Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Community Development

மனநோயாளிகளை காப்பகத்தில் சேர்க்க நகராட்சி நடவடிக்கை

Print PDF

தினமலர்      01.08.2012

மனநோயாளிகளை காப்பகத்தில் சேர்க்க நகராட்சி நடவடிக்கை

பெரியகுளம்:பெரியகுளம் பகுதியில் சுற்றித்திரியும் மனநோயாளிகளை மனநல காப்பகத்தில் சேர்ப்பதற்கு, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க உள்ளது. பெரியகுளம் நகராட்சி கூட்டம் தலைவர் ஓ.ராஜா தலைமையில் நடந்தது. கமிஷனர் (பொறுப்பு) சுப்பிரமணியன், துணைத்தலைவர் முகுந்தன் முன்னிலை வகித்தனர். விவாதம் வருமாறு:

கருப்பையா: ஏழு வார்டு குப்பைகளும் ஒரே இடத்தில் கொட்டப்பட்டு அள்ளப்படுகிறது.

தலைவர்: அந்தந்த வார்டு குப்பைகளை கொட்டுவதற்கு, பெரிய அளவில் பிளாஸ்டிக் டம்பர் பிளேசர் வைக்கப்பட உள்ளது.

ராஜாமுகமது: பெரியகுளம் பகுதியில் மனநோயாளிகள், மாடுகள், நாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது.

தலைவர்: பெரியகுளம் பகுதியில் சுற்றித்திரியும் மனநோயாளிகளை , காப்பகத்தில் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் போக்குவரத்து பாதிப்பை  ஏற்படுத்தும் மாடுகளை   பிடித்து,  உரியவர்களிடம்  அபராதம் வசூல் செய்யப்படும். நாய்களை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பெரியகுளம்  நகர் பகுதியில் அனைத்து இடங்களிலும் புதிதாக  தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.நகராட்சி பகுதிகளில் கட்டப்பட்டுள்ள  வணிகவளாக   கடைகளுக்கு,   வியாபாரிகள்    சிலர்   சிண்டிகேட் அமைத்து குறைந்த வாடகையில் இருந்து வருகின்றனர்.நகராட்சி  தலைவர்   மட்டுமல்லாமல் கவுன்சிலர்கள்   அனைவரும்  ஒன்றாக   சேர்ந்து  வாடகையை    உயர்த்துவதற்கு    ஆதரவு கொடுத்தால் தான்  நகராட்சி வருவாய்  அதிகரிக்கும்,என்றார்.

 

திருச்சியில் 25 ஆண்டாக இருந்த தீண்டாமை சுவர் இடிப்பு

Print PDF

தினகரன்             19.11.2010

திருச்சியில் 25 ஆண்டாக இருந்த தீண்டாமை சுவர் இடிப்பு

திருச்சி, நவ. 19: திருச்சியில் போலீஸ் பாதுகாப்புடன் சர்ச்சைக்குரிய சுவர் நேற்று இடிக்கப்பட்டது. திருச்சி எடமலைப்பட்டிபுதூர் சக்திவேல் காலனியில் இருந்து பின்புறம் உள்ள முத்து மாரியம்மன் கோயில் தெருவுக்கு செல்லும் பாதையில் 150 மீட்டர் நீளம், 9 அடி உயரத்தில் சுவர் அமைக்கப்பட்டிருந்தது. இது தீண்டாமை சுவர். இதை இடிக்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தி கலெக்டரிடம் மனு அளித்தனர்.

அதே நேரத்தில் இந்த சுவர் தனியாருக்கு சொந்தமானது. இதில் போக்குவரத்து நடைபெறவில்லை என்று மனிதநேய மக்கள் கட்சியினர் தெரிவித்தனர். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென்காசி தொகுதி எம்பி லிங்கம், இந்த சுவரை பார்வையிட்டு தீண்டாமை சுவர் அல்ல என்று கூறினார்.

