Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ. 6.35 கோடியில் வளர்ச்சிப் பணிகள்

Print PDF

தினமணி 20.07.2009

ரூ. 6.35 கோடியில் வளர்ச்சிப் பணிகள்

அம்பாசமுத்திரம், ஜூலை 18: அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதியில் ரூ. 6.35 கோடியில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப் பணிகளை சனிக்கிழமை பார்வையிட்ட பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன், பணிகளை விரைவாக நிறைவேற்றுமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

அம்பாசமுத்திரத்தில் ரூ. 42 லட்சத்தில் திருமண மண்டபம், ரூ. 105 லட்சத்தில் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம், ரூ. 40 லட்சத்தில் நகராட்சி கூடுதல் கட்டடம், ரூ. 22.50 லட்சத்தில் உழவர் சந்தை ஆகியன கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வி.கே.புரத்தில் ரூ. 2.56 கோல்யில் குடிநீர் மேம்பாட்டுத் திட்டமும், மணிமுத்தாறில் ரூ. 1.50 கோடியில் குடிநீர் மேம்பாட்டுத் திட்டம், ஆலடியூரில் ரூ. 20 லட்சத்தில் பாலம் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது.

இப் பணிகளை பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன் பார்வையிட்டு, வளர்ச்சிப் பணிகளை விரைவாக நிறைவேற்றுமாறு அதிகாரிகளை கேட்டு கொண்டார்.

அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் இயங்காத நடமாடும் மருத்துவமனை ஆம்புலன்ஸ் குறித்து, சுகாதாரத் துறை இணை இயக்குநரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அவருடன் நகர்மன்றத் தலைவர்கள் கே.கே.சி. பிரபாகரன் (அம்பை), எஸ்.பி. மாரியப்பன் (வி.கே. புரம்), வேளாண் விற்பனைக் குழு தலைவர் போர்வெல் கணேசன், வேளாண் துறை துணை இயக்குநர் தங்கசாமி பாண்டியன், விற்பனைக் குழுச் செயலர் கஜேந்திர பாண்டியன், நகராட்சி நிர்வாக அதிகாரிகள் ப. குத்தாலிங்கம், . முருகன், அம்பை ஊராட்சி ஒன்றிய ஆணையர் மு. முத்துலட்சுமி, மணிமுத்தாறு பேரூராட்சி மன்றத் தலைவர் சு. முருகன்சுப்பிரமணியன், நகர்மன்றத் துணைத் தலைவர் ஆர். அந்தோனிசாமி, மருத்துவ அலுவலர் சி. ராமையா, நகர்மன்ற உறுப்பினர் ஏ.சி. ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Last Updated on Monday, 20 July 2009 10:02