Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மதுரையில் 4 "அம்மா' உணவகங்களுக்கு ஐஎஸ்ஓ தரச் சான்று

Print PDF

தினமணி               15.02.2014

மதுரையில் 4 "அம்மா' உணவகங்களுக்கு ஐஎஸ்ஓ தரச் சான்று

மதுரை மாநகராட்சியிலுள்ள 10அம்மா உணவகங்களில் 4 உணவகங்களுக்கு ஐஎஸ்ஓ தரச் சான்று கிடைத்துள்ளதாக, மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:

மதுரை மாநகராட்சியில் முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட 10 அம்மா உணவகங்களில், கோ.புதூர், சந்தைப்பேட்டை புது ராமநாதபுரம் சாலை, திருப்பரங்குன்றம், மேலவாசல் ஆகிய 4 உணவகங்களுக்கும் உணவு தயாரிப்பு மற்றும் விநியோகிக்கும் முறைகளுக்காக, ஐஎஸ்ஓ தரச் சான்று கிடைத்துள்ளது. மற்ற உணவகங்களுக்கும் இந்தச் சான்று கிடைக்கும் வகையில் நிர்வகிக்கப்படும்.

இதேபோன்று, மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், மாநகராட்சி நீச்சல் குளம் மற்றும் சுற்றுச்சூழல் பூங்காவுக்கும் ஐஎஸ்ஓ தரச் சான்று கிடைத்துள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக மதுரையிலுள்ள 4 அம்மா உணவகங்களுக்கு தரச் சான்று கிடைத்திருப்பது பெருமைக்குரியது.

மதுரையிலுள்ள 10  அம்மா உணவகங்களுக்கும் 31.1.2014 வரை ரூ.2.43 கோடி செலவிடப்பட்டுள்ளது. அதாவது, ரூ.1-க்கு மலிவு விலையில் 1 கிலோ அரிசி வகையில் ரூ.1 லட்சத்து 76 ஆயிரத்து 400-ம், மளிகைச் சாமான்கள் ரூ.46 லட்சத்து 47 ஆயிரத்து 284-ம், எரிவாயு உருளை செலவு ரூ.46 லட்சத்து 47 ஆயிரத்து 169-ம், காய்கறிகள் ரூ.71 லட்சத்து 57 ஆயிரத்து 500-ம், ஊறுகாய் ரூ.27 லட்சத்து 60 ஆயிரம் செலவிடப்பட்டுள்ளது.

மாநகராட்சியில், வார்டு வாரியாக ரூ.12 கோடியில் திட்டப் பணிகள் தயாரிக்கப்பட்டு, அனுமதி பெறப்பட்டுள்ளது. இப் பணிகளில் 95 சதவீத பணிகள் 15 நாள்களுக்குள் துவங்கி விரைவில் முடிக்கப்படும். ஏற்கனவே, ரூ.1.75 கோடியில் கட்டப்பட்டு வரும் மண்டலம் 2-க்கான அலுவலகக் கட்டடம், சப்பாணி கோவில் தெரு மருந்தகம் மற்றும் அன்சாரி நகர் நலவாழ்வு மையம், யானைக்கல் சந்திப்பில் விரைவு மக்கள் குறை தீர்க்கும் மையம், அனைத்து வார்டு உறுப்பினர்களுக்கான அலுவலகக் கட்டடம் கட்டுமானப் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்றார்.

  பேட்டியின்போது, எம்எல்ஏ கருப்பையா,  நகர்நல அலுவலர் யசோதாமணி, நகரமைப்பு அலுவலர் மு.ராக்கப்பன், உதவி ஆணையாளர்கள் அ.தேவதாஸ், ரெகோபெயாம், சின்னம்மாள், பிஆர்ஓ சித்திரவேல், செயற்பொறியாளர்கள் திருஞானம், சந்திரசேகரன், அரசு, ராஜேந்திரன், வரிவிதிப்புக் குழுத் தலைவர் ஜெயபால் ஆகியோர் உடனிருந்தனர்.

 

சென்னையில் 6 அரசு ஆஸ்பத்திரிகளில் அம்மா உணவகம்: விரைவில் திறக்க ஏற்பாடு

Print PDF

தினத்தந்தி             14.02.2014

சென்னையில் 6 அரசு ஆஸ்பத்திரிகளில் அம்மா உணவகம்: விரைவில் திறக்க ஏற்பாடு
 
சென்னையில் 6 அரசு ஆஸ்பத்திரிகளில் அம்மா உணவகம்: விரைவில் திறக்க ஏற்பாடு

சென்னை, பிப். 14 - சென்னை மாநகராட்சி சார்பில் 200 வார்டுகளில் ‘அம்மா உணவகம்’ செயல்பட்டு வருகிறது.

இதற்கு பொது மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருவதால் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அம்மா உணவகம் திறக்கப்பட்டது.

