Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Community Development

பிச்சைக்காரர்களைப் பாதுகாக்க ரூ. 10 லட்சம் ஒதுக்க முடிவு

Print PDF
தினமணி 15.06.2010

பிச்சைக்காரர்களைப் பாதுகாக்க ரூ. 10 லட்சம் ஒதுக்க முடிவு

கோவை, ஜூன் 14: கோவை மாநகராட்சி காப்பகத்தில் பாதுகாக்கப்படும் பிச்சைக்காரர்களைப் பராமரிப்பதற்கு ரூ. 10 லட்சம் ஒதுக்க மாநகராட்சி சுகாதாரக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சியின் சுகாதாரக் குழுக் கூட்டம், குழுத்தலைவர் பி.நாச்சிமுத்து தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது (படம்). மாநகராட்சி நகர்நல உதவி அலுவலர் அருணா முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

÷உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி கோவைக்கு வரும் பேராளர்கள் பயன்படுத்துவதற்காக 60 நடமாடும் கழிப்பிடங்கள் வாங்கப்பட்டுள்ளன. இவை கொடிசியா, அவிநாசி சாலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. அதை பராமரிக்க கூடுதல் எண்ணிக்கையில் துப்புரவாளர்களை நியமிக்க வேண்டும். பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க உக்கடம் பஸ் நிலையம், ரயில் நிலையங்கள் அருகில் மருத்துவ முகாம்கள் அமைக்க வேண்டும். செம்மொழி மாநாட்டையொட்டி கோவை நகரில் இருந்து அகற்றப்படும் பிச்சைக்காரர்கள், கோவை- ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு புதிய உடைகள் வாங்குதல், முக சவரம் செய்தல், முடி திருத்துதல், உணவு வழங்குதல் உள்ளிட்டவற்றுக்காக ரூ. 10 லட்சம் ஒதுக்கவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

÷ இக்கூட்டத்தில், ..சி. பூங்கா இயக்குநர் பெருமாள்சாமி, குழு உறுப்பினர்கள் சோபனா செல்வன், தன்ராஜ், முருகேசன், ராஜாமணி உள்பட பலர் பங்கேற்றனர்.

Last Updated on Tuesday, 15 June 2010 06:57
 

மாநகராட்சி ஊழியர்கள் பிடித்த பிச்சைக்காரர்கள் 22 பேர் மனநல மருத்துவமனைக்கு மாற்றம் மற்றவர்கள் முதியோர் இல்லத்தில் சேர்ப்பு

Print PDF

தினகரன் 09.06.2010

மாநகராட்சி ஊழியர்கள் பிடித்த பிச்சைக்காரர்கள் 22 பேர் மனநல மருத்துவமனைக்கு மாற்றம் மற்றவர்கள் முதியோர் இல்லத்தில் சேர்ப்பு

சென்னை, ஜூன் 9: மாநகராட்சி ஊழியர்களால் பிடிக்கப்பட்ட பிச்சைக்காரர்களில் 22 பேரை மனநல மருத்துவமனையில் சேர்க்கவும் மீதமுள்ளவர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் சென்னையில் சிக்னல் மற்றும் முக்கிய இடங்களில் சுற்றித்திரியும் பிச்சைக்காரர்களை பிடிக்கும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. ஒரே நாளில் 8 பெண்கள் உட்பட 38 பிச்சைக்காரர்கள் பிடிபட்டனர். இவர்கள் தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கு மருத்துவ உதவியாளர்கள் உதவியுடன் முடி திருத்தம் செய்யப்பட்டு, குளிக்க வைத்து, புத்தாடை கொடுக்கப்பட்டது. பின்னர் டாக்டர்கள் அவர்களுக்கு தோல் சிகிச்சை மற்றும் உடல்நலம் பாதிப்பு தொடர்பான சிகிச்சைகள் அளித்தனர்.

பிடிபட்ட 38 பிச்சைக்காரர்களில் 22 பேருக்கு லேசான மனநல பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இவர்களை போலீஸ் உதவியுடன் மாஜிஸ்திரேட் முன் நிறுத்தி, அவரது அனுமதியுடன் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் சேர்க்க உள்ளனர்.

மீதமுள்ள 16 பிச்சைக்காரர்கள் மிகவும் வயதானவர்கள். எனவே அவர்களை சென்னையில் உள்ள பல்வேறு முதியோர் இல்லங்களில் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஊழியர்கள் பிடிக்க வருவதை அறிந்து பிச்சைகாரர்கள் ஓட்டம் பிடிப்பதால், கூடுதல் ஊழியர்கள் மற்றும் போலீஸ் உதவியுடன் அவர்களை பிடிக்க மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

 

சமுதாயக் கூடம் திறப்பு

Print PDF

தினமணி     20.05.2010

சமுதாயக் கூடம் திறப்பு

கும்மிடிப்பூண்டி,மே 19: கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரணி பேரூராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாயக் கூடத்தின் (படம்) திறப்பு விழா திங்கட்கிழமை நடைபெற்றது.

ஆரணியில் லட்சுமி அம்மன் கோயில் அருகில் ரூ.22.5 லட்சம் மதிப்பில் இந்த சமுதாயக் கூடம் கட்டப்படுள்ளது. சிறப்பு பூஜையுடன் தொடக்க விழா நடைபெற்றது.

ஆரணி பேரூராட்சித் தலைவர் ஷேமபூஷணம் சமுதாய கூடத்தை திறந்து வைத்தார். வருவாய் அலுவலர் கன்னியப்பன் முன்னிலை வகித்தார்.

கவுன்சிலர்கள் சுகுமார், நைனியப்பன், ரகு, வள்ளி, சாந்தி, கலா உட்பட பொதுமக்கள் பலர் கலந்துக் கொண்டனர்.

 


Page 14 of 18