Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மேலும் 3 மாநகராட்சி: தமிழக அரசு பரிசீலனை

Print PDF

 தினமணி        27.03.2017

மேலும் 3 மாநகராட்சி: தமிழக அரசு பரிசீலனை

ஆவடி, தாம்பரம், பல்லாவரம் ஆகிய நகராட்சிகளை மாநகராட்சிகளாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, தூத்துக்குடி, திருப்பூர், ஈரோடு, வேலூர், தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய 12 மாநகராட்சிகள் உள்ளன. இந்நிலையில் ஆவடி, தாம்பரம், பல்லாவரம் ஆகிய நகராட்சிகளை மாநகராட்சிகளாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதற்கான பரிந்துரையை சென்னை மாவட்ட நிர்வாகம் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

மாவட்ட நிர்வாகம் அனுப்பிய இந்த பரிந்துரையை தமிழக அரசு தற்போது பரிசீலித்து வருகிறது. அவ்வாறு மாநகராட்சிகளாக அறிவிக்கப்படும் பட்சத்தில், தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளின் எண்ணிக்கை 15ஆக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Last Updated on Monday, 27 March 2017 08:03
 

மதுரை ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொடக்கம்: பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் சின்னம் தேர்வு செய்ய அழைப்பு

Print PDF

தி  இந்து      02.03.2017      

மதுரை ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொடக்கம்: பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் சின்னம் தேர்வு செய்ய அழைப்பு

மதுரை மாநகரம் மிடுக்கான நகரத் திட்டத்துக்கான (ஸ்மார்ட் சிட்டி) முதல் கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட் சிட்டியை அடையாளப்படுத்தும் வகையில் மதுரையின் பாரம்பரியம், கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் சின்னத்தை தேர்வு செய்ய பொதுமக்கள், மாணவர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள 500 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மேம்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்நகரங்களில், மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சுமார் ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டு வளர்ச்சிப் பணிகள் மேற் கொள்ளப்படும்.

இந்த திட்டத்தில் மதுரை மாநகரம் ஸ்மார்ட் சிட்டியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாநகரில் இந்த திட்டத்தை தொடங்குவதற்காக ஸ்மார் சிட்டி லிமிடெட் என்ற புதிய நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக மாநகராட்சி ஆணையர் நியமிக்கப்பட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான முதல் கட்ட பணிகள் தொடங்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சந்தீப் நந்தூரி கூறியதாவது:

மிடுக்கான நகர திட்டத்துக்கு (ஸ்மார்ட்சிட்டி) மதுரையை அடை யாளப்படுத்தும் வகையிலான சின்னம் தேர்வு செய்யப்பட உள்ளது. இப் பொறுப்பை மாணவர்கள், பொதுமக்களிடம் ஒப்படைத்துள்ளோம். கல்லூரி மாணவ, மாணவிகள், வடி வமைப்பாளர்கள், தனியார் நிறுவனத்தினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள், இதில் தன்னார்வமாக இணைந்து மதுரை மாநகரின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் மிடுக்கான நகரம் குறித்த சிறந்த சின்னம் (LOGO) மற்றும் இலக்கு உரையை (TAGLINE) தயார் செய்து வரும் 17-ம் தேதிக்குள் ஆணையர்/தனி அலுவலர், அறிஞர் அண்ணா மாளிகை, மதுரை மாநகராட்சி, என்ற முகவரிக்கும், maducorp@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்.

பொதுமக்கள் அனுப்பி வைக்கும் சின்னங்களில் எது சிறந்தவை என்பது தொடர்பாக, மீண்டும் பொதுமக்களிடம் வாக் கெடுப்பு நடத்தப்படும். அதில் முதலிடம் பெறும் சின்னம் மற்றும் இலக்கு உரைக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.25 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

உள்ளாட்சித் தேர்தல் சட்டங்கள், விதிகளை அறிந்துகொள்ள உதவும் கையேடு: மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது

Print PDF

தி இந்து          08.09.2016

உள்ளாட்சித் தேர்தல் சட்டங்கள், விதிகளை அறிந்துகொள்ள உதவும் கையேடு: மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் முன், தேர்தல் தொடர்பான சட்டங்கள், விதிமுறைகள், நடைமுறைகளைத் தெளி வாக அறிந்துகொள்ள வேண்டும் என வேட்பாளர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பான கையேட்டையும் வெளி யிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2011-ல் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில், அதே ஆண்டு அக்டோபர் மாதம் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. இதில் தேர்வான வர்களுக்கான பதவிக்காலம் வரும் அக்டோபர் 24-ம் தேதியுடன் முடி கிறது. இதையடுத்து, அக்டோபர் மாதத்துக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயம், மாநில தேர்தல் ஆணையத்துக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

ஏற்கெனவே மாவட்ட தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்ட பொறுப்பு அதிகாரி கள் நியமிக்கப்பட்டுவிட்டனர். தேர்தல் வாக்குப்பதிவு மையங்கள், வாக்குப்பதிவு அமைவிடங்கள் போன்றவை தேர்வு செய்யப்பட்டு, அவற்றில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் தொடர்பாக ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டு, அது தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மாநில தேர்தல் ஆணையர் பெ.சீதாரா மன் மாவட்டங்களில் தேர்தல் முன்னேற் பாடுகள் தொடர்பாக ஆய்வு நடத்தி முடித்துள்ளார். எனவே, விரைவில் உள் ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இதற்கிடையில், மாநில தேர்தல் ஆணையம், செப்டம்பர் 1-ம் தேதி வரை யிலான வாக்காளர் பட்டியலை தமிழக தேர்தல் துறையிடமிருந்து பெற்றுள்ளது. இதில் தற்போதைய நிலவரப்படி, 5 கோடியே 81 லட்சத்து 40 ஆயிரத்து 954 வாக்காளர்கள் உள்ளனர்.

