Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

பாலங்கள்- சுரங்கபாதைகளில் போஸ்டர் ஒட்டுவதை தடுக்க விழிப்புணர்வு பிரசாரம்

Print PDF

மாலை மலர் 28.07.2009

பாலங்கள்- சுரங்கபாதைகளில் போஸ்டர் ஒட்டுவதை தடுக்க விழிப்புணர்வு பிரசாரம்: மேயர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, ஜூலை. 28-

சென்னை மேயர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதல்வரின் ஆணைப்படியும், துணை முதல்வர் அறிவுரைப்படியும் சென்னை மாநகராட்சி சென்னை மாநகரை அழகுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, சென்னையில் வரும் 1-ம் தேதி முதல் மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் ஆகியவற்றில் போஸ்டர்கள் ஒட்டுவதற்கும், சுவர் எழுத்துக்கள் வரைவதற்கும் தடை விதிக்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சி பராமிப்பில் பக்கிங்காம் கால்வாய் குறுக்கே உள்ள மணலிப்பாலம், ஆடம்ஸ் பாலம், சேப்பாக்கம் பாலம், எலியட்ஸ் சாலை பாலம், கிரின்வேஸ் சாலை பாலம், காமராஜர் சாலை பாலம், லேட்டீஸ் பாலம் போன்ற 23 பாலங்களும், கூவம் ஆற்றின் குறுக்கே உள்ள 11 பாலங்களும், அடையாறு ஆற்றின் குறுக்கே உள்ள 5 பாலங்களும், ஓட்டேரி ஓடையின் குறுக்கே உள்ள 18 பாலங்களும், கேப்டன் காட்டன் கால்வாய் குறுக்கே உள்ள 4 பாலங்களும், மாம்பலம் கால்வாயின் குறுக்கே உள்ள 14 பாலங்களும், நுங்கம்பாக்கம் கால்வாயின் குறுக்கே உள்ள 6 பாலங்களும், கொடுங்கையூர் கால்வாயின் குறுக்கே உள்ள 11 பாலங்களும், விருகம்பாக்கம் கால்வாயின் குறுக்கே உள்ள 23 பாலங்களும், டிரஸ்ட்புரம் கால்வாயின் குறுக்கே உள்ள 11 பாலங்களும், பிற கால்வாய்களின் குறுக்கே உள்ள 26 பாலங்களும், இரயில்வே சந்திக்கடவின் குறுக்கே உள்ள 8 பாலங்களும், இரயில்வே சந்திக்கடவின் குறுக்கே உள்ள 13 சுரங்கப்பாதைகளும், 6 பாதசாரிகள் சுரங்கப் பாதைகள், 2 தரைமட்டப் பாலங்களும், 30 உயர்மட்ட நடைப்பாலங்கள், 12 மேம்பாலங்கள் என 223 மாநகராட்சியின் பராமரிப்பில் உள்ள பாலங்களில் போஸ்டர்கள் ஒட்டுவதற்கும், சுவர் எழுத்துக்கள் எழுதுவதற்கும் தடைவிதிக்கப்படுகிறது.

நெடுஞ்சாலை துறையின் பராமரிப்பில் உள்ள 4 இரயில்வே சந்திக்கடவின் குறுக்கே உள்ள பாலங்கள், 5 கூவம் ஆற்றின் குறுக்கே உள்ள பாலங்கள், 2 அடையாறு ஆற்றின் குறுக்கே உள்ள பாலங்கள், 2 பக் கிங்காம் கால்வாயின் குறுக்கே உள்ள பாலங்கள், ஒட்டேரி ஓடையின் குறுக்கே எருக்கஞ்சேரி நெடுங்சாலை உள்ள பேசின் பாலம், அண்ணா மேம்பாலம் மற்றும் 12 பாதசாரி சுரங் கப்பாதைகள் என 27 பாலங்களில் போஸ்டர்கள் ஒட்டுவதற்கும், சுவர் எழுத்துக்கள் எழுதுவதற்கும் தடை விதிக்கப்படுகிறது.

ஆக மொத்தம் சென்னையில் 250 பாலங்கள், சுரங்கப் பாதைகளில் போஸ்டர்கள் ஓட்டுவதற்கும், சுவர் எழுத்துக்கள் எழுதுவதற்கும் தடைவிதிக்கப்படுகிறது.

மாநகராட்சி மண்டல அலுவலர்கள் இரண்டு நாட்களுக்குள் அந்தந்த பகுதியில் உள்ள ஏஜென்ட்களிடமும் மற்றும் சுவர் ஒட்டும் தொழிலாளர்களிடம் பேசி சுவர் எழுத்துக்கள் எழுதுவதற்கும், போஸ்டர்களை ஒட்டுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளதை எடுத்துரைத்து அறிவுறுத்துவார்கள்.

