Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

ரூ.88.80 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்குப் பூமி பூஜை

Print PDF

தினமணி        12.07.2016

ரூ.88.80 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்குப் பூமி பூஜை

காஞ்சிக்கோவில் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ.88.80 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சதீஷ் தலைமை வகித்தார். பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் பங்கேற்று கட்டுமானப் பணிகளைத் துவக்கி வைத்தார்.

இதில், காஞ்சிக்கோவிலில் ரூ.38 லட்சம் மதிப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், காஞ்சிக்கோவில்

பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ. 50.80 லட்சம் மதிப்பில் தார் சாலை, மேல்நிலைத் தொட்டி, பொதுக் கழிப்பிடம், ஆழ்துளைக் கிணறு, குடிநீர்த் தொட்டி உள்ளிட்டவை அமைக்கப்படவுள்ளன.

இதில், பெருந்துறை ஒன்றியக் குழுத் தலைவர் எஸ்.பெரியசாமி, துணைத் தலைவர் விஜயன், காஞ்சிக்கோவில் பேரூராட்சித் தலைவர் கே.பி.பரமசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

பருவநிலை மாற்றத்தைத் தடுக்க நகர்ப்புற திட்டமிடலில் தேசிய ஒருங்கிணைப்பு தேவை: ‘தேரி’ அமைப்பு பரிந்துரை

Print PDF

தினமணி    10.07.2016

பருவநிலை மாற்றத்தைத் தடுக்க நகர்ப்புற திட்டமிடலில் தேசிய ஒருங்கிணைப்பு தேவை: ‘தேரி’ அமைப்பு பரிந்துரை

பருவநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தடுக்க நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டமிடல்களில் தேசிய ஒருங்கிணைப்பு தேவை என்று ஆற்றல் மற்றும் வளங்கள் நிறுவனம் (தி எனர்ஜி அண்ட் ரிசோர்ஸஸ் - தேரி) பரிந்துரைத்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரல் டாக்டர் அஜய் மாத்தூர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றம் காரணமாக கிராமப்புற, நகர்ப்புறங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கோவா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் இரண்டு ஆண்டுகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இதில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள், அவற்றைப் போக்க ஏற்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறை உள்ளிட்டவை தொடர்பாக ஆராயப்பட்டன.

நகர்ப்புறங்களின் மேம்பாட்டை பொருத்தே நம் நாட்டின் வளர்ச்சி அடங்கி உள்ளது. எனவே, பருவநிலை மாற்றத்தைத் தடுக்க நகர்ப்புற திட்டமிடல்களில் தேசிய அளவில் ஒருங்கிணைப்பு தேவை. மேலும், நகர்ப்புற திட்டமிடல்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்குவதுடன், பழைய கட்டடங்களை மறுநிர்மாணம் செய்ய வழிவகை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்குப் பரிந்துரைத்துள்ளோம் என்று அஜய் மாத்தூர் தெரிவித்துள்ளார்.

தேரி அமைப்பின் பரிந்துரை பற்றி மத்திய வனம், சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் துறைக்கான இணைச் செயலர் ஆர்.ஆர்.ராஸ்மி கூறுகையில், "பருவநிலை மாற்றம் காரணமாக நகர்ப்புறங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக "தேரி' அமைப்பின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. நகர்ப்புறங்களின் கட்டமைப்பு பணி மேற்கொள்வது மிகவும் சிக்கலானவை. எனவே, அதற்கேற்ப நகர்ப்புற திட்டமிடல்களில் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளோம்' என்றார்.

Last Updated on Tuesday, 12 July 2016 11:05
 

மாநகராட்சிக்கு வரி செலுத்துவோர் கவனத்துக்கு...

Print PDF
தினமணி     29.01.2015

மாநகராட்சிக்கு வரி செலுத்துவோர் கவனத்துக்கு...

திருநெல்வேலி மண்டலப் பகுதியில் உள்ள பொதுமக்கள் மாநாகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்தி ஜப்தி நடவடிக்கைகளை தவிர்த்திடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, மாநகராட்சியின் மண்டல உதவி ஆணையர் து. கருப்பசாமி கூறியது: திருநெல்வேலி மாநகராட்சி, திருநெல்வேலி மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள சொத்துக்களின் வரிவிதிப்பாளர்கள் சட்ட விதிகளின்படி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2014-15ஆம் ஆண்டுக்கான சொத்துவரி, காலிமனை வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, புதை சாக்கடை சேவை கட்டணம், கடை வாடகை ஆகிய வரியினங்களை 15.10.2014ஆம் தேதிக்குள் செலுத்தியிருக்க வேண்டும். இந்த காலத்தில் வரி செலுத்தாதவர்கள் தங்களது வரி இனங்களை மாநகராட்சியின் கணினி சேவை மையம் அல்லது மண்டல அலுவலகங்களில் உள்ள கணினி வரி வசூல் மையங்களில் உடனடியாக செலுத்த வேண்டும். நிலுவையை செலுத்த தவறினால் ஜப்தி, சீல் வைத்தல், குடிநீர் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உதவி ஆணையர் எச்சரித்துள்ளார்.
 


Page 5 of 841