தற்போதைய தேர்தலைப் பொறுத்த வரை, மாநகராட்சி, நகராட்சி சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளதால், 12 மாநகராட்சி மேயர்கள், 148 நகராட்சிகளின் தலைவர்கள், 561 பேரூராட்சிகளின் தலைவர்களை வார்டுகளில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களே தேர்வு செய்ய முடியும். நேரடி தேர்தல் முறை கிடையாது. 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளின் தலைவர்கள் மட்டுமே நேரடியாக மக்களால் தேர்வு செய்யப்படுவார்கள்.

இதற்கிடையே, மாநில தேர்தல் ஆணையம் வேட்பாளர்கள் கையேட்டை அண்மையில் வெளியிட்டுள்ளது. இதில், வேட்பாளர்களுக்கான தகுதி, கட்டுப்பாடுகள், மனுத்தாக்கல் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

அதில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் பெயர் அந்த தேர்தலுக்கு தொடர்புடைய ஊராட்சியின் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். பெயர் இடம் பெற்றுள்ள வார்டு தொடர்புடைய தேர்தலில் மட்டுமே அவர் வாக்களிக்க தகுதியுடையவராவார். வேட்பு மனு தாக்கல் செய்யும் கடைசி நாளன்று வேட்பாளர் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த பணியாளர், கிராம நிர்வாக அலுவலர், கிராமப் பணியாளர், மத்திய, மாநில அரசு அலுவலராகவோ, பணியாளராகவோ இருந்தால் போட்டியிட அனுமதியில்லை. மத்திய அல்லது மாநில அரசில் பதவி வகித்து, லஞ்சம் அல்லது அரசுக்குத் துரோகம் இழைத்ததால் பணிநீக்கம் செய்யப்பட்ட நாளில் இருந்து 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டிருந்தால், அபராதம் விதிக்கப்பட்ட நாள் அல்லது சிறையில் இருந்து வெளியில் வந்த நாளில் இருந்து 6 ஆண்டுகளுக்குப் போட்டியிட தகுதியற்றவர் ஆவார்.

வேட்பாளர் மனநலம் குன்றியவராக இருக்கக் கூடாது. போட்டியிட விரும்பும் ஊராட்சி மற்றும் எந்த ஊராட்சியிலும் வேலைக்கான, பொருள் வழங்கு வதற்கான ஒப்பந்ததாரராக இருக்கக் கூடாது. முந்தைய ஆண்டு வரை ஊராட்சிக்கு அளிக்க வேண்டிய எந்த நிலுவைத் தொகையும் வைத்திருக்கக் கூடாது. தேர்தல் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டிருக்கக் கூடாது என தகுதிகள் வகுக்கப்பட்டுள்ளன. மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட பதவியிடங்களில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு பதவிகளுக்கு மனுத்தாக்கல் செய்திருந்தால், ஒரு பதவி தவிர மற்றவற்றுக்கான மனுக்களைத் திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் குலுக்கல் முறையில் ஒரு பதவி தேர்வு செய்யப்பட்டு மற்றவை நிராகரிக்கப் படும். வேட்பாளர் பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சியை சார்ந்தவராகவோ, சுயேச்சையாகவோ இருந்தால், தேர்தலுக்காக அறிவிக்கப் பட்டவற்றில் 3 சின்னங்களை விருப் பத்துக் கேற்ப வரிசைப்படுத்தி கேட்கலாம்.

வைப்புத் தொகையை பொறுத்தவரை ஒரு பதவிக்கு எத்தனை மனுக்கள் தாக்கல் செய்தாலும் ஒரே ஒருமுறை மட்டும் வைப்புத் தொகை செலுத்தினால் போதுமானது. இவை தவிர, வேட்பு மனுக்கள் பரிசீலனை, நிராகரித்தல், மனுக்களை திரும்பப் பெறுதல், சின் னங்கள் ஒதுக்குதல் உள்ளிட்ட பல்வேறு விவரங்களும் இந்தக் கையேட்டில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. வேட் பாளர்கள், ஊராட்சிகள் தேர்தல் குறித்த சட்டங்கள், விதிமுறைகள், செயல்கள், நடைமுறைகள் மற்றும் அறிவுரைகளைத் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும் எனவும் கையேட்டில் குறிப்பிடப் பட்டுள்ளது.

Last Updated on Thursday, 08 September 2016 09:30
 


Page 4 of 841