Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Community Development

துப்புரவுப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்

Print PDF
தினமணி           08.03.2013

துப்புரவுப் பணியாளர்களுக்கு  பாதுகாப்பு உபகரணங்கள்


பெரியகுளம் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் பாதாளச் சாக்கடை பராமரிப்பு பணியாளர்களுக்கு, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, நகர்மன்றத் தலைவர் ஓ. ராஜா தலைமை வகித்து, கையுறை, தலைக் கவசம், முக கவசம், இரவு நேரங்களில் பணியாற்றுவதற்காக ஒளிரும் ரெஃப்ளக்ட்டர் கோட் மற்றும் முழங்கால் வரை அணியக்கூடிய பூட்ஸ் ஆகிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார் (படம்).

இதில், ஆணையர் (பொறுப்பு) வி. சுப்பிரமணியன், துணைத் தலைவர் ஜி. முகுந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலாளர் ஆர். ரெங்கநாயகி, சுகாதார ஆய்வாளர்கள் எஸ். அகமது கபீர், டி. ஜெயசீலன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 

துப்புரவு பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்த

Print PDF
தின மணி          17.02.2013

துப்புரவு பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்த


திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்டத்திலுள்ள 450 துப்புரவுப் பணியாளர்களுக்கு இலவச கண் மற்றும் பொது மருத்துவப் பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

கீழரண் சாலையிலுள்ள மாநகராட்சி மருத்துவமனையில் நடைபெற்ற முகாமை மேயர் அ. ஜெயா தொடங்கி வைத்தார். இந்த முகாமில் இசிஜி, ஸ்கேன், ரத்தப் பரிசோதனை போன்ற அனைத்தும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டன.

இதில் அறுவைச் சிகிச்சை தேவைப்படுவோருக்கு அரசு காப்பீட்டுத் திட்டத்தில் அதை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. முகாமில், மாநகராட்சி ஆணையர் வே.ப. தண்டபாணி, கோட்டத் தலைவர் ஜெ. சீனிவாசன், மாமன்ற உறுப்பினர் பி. கிருஷ்ணமூர்த்தி, செயற்பொறியாளர் எஸ். அருணாசலம், நகர்நல அலுவலர் ந. ராஜேசுவரி, உதவி ஆணையர் கே. ராஜம்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Last Updated on Monday, 18 February 2013 09:19
 

வாரச்சந்தை அருகில் சமுதாய கூடம்ரூ. 35 லட்சத்தில் கட்ட நகராட்சி முடிவு

Print PDF

தினமலர்            30.08.2012

வாரச்சந்தை அருகில் சமுதாய கூடம்ரூ. 35 லட்சத்தில் கட்ட நகராட்சி முடிவு

கம்பம்:கம்பம் வாரச்சந்தை அருகில்,35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சமுதாய கூடம் கட்ட, நகராட்சி முடிவு செய்துள்ளது. ஒருங்கிணைந்த குடிசைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தில், 2008-09ல் கம்பம் நகராட்சி பகுதியில் 325 வீடுகள் கட்டவும், அடிப்படை வசதிகளை செய்வதற்கும், 5 கோடியே 18 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் வீடுகள் கட்டப்பட்டன. அடிப்படை பணிகளில் 23 பணிகள் முடிக்கப்பட்டது. கோம்பை ரோட்டில் கழிப்பறையை இடிக்க எதிர்ப்பு தெரிவித்ததால், சமுதாய கூடம் கட்டும் பணி மட்டும் அங்கு மேற்கொள்ளப்படவில்லை. அந்த பணிக்காக 26 லட்சம் ரூபாய் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது.தற்போது வாரச்சந்தை அருகில், மெயின்ரோட்டில் ஆர்.சி.எச்., நகராட்சி ஆஸ்பத்திரி அருகில் சமுதாய கூடம் கட்ட நகராட்சி முடிவு செய்துள்ளது. இன்றைய விலை விகிதப்படி, 35 லட்சம் ரூபாய்க்கு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையை, நகராட்சி பொதுநிதியில் இருந்து மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
Last Updated on Thursday, 30 August 2012 09:51
 


Page 5 of 18