Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அனுமதியற்ற குடிநீர் குழாய் இணைப்புகள் துண்டிக்கப்படும்

Print PDF

 தினமணி       26.09.2014

அனுமதியற்ற குடிநீர் குழாய் இணைப்புகள் துண்டிக்கப்படும்

மதுரை மாநகராட்சி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக கட்டடங்களில் முழு ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும், அனுமதியற்ற குழாய் இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்படும் எனவும், மாநகராட்சி ஆணையர் சி.கதிரவன் தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா தலைமையில், ஆணையர் சி.கதிரவன், துணை மேயர் திரவியம் ஆகியோர் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், தெற்கு மண்டலத் தலைவர் பெ.சாலைமுத்து பேசுகையில், அணையில் போதிய தண்ணீர் இருக்கிறது. பிற திட்டங்கள் மற்றும் முதல்வரின் சிறப்பு நிதி ஒதுக்கீட்டின் மூலம் மாநகர மக்களுக்கு தண்ணீர் விநியோகத்துக்கு வாய்ப்புள்ளது. ஆனால், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், வணிக கட்டங்கள், உணவகங்கள் போன்றவற்றில் எண்ணற்ற அனுமதியற்ற குழாய் இணைப்புகள் இருக்கின்றன. இதனால், ஏழை, எளிய மக்களுக்கு கிடைக்க வேண்டிய குடிநீர் வணிக நோக்கத்திற்காக அளவுக்கு அதிகமாக திருப்பி விடப்பட்டுள்ளது. இந்த அனுமதியற்ற குழாய் இணைப்புகளை துண்டித்தால் மட்டுமே தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடியும். அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு லாரிகள் மூலம் மட்டுமே தேவைக்கு ஏற்ப தண்ணீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,என்றார்.

மாமன்ற உறுப்பினர் விஜயராகவன் பேசுகையில், அடுக்குமாடி குடியிருப்புகள், உணவகங்களில் மட்டும் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அனுமதியற்ற குழாய் இணைப்புகள் இருக்கின்றன. இவற்றின் மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.6 கோடி வருவாய் இழப்பும் ஏற்பட்டு வுருகிறது. இந்த குழாய் இணைப்புகளை முறைப்படுத்தினால், மாநகராட்சிக்கு வருவாயும் கிடைக்கும், அனுமதியற்ற குழாய்களையும் துண்டிக்க முடியும்.

அனைத்துப் பகுதிகளுக்கும் தாராளமாக தண்ணீர் கிடைக்கும், என்றார்.

இதற்கு பதிலளித்து மாநகராட்சி ஆணையர் சி.கதிரவன் பேசுகையில், அடுக்குமாடி குடியிருப்புகள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள், வணிக கட்டடங்களில் 100 சதவீத ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், கண்டறியப்படும் அனுமதியற்ற குழாய் இணைப்புகள் அனைத்தும் உடனடியாக துண்டிக்கப்படும்.

அனுமதியற்ற குழாய் இணைப்புகள் குறித்து விவரம் அறிந்தவர்கள் தகவல் தெரிவித்தால், அவற்றின் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

மருத்துவமனையுடன் மருந்தகங்கள் இணைப்பு: மதுரை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைகள், மருந்தகங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் பற்றாக்குறை இருந்து வருகிறது.

இந்நிலையில், பழங்காநத்தம் மருந்தகத்துக்கு ஒதுக்கப்பட்ட மருத்துவர் உள்ளிட்ட 5 பணியாளர்களுக்கு ஒரு மருந்தாளுநர் மட்டுமே பணியில் இருக்கிறார். கீழ்மதுரை மருந்தகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மருத்துவர் உள்ளிட்ட 5 பணியாளர்களுக்கு மருத்துவ அலுவலர், மருந்தாளுர் ஆகிய 2 பேர் மட்டுமே பணியில் இருக்கின்றனர்.

அதேபோன்று பொன்னகரம் மருந்தகத்துக்கான மருத்துவர் உள்ளிட்ட 6 பணியாளர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், ஆண் செவிலியர் ஒருவரும், காவலர் ஒருவர் மட்டுமே பணியில் இருக்கின்றனர். இதனால், இந்த 3 மருந்தகங்களும் முறையாக செயல்படவில்லை எனற புகாரும் எழுந்துள்ளது.

இதை தொடர்ந்து, பழங்காநத்தம் மருந்தகத்தை பழங்காநத்தம் மகப்பேறு மருத்துவமனையுடனும், கீழ்மதுரை மருந்தகத்தை கென்னடி மகப்பேறு மருத்துவமனையுடனும், பொன்னகரம் மருந்தகத்தை லேடி வில்லிங்டன் மகப்பேறு மருத்துவமனையுடன் இணைக்கவும் மாநகராட்சி மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 3 மருந்தக ஊழியர்களும் அந்தந்த மகப்பேறு மருத்துவமனைகளில் இணைக்கப்பட்டு பணியாற்றுவர்.