Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வீட்டு வசதி திட்டங்களுக்கு ரூ. 890 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் ஜெயசந்திரா

Print PDF

தினமணி             12.02.2014

வீட்டு வசதி திட்டங்களுக்கு  ரூ. 890 கோடி ஒதுக்கீடு:  அமைச்சர் ஜெயசந்திரா

கர்நாடக வீட்டு வசதி திட்டங்களுக்கு ரூ. 890 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில சட்டத் துறை அமைச்சர் டி.பி.ஜெயசந்திரா தெரிவித்தார்.

பெங்களூரு காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சித் தொண்டர்களிடம் செவ்வாய்க்கிழமை குறைகளை கேட்டறிந்த பிறகு, செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகûளை முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. 

முந்தைய பாஜக அரசு, வளர்ச்சித் திட்டங்களை அறிவித்துவிட்டு அதற்கு போதிய நிதி ஒதுக்கவில்லை. 

இந்த நிலையில், காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ற பிறகு வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி வருகிறது.

தேசிய அளவில் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டாலும், வருவாய் பெருக்குவதில் கர்நாடக அரசு பின்தங்கவில்லை. 

விவசாயிகள் கடன் தள்ளுபடி திட்டத்திற்கு முந்தைய பாஜக அரசு ரூ. 900 கோடி ஒதுக்கியது. மீதமுள்ள ரூ. 3 ஆயிரம் கோடியை காங்கிரஸ் அரசு ஒதுக்கியது. 

வீட்டு வசதி திட்டங்களுக்கு ரூ. 890 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. முந்தைய பாஜக அரசு, பொதுப் பணித் துறையில் வைத்திருந்த ரூ. 280 கோடி பாக்கியை எங்கள் அரசு அளித்துள்ளது.
 தும்கூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவிக்க அனைவருக்கும் உரிமையுள்ளது. ஆனால், யாருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும்.

மூடநம்பிக்கை தடுப்பு சட்ட மசோதா மூடநம்பிக்கை தடுப்பு சட்ட மசோதா தொடர்பாக குறித்து அரசு இன்னும் யோசிக்கவில்லை. 

மகாராஷ்டிரத்தில் அமல்படுத்தியுள்ள மூடநம்பிக்கை தடை சட்ட மசோதாவை தொடர்பான சாதக, பாதகங்களை ஆராய்ந்து, நம்பிக்கை, மதம், மனித உரிமை ஆகியவற்றுக்கு பாதகமில்லாமல் புதிய சட்டத்தை உருவாக்கப்படும் என்றார் அவர்.