Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வீடு கட்ட மானிய வட்டியில் கடன் நகர்புற ஏழை மக்களுக்கு வாய்ப்பு

Print PDF

தினமலர் 20.02.2010

வீடு கட்ட மானிய வட்டியில் கடன் நகர்புற ஏழை மக்களுக்கு வாய்ப்பு

கரூர்: கரூர் மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்ட அறிக்கை: நகர்ப்புற ஏழை மக்களுக்கு மானிய வட்டியில் வீடு கட்ட கடன் உதவி திட்டத்தில் வீடு கட்டவோ, வாங்கவோ விண்ணப்பம் அளிக்கலாம். இத்திட்டத்தில் நகராட்சி, டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் வசிக்கும் மாத வருமானம் மூவாயிரத்து 300 ரூபாய் வரை பெறும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினரும், மாதம் வருமானம் மூவாயிரத்து 301 முதல் ஏழாயிரத்து 300 ரூபாய் வரை பெறும் நடுத்தர ருமான பிரிவினரும் விண்ணப்பிக்கலாம். பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு ஒரு லட்சம் ரூபாய், நடுத்தர வருமான பிரிவினருக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடனாக வழங்கப்படும். கடன் தொகை 15 முதல் 20 ஆண்டு கால இடைவெளியில் திருப்பி செலுத்த வேண்டும். தேசிய வங்கிகள் மூலம் கடன் பெற்று தரப்படும். கடன் தொகைக்கு ஏற்பட வழக்கமான வட்டி வசூலிக்கப்படும். பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்காக கட்டப்படும் வீடுகள் குறைந்த பட்சம் 25 சதுர மீட்டர் பரப்பளவு இருக்க வேண்டும். நடுத்தர வருமான பிரிவினருக்காக கட்டப்படும் வீடுகள் குறைந்த பட்சம் 40 சதுர மீட்டர் பரப்பளவு இருக்க வேண்டும். கடன் பெறுபவர் தன்னுடைய பெயரிலோ அல்லது மனைவியின் பெயரிலோ சொந்தமான வீடு இல்லாதவராக இருக்க வேண்டும். சொந்தமான நிலம் வைத்து இருப்பவர் அதற்குரிய பட்டா உரிமை பெற்றிருக்க வேண்டும். கடன் பெறுவதற்கு தேவையான விண்ணப்பம் திருச்சி வீட்டுவசதி பிரிவு அலுவலகம் அல்லது கரூர் சணப்பிரட்டி வடக்கு காந்திகிராமம் அரசு அலுவலர் வாடகை குடியிருப்பு பிரி வு அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். விபரங்களுக்கு திருச்சி செயற்பொறியாளர் 0431 - 242 0614, கரூர் இளநிலை பொறியாளர் 98943 54620 ஃபோன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

Last Updated on Saturday, 20 February 2010 06:34