Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

சிவகிரி பேரூராட்சி பகுதிகளில் 36 லட்சத்தில் வளர்ச்சி பணி

Print PDF

தினகரன்             26.12.2013 

சிவகிரி பேரூராட்சி பகுதிகளில் 36 லட்சத்தில் வளர்ச்சி பணி

மொடக்குறிச்சி: சிவகிரி பேரூராட்சிப் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சிபணிகளுக்காக ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி, தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.36 லட்சம் ஒதுக்கினார். அந்தப்பணிகள் துவக்க விழா நடைபெற்றது. எம்.பி., கணேசமூர்த்தி, பணிகளைதுவக்கி வைத்தார்.

பாலமேடு பிரிவில் இருந்து கவுண்டம்பாளையம் செல்லும் சாலை ரூ.10 லட்சத்தில் சீரமைக்கப்படுகிறது. சாணார் பாளையத்தில் ரூ.1 லட்சத்தில் ஆழ்குழாய் கிணறு, கவுண்டம்பாளையத்தில் ரூ.5 லட்சத்தில் ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தலையநல்லூரில் ரூ.10 லட்சம் செலவில் கழிப்பிடம் கட்டப்படுகிறது. இந்த பணிகளை எம்.பி., கணேசமூர்த்தி துவக்கி வைத்தார்.

மேலும் அம்மன் கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி,  ரத்தினபுரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் தலா ரூ.4 லட்சத்தில் புதிய நீர்த்தேக்கத் தொட்டிகளை அவர் திறந்து வைத்தார்.நிகழ்ச்சிகளில் மாவட்ட மதிமுக அவைத்தலைவர் குழந்தைவேலு, ஒன்றிய செயலாளர் கொற்றவேல், நகர செயலாளர் சுப்பிரமணியம், அவைத்தலைவர் தலைசை கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

 

திருப்பூர் மாநகராட்சி முதலாவது மண்டலத்தில் ரூ93 லட்சத்தில் வளர்ச்சித் திட்டம்

Print PDF

தினகரன்           20.12.2013

திருப்பூர் மாநகராட்சி முதலாவது மண்டலத்தில் ரூ93 லட்சத்தில் வளர்ச்சித் திட்டம்

அனுப்பர்பாளையம்,: திருப்பூர் மாநகராட்சி முதலாவது மண்டலக்குழு கூட்டம் வேலம்பாளையம் மண்டல அலுவலகத்தில் நடந்தது.  திருப்பூர் மாநகராட்சி முதலாவது மண்டலத்தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முதலாவது மண்டல உதவிஆணையாளர் முகமதுசபியுல்லா  முன்னிலை வகித்தார். கூட்டத்தில், கவுன்சிலர்கள் மாரப்பன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), ரவிச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), உமாமகேசுவரி (திமுக), மற்றும் அதிமுகவைச் சேர்ந்த கவுன்சிலர்கள் விஜயக்குமார்,சுப்பிரமணியம், செந்தில்குமார், கல்பனா, சத்யா, சிதம்பரம், சந்திரசேகரன்,  அதிமுக கவுன்சிலர்கள் சின்னசாமி,  சேகர், ஈசுவரன் செந்தில், பாலசுப்ரமணியம், விஜயகுமார் உள்ளிட்டவர்கள் பேசினர்.

தொடர்ந்து நகர்நல அலுவலர் ராமச்சந்திரன், உதவி ஆணையர் சபியுல்லா ஆகியோர் பேசினர்.

கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு பதிலளித்து முதலாவது மண்டலத்தலைவர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது: காந்திநகரிலிருந்து குமார் நகர் வரை மேம்பாலம் கட்டுவதற்கான ஆக்கபூர்வ ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. தமிழ்நாடு நகர்ப்புற அபிவிருத்தி திட்டத்தின்கீழ் சாலைகளை புதியதாக அமைக்கவும், செப்பனிடவும், ரூ.6 கோடியே 65 லட்சம் செலவில் நடைபெற உள்ளது. குடிநீரை பொறுத்த வரை முன் அனுமதி பெற்று உடனுக்குடன் தாமதமின்றி பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.  வேலம்பாளையம் மண்டலக்கூட்டத்தில் ரூ.  93 லட்சம் செலவில் வளர்ச்சிப்பணிகள் செய்வதற்காக  108 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன’ என்றார்.

 

ரூ.60 லட்சம் செலவில் நலத்திட்டப் பணிகள் துவக்கம்

Print PDF

தினமணி               18.12.2013

ரூ.60 லட்சம் செலவில் நலத்திட்டப் பணிகள் துவக்கம்

வாணிப்புத்தூர் பேரூராட்சியில் ரூ.60 லட்சம் மதிப்பில் நலத்திட்ட பணிகள் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

 கோபி அருகே வாணிப்புத்தூர் பேரூராட்சிக்குள்பட்ட கள்ளியங்காடு பகுதியில் தார்சாலை, பங்களாப்புதூரில் கான்கிரீட் சாலை, வாணிப்புத்தூரில் குடிநீர் வசதி, டி.என்.பாளையத்தில் சாக்கடை வசதி ஆகிய பணிகளுக்கு ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கான பணி தொடக்க விழாவுக்கு வாணிப்புத்தூர் பேரூராட்சித் தலைவர் பரமேஸ்வரி ராஜசேகரன் தலைமை வகித்தார். விழாவில் அந்தியூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.எஸ்.ரமணீதரன் பங்கேற்று, பணிகளை துவக்கி வைத்தார்.

 


Page 10 of 160