ஜூலை திங்கள் 31ம் தேதி முதல் மாநகராட்சி மூலம் மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அகற்றும் நடவடிக்கையும், வரையப்பட்டுள்ள சுவர் எழுத்துக்களை வெள்ளை அடித்து அழிக்கும் பணியினையும் மேற்கொள்வார்கள். சென்னை மாநகராட்சியின் இந்த அழகுப்படுத்தும் பணிக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

விழுப்புரம் கே.கே. ரோட்டிலுள்ள சுடுகாட்டிற்கு நவீன எரிவாயு தகன மேடை

Print PDF

தினமலர் 27.07.2009

 

எழும்பூர் தொகுதியில் உள்ள கான்ரான்ஸ்மித் பூங்காவில் அம்பேத்கரின் கல்வெட்டு அமைக்கப்படும்: 38 பூங்காக்களை திறந்து வைத்து துணை முதல்-அமைச்சர் அறிவிப்பு

Print PDF

தினமலர் 25.07.2009

எழும்பூர் தொகுதியில் உள்ள கான்ரான்ஸ்மித் பூங்காவில் அம்பேத்கரின் கல்வெட்டு அமைக்கப்படும்: 38 பூங்காக்களை திறந்து வைத்து துணை முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, ஜுலை.25-

சென்னையை சிங்கார சென்னையாக மாற்றுவதற்கு மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பழைய பூங்காக்களை புதுப்பிக்கும்பணியும், புதிய பூங்காக்கள் அமைக்கும் பணி நடந்து வந்தது. இதில் 25 புதிய பூங்காக்களும், 8 புதுப்பிக்கப்பட்ட பூங்காக்களும், 4 சாலையோர பூங்காக்களும், ஒரு தீவுத்திடல் பூங்காவும் அடங்கும்.

இந்த 38 பூங்காக்களின் திறப்பு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். துணை முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் இந்த பூங்காக்களை திறந்து வைத்தார்.

கலைஞர் கருணாநிதி நகரில் ரூ.96.38 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட சிவன் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள நீருற்றுகள், யோகா மையம், சிறுவர்களுக்கான ஸ்கேட்டிங் தளம், புதிய நடைபாதைகள் ஆகியவற்றை பார்வையிட்டார். ரூ.75.86 லட்சத்தில் 139-வது வார்டில் தாலுகா அலுவலக சாலையில் சாலையோர பூங்கா, ரூ.22.20 லட்சத்தில் ராஜ்பவன் எதிரே சாலை சந்திப்பில் பூங்கா, லேபர் காலனியில் ரூ.6.75 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட பூங்கா, எம்.ஆர்.சி.நகர் சத்யதேவ் அவென்ïவில் ரூ.23.99 லட்சத்தில் புதிய பூங்கா, சாந்தோம் பட்டினப்பாக்கம் இணைப்பு சாலையில் ரூ.39.26 லட்சத்தில் புதிய பூங்கா, ரோகிணி கார்டனில் ரூ.8.65 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட பூங்கா, திருவான்மிïர் திருவள்ளுவர் நகர் முதல் அவென்ïவில் ரூ.40 லட்சத்தில் புதிய பூங்கா, தேவேந்திரா நகரில் 6.45 லட்சத்தில் புதிய பூங்கா ஆகியவற்றை பொது மக்கள் பயன்பாட்டிற்காக துணை முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து கோயம்பேடு பஸ் நிறுத்தம் எதிரே ரூ.91.35 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜெய்நகர் பூங்கா, ரூ.20.12 லட்சத்தில் டபிள்ï பிளாக்கில் புதுப்பிக்கப்பட்ட பூங்கா, ரூ.61.31 லட்சத்தில் திருநகர் பூங்காவும், 15-வது பிரதான சாலையில் ரூ.74 லட்சத்தில் பூங்கா, 14-வது பிரதான சாலையில் ரூ.52.09 லட்சத்தில் பூங்கா, பெரியார் ஈ.வெ.ரா. சாலையில் ரூ.5 லட்சத்தில் நீர் வீழ்ச்சியுடன் கூடிய சாலையோர பூங்கா ஆகியவற்றையும் துணை முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் திறந்து வைத்தார்.