6000 சதுர அடியில் மிகப்பெரிய அளவில் இங்கு உணவகம் செயல்பட்டு வருகிறது. நோயாளிகள், அவர்களை பார்க்க வரும் உறவினர்கள் உள்ளிட்ட அனைவரும் இங்கு விரும்பி சாப்பிடுகிறார்கள். மிக சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து சென்னையில் முக்கியமான 6 அரசு ஆஸ்பத்திரிகளிலும் அம்மா உணவகம் திறக்க ஏற்பாடு நடந்து வந்தன.

இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்றது.

ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி, ராயபுரம் ஆர்.எஸ். ஆர்.எம். மகப்பேறு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, எழும்பூர் தாய்– சேய் நல மருத்துவமனை, சேப்பாக்கம் கஸ்தூரிபாய் மகப்பேறு ஆஸ்பத்திரி, ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி ஆகிய 6 இடங்களில் அம்மா உணவகம், கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து விட்டன.

நவீன சமையல் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.முற்றிலும் நீராவியில் இட்லி தயாரிக்க கூடிய வகையில் சமையலறை உருவாகிறது. இருக்கைகள், குடிநீர் வசதி, மின்விசிறி போன்றவை பொறுத்தப்படுகின்றன. இன்னும் 2 வாரத்திற்குள் இந்த பணிகள் அனைத்தும் முடிந்து திறப்பு விழாவிற்கு தயாராகி விடும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

அரசு மருத்துவமனையில் உணவகம்: முதல்வர் துவக்கி வைத்தார்

Print PDF

தினபூமி            13.02.2014

அரசு மருத்துவமனையில் உணவகம்: முதல்வர் துவக்கி வைத்தார்

http://www.thinaboomi.com/sites/default/files/imagecache/story_thumbnail/Mdu-Govt-Hospital-Amma-Mess(C).jpg 

சென்னை,பிப்.13 - திருச்சி மாநகராட்சியில் நாள் ஒன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் ரூ.221.42 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்ட குடிநீர் அபிவிருத்தி திட்டங்களையும் முதல்_அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

மேலும் மதுரை மாநகராட்சியில் ராஜாஜி அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள அம்மா உணவகம் மற்றும் மாட்டுத்தாவணியில் ஆம்னி பஸ் நிலையம், போள?ர் ஒன்றியம் படவீடு மற்றும் கும்பகோணம், அனத்த நல்லூர் ஒன்றியங்களில் கூட்டு குடிநீர் திட்டங்களையும் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் அலுவலக கட்டிடம், துப்புரவு பணியாளர்கள் குடியிருப்புகள் மற்றும் உபரி எரிவாயு கூடங்கள் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், கூடலூர் (தேனி) நகராட்சியில் கட்டப்பட்டுள்ள துப்புரவு பணியாளர் குடியிருப்புகள், மேட்டுப்பாளையம், வேட்டைக்காரன் புதூர் மற்றும் மேலசொக்கநாதபுரம் ஆகிய பேரூராட்சிகள் மற்றும் தேவக்கோட்டை நகராட்சி குடிநீர் அபிவிருத்தி திட்டங்கள் ஆகியவற்றையும் முதல்_அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:_

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா   நேற்று தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகத் துறை  சார்பில்  திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில், 221 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் அபிவிருத்தித் திட்டத்தை காணொலிக் காட்சிமூலமாகத் துவக்கி வைத்தார்கள். மேலும், 18 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டடங்கள்; சென்னை மாநகராட்சி பகுதியில் 56 கோடியே 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம்,  சுரங்கப் பாதை மற்றும் கலை அரங்கம் ஆகியவற்றை திறந்து வைத்து,  28 கோடியே 

87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் திட்டங்களைத் துவக்கி, 13 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்கள்.

நகர்ப்புறங்களில் பெருகிவரும் மக்கட்தொகைக்கேற்ப குடிமைப் பணிகளை நிறைவேற்றிடவும், நகர்ப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திடவும், அனைத்து மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்கிடவும்தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பல்வேறு ஆக்கபூர்வமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில், 221 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் அபிவிருத்தித் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா   காணொலிக் காட்சி மூலமாகத் துவக்கி வைத்தார்கள்.  

மேலும், மதுரை மாநகராட்சியில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இராஜாஜி அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள அம்மா உணவகம் மற்றும் மாட்டுத் தாவணி பகுதியில் 9 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆம்னி பேருந்து நிலையம்; தேனி மாவட்டம், கூடலூர் நகராட்சியில் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துப்புரவு பணியாளர் குடியிருப்பு; பேரூராட்சிகள் நிர்வாகம் சார்பில் மாநிலத்தின்  பல்வேறு பேரூராட்சிகளில் 

7 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலத் கட்டப்பட்டுள்ள புதிய பேரூராட்சி அலுவலகக் கட்டடங்கள், நவீன சுகாதார வளாகங்கள், வணிக வளாகக் கட்டடம், குடிநீர் அபிவிருத்தி பணிகளத், மேம்படுத்தப்பட்ட பூங்காக்கள், நவீன எரிவாயு தகனமேடை; 

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் திருவண்ணாமலை மாவட்டம், போளூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட படவேடு மற்றும்  46 குடியிருப்புகளுக்கு 3 கோடியே 