திருச்சி கலெக்டர் மகேசன் காசிராஜன் உத்தரவுப்படி, மாநகராட்சி ஊழியர்கள் நேற்று காலை சர்ச்சைக்குரிய அந்த சுவரை இடித்து போக்குவரத்துக்கு வழி செய்தனர். மாநகராட்சி தலைமை பொறியாளர் ராஜாமுகமது முன்னிலையில் சுவர் இடிக்கப்பட்டது. போலீஸ் துணை கமிஷனர்கள் ரூபேஸ்குமார் மீனா, தமிழ்ச்சந்திரன், உதவி கமிஷனர்கள் ஞானசேகரன், பழனிச்சாமி, சுந்தர்ராஜன் ஆகியோர் இருந்தனர். கமாண்டே பிரிவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மவுலானா கூறுகையில், "இது தீண்டாமை சுவர். சுவர் இருந்த இடம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. 89ம் ஆண்டு வரை இந்த இடம் புது அரிஜன தெரு என்றுதான் ரேஷன் கார்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

பின்னர், திருத்தம் செய்யப்பட்டு முத்துமாரியம்மன் கோவில் தெரு என்று மாறியது. சுவரை இடிக்கக்கோரி 25 ஆண்டாக போராடி வந்தோம். இந்த சுவரினால் 5 தெருவை சேர்ந்த மக்கள் ஒன்றரை கிமீ சுற்றி செல்ல வேண்டியிருந்தது. சுவர் இடிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.

இடத்தின் உரிமையாளர் சம்சுகனி ராவுத்தரின் தம்பி மகன் அப்துல் ரஹ்மான் கூறுகையில், "சுவர் இடிக்கப்பட்டது பற்றி மதுரை உயர்நீதிமன்றத்தில் ரிட்மனு தாக்கல் செய்ய உள்ளோம்" என்றார்.

திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் கட்டப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய சுவரை நேற்று, மாநகராட்சி ஊழியர்கள் இடித்தனர்.

 

 

மாநகராட்சி ஆணை வெளியீடு 3 லட்சம் அரவாணிகளுக்கு மாதம் ரூ1,000உதவித்தொகை

Print PDF

தினகரன்                    11.11.2010

மாநகராட்சி ஆணை வெளியீடு 3 லட்சம் அரவாணிகளுக்கு மாதம் ரூ1,000உதவித்தொகை

புதுடெல்லி, நவ. 11: டெல்லியில் உள்ள 3 லட்சம் அரவாணிகளுக்கு மாநகராட்சி சார்பில் மாதம் ரூ1,000 உதவித்தொகை அளிக்கப்படுகிறது. இதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மாநகராட்சி சார்பில் மூத்த குடிமக்கள், விதவைகள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், உடல் ஊனமுற்றோர் உள்ளிட் டோருக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் அரவாணிகளுக்கும் மாதந்தோறும்

ரூ1,000 உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அரவாணிகளுக்கு உதவித்தொகை வழங்கும் உள்ளாட்சி அமைப்பு என்ற பெருமையை டெல்லி பெறுகிறது.

அரவாணிகளுக்கு மாத உதவித்தொகை அளிப்பது மற்றும் அவர்களை வீட்டு வரி வசூலிப்பு பணியில் ஈடுபடுத்துவது குறித்து முன்மாதிரி திட்டத்தை பட்ஜெட் கூட்டத்தின்போது, மாநகராட்சியின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வுக் குழு தலைவர் மாலதி வர்மா முன்மொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரவாணிகளுக்கு வயதாகிவிட்டால், அவர்களால் சம்பாதிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. நல்ல சாப்பாடு, ஊட்டச்சத்து இன்றி அவர்கள் உடல்நலம் பாதிக்கப்படுகின்றனர். இப்படி பரிதாபமான நிலையில் உள்ள அவர்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காக இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் 3 லட்சம் அரவாணிகள் பயன் பெறுவார்கள்.

உதவித் தொகை பெற விரும்பும் அரவாணிகள், ஏதாவது ஒரு அரசு மருத்துவமனையில் இருந்து தாங்கள் அரவாணிகள்தான் என்பதற்கான மருத்துவ சான்றிதழை பெற்று சமர்ப்பிக்க வேண்டும். இதேபோல் தாங்கள் யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் உறுதி அளித்து மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்க வேண்டும். அதை பரிசீலித்து அவர்களுக்கு மாத உதவித்தொகை அளிக்கப்படும்.

மாத உதவித்தொகை திட்டத்தில், 18 வயதுக்கு உட்பட்ட ஆதரவற்ற குழந்தைகளும் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் மாத உதவித் தொகை வழங்கப்படும். இவ்வாறு மாநகராட்சி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 


Page 6 of 18