எழும்பூர் கான்ரான்ஸ்மித் பூங்கா ரூ.42 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவை திறந்து வைத்த துணை முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் அங்கு மரக்கன்று ஒன்றை நட்டார். பின்னர் துணை முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை மாநகராட்சி சார்பில் கடந்த 3 ஆண்டுகளில் 250 பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன. இதற்காக ரூ.72 கோடி செலவிடப்பட்டுள்ளது. இன்று 9.50 கோடி ரூபாய் செலவில் 38 பூங்காக்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் 15 பெரிய பூங்காக்கள், 100 சிறிய சாலையோர பூங்காக்களில் பணிகள் நடந்து வருகின்றன. அவை விரைவில் திறக்கப்படும்.

இந்த கான்ரான்ஸ்மித் பூங்காவுக்கு தனிச்சிறப்பு உண்டு. சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் இந்த பூங்காவிற்கு வருகை தந்துள்ளார். அவருடைய நினைவாக ரூ.42 லட்சம் செலவில் கான்ரான்ஸ்மித் பூங்கா புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் டாக்டர் அம்பேத்கரின் கல்வெட்டு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு துணை முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் கூறினார்.

காந்தி இர்வின் சாலையில் ரூ.50 லட்சத்தில் பூங்கா, ரூ.4.45 லட்சத்தில் எத்திராஜ் லேனில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா, சுவாமி சிவானந்தா சாலையில் ரூ.87.67 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள சாலையோர பூங்கா, சாலிகிராமம் காவேரி ரங்கன் நகரில் பிள்ளையார் கோவில் தெருவில் ரூ.12.25 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பூங்கா ஆகியவற்றையும் அப்போது துணை முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இப்ராகிம் சாலையில் ரூ.9 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட மாடிப்பூங்கா, முத்தமிழ் நகர் 21-வது தெருவில் ரூ.1.11 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட பூங்கா, வெங்கடேஸ்வரா காலனி 5-வது தெருவில் ரூ.4.61 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய பூங்கா, முத்தமிழ் நகர் 92-வது தெருவில் ரூ.2.56 லட்சம் செலவில் புதிய பூங்கா, பின்னி நகர் பிரதான சாலையில் ரூ.3.52 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய பூங்கா, ஜெய்பாலாஜி நகரில் ரூ.2.96 லட்சம் செலவில் புதிய பூங்கா, ரூ.5.15 லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட லிங்கேசன் பூங்கா, ரூ.5.94 லட்சம் செலவில் விவேகானந்தன் தெருவில் அமைக்கப்பட்டுள்ள புதிய பூங்கா.

ரூ.5.90 லட்சம் செலவில் காந்தி தெருவில் அமைக்கப்பட்டுள்ள புதிய பூங்கா, எம்.ஆர்.நகரில் ரூ.8.37 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய பூங்கா, ரூ.3.76 லட்சம் செலவில் பாரதி சாலையில் அமைக்கப்பட்டுள்ள புதிய பூங்கா, ரூ.5.86 லட்சம் செலவில் சீனிவாசன் சாலையில் அமைக்கப்பட்டுள்ள புதிய பூங்கா, ரூ.4.38 லட்சம் செலவில் கே.கே.டி. நகர் 7-வது பிளாக்கில் அமைக்கப்பட்டுள்ள புதிய பூங்கா, ரூ.13.45 லட்சம் செலவில் திருவொற்றிïர் நெடுஞ்சாலையில் உள்ள புதுப்பிக்கப்பட்ட பூங்கா, ரூ.4.95 லட்சம் செலவில் திருவொற்றிïரில் சாலையோர பூங்கா, ரூ.24.3 லட்சம் செலவில் வடிவேல் 2-வது தெருவில் புதிய பூங்கா, எடப்பாளையத்தில் ரூ.19.70 லட்சம் செலவில் புதிய பூங்கா ஆகியவற்றையும் துணை முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் திறந்து வைத்தார்.

நேற்று ஒரே நாளில் ரூ.9 கோடியே 50 லட்சம் செலவில் 38 பூங்காக்களை துணை முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்த பூங்கா திறக்கும் நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் பரிதி இளம்வழுதி, சென்னை மாநகராட்சி கமிஷனர் ராஜேஷ் லக்கானி, துணை மேயர் சத்தியபாமா, மாநகராட்சி ஆளுங்கட்சித்தலைவர் ராமலிங்கம், எதிர்கட்சித்தலைவர் சைதை ரவி, நிலைக்குழுத் தலைவர் சுரேஷ்குமார், மண்டலக்குழு தலைவர் தனசேகரன், கவுன்சிலர் முத்துக்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 


Page 831 of 841