3 லட்சம் பொய் மதிப்பீட்டிலும்; தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஊராட்சி  ஒன்றியத்திற்குட்பட்ட குடிநீர் தரம் பாதிக்கப்பட்ட  73 குடியிருப்புகளுக்கு 9 கோடியே 

95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்;   திருச்சிராப்பள்ளி மாவட்டம், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம், திருப்பராய்த்துறை ஊராட்சிக்குட்பட்ட 11 குடியிருப்புகள் மற்றும் பெருகமணி ஊராட்சிக்குட்பட்ட  குடியிருப்பு ஆகியவற்றிற்கு 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்;  திருச்சிராப்பள்ளி மாவட்டம், மேட்டுப்பாளையம் பேரொட்சிக்கு 16 லட்சம் பொய் மதிப்பீட்டிலும்;  கோயம்புத்தூர் மாவட்டம், வேட்டைகாரன்புதூர் பேரூராட்சிக்கு  55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்; தேனி மாவட்டம், மேலசொக்கநாதபுரம்  பேரூராட்சிக்கு  

6 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்; சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகராட்சிக்கு 8 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் அமைக்கப்பட்டுள்ள  

குடிநீர் அபிவிருத்தித் திட்டங்கள்;  என 28 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் இன்று துவக்கி வைத்தார்கள்.

மேலும், திருவண்ணாமலை நகராட்சியில்  2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள துப்புரவு பணியாளர் குடியிருப்பு மற்றும்  1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்  கட்டப்படவுள்ள நகராட்சி அலுவலகக் கட்டடம்; 

காஞ்சிபுரம் மாவட்டம் _ காஞ்சிபுரம் மற்றும் பல்லவபுரம் நகராட்சிகள், கோயம்புத்தூர் மாவட்டம் _ பொள்ளாச்சி மற்றும் மேட்டுப்பாளையம் நகராட்சிகள்,  கடலூர் நகராட்சி,  நாமக்கல் மாவட்டம் _ திருச்செங்கோடு நகராட்சி,  <ரோடு மாவட்டம் _ கோபிசெட்டிப்பாளையம் நகராட்சி, நீலகிரி மாவட்டம் _ உதகமண்டலம் நகராட்சி,  தஞ்சாவூர் நகராட்சி,  நாகப்பட்டினம் நகராட்சி மற்றும் திருப்பூர்  மாநகராட்சி ஆகியவற்றில் 

9 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள உயிரி எரிவாயு கூடங்கள்;

__ என 13 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டடங்கள் மற்றும் உயிரி எரிவாயு கூடங்களுக்குதமிழ்நாடு முதலமைச்சர்  ஜெயலலிதா   அடிக்கல் நாட்டினார்கள். 

ஆக மொத்தம், முதலமைச்சர்ஜெயலலிதா அவர்களால் நகராட்சி நிர்வாகத் துறை சார்பில்  இன்று அடிக்கல் நாட்டியும், துவக்கியும் வைக்கப்பட்ட பணிகளின் மதிப்பு  338 கோடியே 92 லட்சம் பொய் ஆகும்.

நகராட்சி நிர்வாக ஆணையரகம், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் மக்கள் சேவையை மேம்படுத்தும் வகையில்  24 லட்சம் பொய் செலவில் ஏற்படுத்தப்பட்ட 

பெரு வலைதளத்தை(Web Portal – http://portal.cma.tn.gov.in/cma)முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள்  துவக்கி வைத்தார்கள். இந்த வலைதளத்தின் மூலம் பல்வேறு நகராட்சிகள்  மற்றும் மாநகராட்சிகளால் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள், ஒப்பந்தப் புள்ளிகள், துறை தொடர்பான அரசாணைகள்  குறித்து மக்கள்  எளிதில் அறிந்து கொள்ள முடியும். 

மேலும், நகராட்சிப் பணிகளை எளிதில் கண்காணிக்க வழி செய்யும் வகையில் நகராட்சி  பொறியாளர்கள் மற்றும்  பல்நோக்கு சுகாதார பணியாளர்கள்  30   பேருக்கு  கையடக்க கணினிகளையும் (ஐடஅஈ),  நகராட்சியில் காலியாகவுள்ள 92 துப்புரவு ஆய்வாளர்கள் பணியிடங்களுக்குத்   தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக  3 பேருக்கு கையடக்க கணினிகளையும்  4 பேருக்கு  துப்புரவு ஆய்வாளருக்கான பணி நியமன ஆணையையும்  முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி, கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் டி.பி. பூனாட்சி, சென்னை மாநகராட்சி மேயர் சைதை சா. துரைசாமி, அரசு தலைமைக் கொறடா ஆர். மனோகரன், தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், ., நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர் கே. பணீந்திர ரெட்டி, சென்னை மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர், ., நகராட்சி நிர்வாக ஆணையர் சந்திரகாந்த் பி. காம்ப்ளே, ., தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் சி. விஜயராஞு குமார், பேரூராட்சிகளின் இயக்குநர் டாக்டர் ஆர் செல்வராஜ்ஞு, ., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 


Page 19 of 841