Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

ரூ. 140 கோடியில் வளர்ச்சிப் பணிகள்: அமைச்சர்

Print PDF

தினமணி               06.01.2014

ரூ. 140 கோடியில் வளர்ச்சிப் பணிகள்: அமைச்சர்

கரூர் மாவட்த்தில் ரூ. 140 கோடியில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

கரூர் நகராட்சியை ரூ. 40 கோடியில் அழகுப்படுத்தும் திட்டத்தின் கீழ் முதற்கட்ட பணியாக கரூர் பசுபதீஸ்வரர் கோயில் முன்பு ரூ. 36 லட்சம் மதிப்பில் சிமென்ட் வண்ணக்கல் தரை தளம் அமைப்பதற்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பூமி பூஜை தொடக்க விழாவில் பங்கேற்று அவர் மேலும் பேசியது:

கரூர் மாவட்டத்துக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளில் எண்ணற்ற நலத் திட்டங்களை தமிழக முதல்வர் வழங்கியுள்ளார். ரூ. 68 கோடியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பசுபதிபாளையத்தில் ரூ. 13.75 கோடி செலவில் உயர்மட்டப்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பசுபதிபாளையம், பெரியகுளத்துப்பாளையத்தில் ரூ. 6.60 கோடியில் குகை வழிப்பாதை அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கும்.

சுக்காலியூர் முதல் காந்திகிராமம் வரை ரூ. 16.35 லட்சத்தில் 4 வழிச்சாலை பணிக்கு பூமிபூஜை நடத்தப்பட்டு பணிகள் தொடங்க உள்ளது. இதேபோல காந்திகிராமம் முதல் வீரராக்கியம் வரை பழுதான சாலையை ரூ. 6.75 கோடியில் சீரமைக்கப்படுகிறது. மொத்தம் ரூ. 140 கோடியில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் முடிந்து விடும். இதேபோல எண்ணற்ற திட்டங்கள் கரூர் மாவட்டத்துக்கு கிடைக்க, தமிழக முதல்வருக்கு என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார். முன்னதாக, விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் வரதராஜன் வரவேற்றார். கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் மு. தம்பிதுரை, கோட்டாட்சியர் நெல்லை வேந்தன், குளித்தலை சட்டப்பேரவை உறுப்பினர் பாப்பாசுந்தரம், கரூர் ஒன்றியக்குழுத் தலைவர் திருவிகா, கரூர் நகர்மன்றத் துணைத் தலைவர் காளியப்பன், அட்லஸ் நாச்சிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

 

சிவகாசி நகராட்சியில் ரூ.61 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்

Print PDF

தினமணி               06.01.2014

சிவகாசி நகராட்சியில் ரூ.61 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்

சிவகாசி நகராட்சியில் ரூ. 61.75 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற உள்ளது என நகர்மன்றத் தலைவர் வெ.க. கதிரவன் கூறினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:  நகராட்சி பகுதியில் உள்ள மருதுபாண்டியர் ஓடையில் உள்ள பாலத்தை விரிவாக்கம் செய்ய ரூ. ஒரு லட்சம், மீன் சந்தையில் கடைகள் கட்டும்பணிக்கு ரூ. 10 லட்சம், காளியப்பா நகரில் தார்சாலை அமைக்க ரூ. 8 லட்சம், மணிநகரில் சுகாதார வளாகம் கட்ட ரூ. 2.50 லட்சம் புதுத்தெருவில் பேவர்பிளாக் அமைக்க ரூ. 6.50 லட்சம், பி.கே.எஸ்.தெருவில் பேவர்பிளாக் அமைக்க ரூபாய் 4.40 லட்சம், வெண்டர் பிள்ளைத் தெருவில் மழைநீர் வடிகால் மற்றும் பேவர் பிளாக் அமைக்க ரூ. 7 லட்சம், ஓடைத் தெருவில் பேவர்பிளாக் அமைக்க ரூ. 3.75 லட்சம், டம்பர்பின் வைக்க பிளாட்பாராம் அமைக்க ரூ. 1 லட்சம், சோலை காலனியில் பேவர்பிளாக் அமைக்க ரூ. 5.75 லட்சம், பாரதிநகரில் பேவர்பிளாக் அமைக்க ரூ. 1.20 லட்சம், வேலாயுதம் சாலையில் ஸ்டேட் பாங்க் பின்புறம் பேவர் பிளாக்க அமைக்க ரூ. 6.75 லட்சம், பெரியகுளம் காலனி மற்றும் மாசில்லா மணிநகரில் பேவர்பிளாக் அமைக்க ரூ. 8.90 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது பொது நிதியிலிருந்து செலவழிக்கப்படும். இப்பணிகள் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 

குத்தாலம் பேரூராட்சியில்ரூ. 37 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்

Print PDF

தினமணி              30.12.2013

குத்தாலம் பேரூராட்சியில்ரூ. 37 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்

குத்தாலம் பேரூராட்சியின் சாதாரணக் கூட்டம் அதன் தலைவர் எம்.சி. பாலு தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்தில் பொது சுகாதார பணிக்காக புதிதாக ஒரு டிராக்டர் டிப்பரும், ஒரு கழிவுநீர் வாகனமும் வாங்குவது, நபார்டு திட்டப்படி ரூ. 24 லட்சத்தில் ராஜகுடியானத் தெரு, ராஜதலையாரித் தெரு,ர ôஜ காலனி மற்றும் பொன்நகரில் தார்ச் சாலை அமைப்பது, ரூ. 3 லட்சத்தில் ஆதிதிராவிடர் மயானத்திற்கு சுற்றுச் சுவர் அமைப்பது,  மண்டல மானிய நிதியின் கீழ் ஏகேபி நகர், மேட்டுத் தெரு, விலாவடி காலனி தெருக்களில் சிமெண்ட் சாலைகள் ரூ. 6.83 லட்சத்தில் அமைப்பது என்பன உள்பட ரூ. 37 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள முடிவு செய்து   தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 


Page 9 of 160