் ஆழ்குழாய் கிணறு போடப் பட்டும் மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை.

அமுதா:- எம்.ஜி.ஆர். காலனி, சத்யா காலனி 7-வது வீதியில் சாக்கடை கழிவு நீர் நடுரோட்டில் செல்வதால் துர்நாற்றம் வீசுகிறது. ஐஸ் வர்யா நகர் எம்.ஜி.ஆர்.நகரில் குறைந்த அழுத்த மின்சாரம் வருகிறது. அப்பகுதிக்கு டிரான்ஸ்பார்ம் அமைத்து தர வேண்டும்.

உமா மகேஸ்வரி:- கொசு மருந்து அடிக்க வாரா வாரம் 2 பேர் தான் வருகிறார்கள். கூடுதலாக ஆட்கள் அனுப்ப வேண்டும். கவுன்சிலர்களின் விவாதத்திற்கு பதில் அளித்து மண்டல தலைவர் ஜான் பேசியதாவது:-

194 தீர்மானங்கள்

வார்டு முழுவதும் அனைத்து ஆட்களையும் வரவழைத்து கொசு மருந்து அடிக்கப்படும். தொடர்ந்து 15 வார்டுகளி லும் இதே முறை பின்பற்றப்படும். 18-வது வார்டு தி.மு.க. வார்டு. பெரிய வார்டு, அந்த வார்டுக்கு மட்டும் ரூ.3 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கவுன்சிலர் கள் கூறிய அனைத்து பிரச்சினைகளும் அடுத்த கூட்டத்திற்குள் சரி செய்ய நட வடிக்கை எடுக்கப் படும். 194 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் ரூ.83 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. 2-வது மண்டலத்தில் பில் கலெக்டராக பணிபுரிந்து வந்த அருண் வரி வசூலில் சுணக்கம் காட்டியதால் 10 நாட்களுக்கு முன்பு தற்காலிக பணி நீக்கம் செய் யப்பட்டுள்ளார்.

இவ்வாறு மண்டல தலைவர் ஜான் பேசினார்.