Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி மகளிர் பள்ளியில் நாப்கின் எரிக்கும் நவீன இயந்திரம்

Print PDF

தினமணி      22.01.2015

மாநகராட்சி மகளிர் பள்ளியில் நாப்கின் எரிக்கும் நவீன இயந்திரம்

மதுரை, ஜன.20:    மதுரை மாநகராட்சி காக்கைப்பாடினியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மாணவியர் உபயோகிக்கும் நாப்கின்களை எரிக்கும் நவீன இயந்திரத்தை

செவ்வாய்க்கிழமை மேயர் விவி ராஜன்செல்லப்பா இயக்கிவைத்தார்.

தமிழகத்திலேயே மதுரை மாநகராட்சி பள்ளியில் முதல்முறையாக இந்த இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் திட்டத்தின் கீழ் மதுரை மாநகராட்சி பள்ளியில் பயிலும்

மாணவிகள் உபயோகிக்கும் துடைப்பக்குட்டைகளை (நாப்கின்) சுகாதாரமான முறையில் அழிக்கும் இயந்திரம் காக்கைப்பாடினியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில்

அமைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தை இயக்கி வைக்கும் விழா செவ்வாய்க்கிழமை பள்ளி வளாகத்தில் மாநகராட்சி ஆணையாளர் சி.கதிரவன் தலைமையில்

நடைபெற்றது. மேயர் விவி ராஜன்செல்லப்பா இயந்திரத்தை இயக்கி வைத்து பேசியது: மதுரை மாநகராட்சியில் பயிலும் மாணவியரின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு

இந்த இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே முதல்முறையாக இப்பள்ளியில், நாப்கின்களை சுகாதாரமான முறையில் அழிக்கும் வகையில் இந்த இயந்திரம்

வைக்கப்பட்டுள்ளது.

ரூ.9.90 லட்சம் மதிப்பீட்டில் 9 பெரிய நாப்கின் டிஸ்போஸரும், 4 சிறிய நாப்கின் டிஸ்போஸரும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. காக்கைப்பாடினியார் மகளிர்

மேல்நிலைப்பள்ளியில் பெரிய இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று  ஈவெரா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பெரிய டிஸ்போஸரும், பொன்முடியார் மகளிர் மேல்நிலைப்பள்ளி, மணிமேகலை மேல்நிலைப்பள்ளியில் சிறிய

இயந்திரமும் அமைக்கப்படும். தொடர்ந்து மற்ற மாநகராட்சி பள்ளிகளிலும் மாணவியரின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு இந்த நவீன இயந்திரம் வைக்கப்படும்.

 மேலும், மாநகராட்சி பள்ளிகளில் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவியர் தமிழகத்தில் முதல் மதிப்பெண்களை பெறும் வகையில், சனிக்கிழமை தோறும்

சிறப்பு ஊக்குவிப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இப்பயிற்சியில் ஈடுபடும் ஆயிரம் மாணவ, மாணவியருக்கு ஊட்டச்சத்து மிக்க தானியப்பயறு வகைகள்

வழங்கப்படுகின்றன என்றார்.

இவ்விழாவில் நகர்நல அலுவலர் சண்முகசுந்தரம், கல்வி அலுவலர் ராஜேந்திரன், பிஆர்ஓ சித்திரவேல், காக்கைப்பாடினியார் மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை

எழிலரசி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.