Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிசைப் பகுதிகளில் அபிவிருத்தித் திட்டம்

Print PDF

தினமணி 22.07.2009

குடிசைப் பகுதிகளில் அபிவிருத்தித் திட்டம்

பழனி, ஜூலை 21: பழனி நகராட்சி குடியிருப்பு குடிசைப் பகுதிகளில் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நகர்மன்றத் தலைவர் ராஜமாணிக்கம் மற்றும் ஆணையர் (பொறுப்பு) பொறியாளர் சுரேஷ்குமார் விடுத்துள்ள அறிக்கை:

ஒருங்கிணைந்த குடியிருப்பு குடிசைப் பகுதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ஓட்டு வீடு, குடிசை வீடு, ஆஸ்பெஸ்டாஸ் வீடுகள், காலிமனைகள் ஆகிய இடங்களில் ரூ. 1,07,000 திட்ட மதிப்பீட்டில் மராமத்து மற்றும் வீடுகட்டும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இதில் ரூ. 35 ஆயிரம் மக்கள் பங்காகவும், மத்திய மற்றும் மாநில அரசின் மானிய நிதியாக ரூ. 72 ஆயிரமும் பெறப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.

குறும்பபட்டி, தெரசம்மாள் காலனி, பொன்காளியம்மன் கோயில், ஆண்டவன் பூங்கா சாலை, குறவன்பாறை, இட்டேரி சாலை, பெரியபள்ளிவாசல், தெற்கு அண்ணாநகர், ராஜாஜி சாலை, கட்டபொம்மன் தெரு, சத்யாநகர், மதனபுரம், பாளையம் மற்றும் கோட்டைமேட்டுத் தெரு பகுதியில் உள்ளோர் தேர்வு செய்யப்படுவர்.

ரூ. 35 ஆயிரம் செலுத்த மக்களிடம் பணம் இல்லா விட்டால் குறைந்த வட்டியில் நகராட்சியே பணம் பெற்றுத்தர ஏற்பாடு செய்யும். இப்பணி முற்றிலும் இலவசம். இதற்காக யாருக்கும், எந்தத் தொகையும் செலுத்த வேண்டியது இல்லை. அப்படி யாரும் பணம் பெற்றால் நகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் தகவலுக்கு நகராட்சி அலுவலகத்தை அணுகி விவரம் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.