Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

பாலமேடு பேரூராட்சியில் ரூ.35 லட்சத்தில் பணிகள்

Print PDF

தினமலர்            01.10.2013  

பாலமேடு பேரூராட்சியில் ரூ.35 லட்சத்தில் பணிகள்

பாலமேடு : பாலமேடு பேரூராட்சியில் நிலவும் சுகாதார சீர்கேடு, நோய் அபாயத்தை தவிர்க்க, தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக ரூ.35 லட்சத்தில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இப்பேரூராட்சியில் வலையபட்டி ரோடு, 1 மற்றும் 2வது வார்டுகளில் அடிப்படை வசதிகள் இல்லை. சாக்கடை கழிவுநீர் வெளியேற வடிகால் வசதிகள் இல்லை. பொது சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.அதன் எதிரொலியாக பேரூராட்சித் தலைவர் நாராயணசாமி, துணைத் தலைவர் சேகர், நிர்வாக அலுவலர் சண்முகம் அப்பகுதிகளை ஆய்வு செய்தனர். பேரூராட்சியின் அவசர கூட்டத்தை கூட்டி பொது நிதியில் இருந்து அடிப்படை வசதிகள் செய்ய தீர்மானித்தனர்.

அதன்படி 1 மற்றும் 2 வது வார்டுகளில் தேங்கிய கழிவுநீரை வெளியேற்ற ரூ.4.40 லட்சத்தில் கான்கிரீட் வடிகால் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

மேல்நிலை தொட்டி தண்ணீரை பயன்படுத்த தொட்டிகள், நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் பாலமேடு - முடுவார்பட்டி ரோட்டில் ரூ.31 லட்சத்தில் தார் போட முடிவு செய்தனர். இப்பணிகள் விரைவில் துவக்கப்படவுள்ளன. வலையபட்டி ரோட்டில் முதியோர் காப்பகம் வரை வடிகால் பணி நடக்கிறது. 

 

பெருந்துறை பேரூராட்சியில் ரூ70 லட்சம் வளர்ச்சிப்பணி அமைச்சர் துவக்கி வைத்தார்

Print PDF

தினகரன்              02.09.2013

பெருந்துறை பேரூராட்சியில் ரூ70 லட்சம் வளர்ச்சிப்பணி அமைச்சர் துவக்கி வைத்தார்

ஈரோடு, : பெருந்துறை பேரூராட்சி பகுதிகளில் பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது. இதில் வருவாய்த்துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் பணியை தொடங்கி வைத்தார். பெருந்துறை பேரூராட்சி பகுதியில் சென்னிவலசு பகுதியில் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக அங்கன்வாடி கட்டிடம், கொங்கு கல்லூரி ரோடு பீரங்கிமேடு, ஸ்ரீநகர் பூங்கா ஆகிய பகுதிகளில் 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆழ்குழாய் கிணறு அமைத்தல், ஊராட்சி ஒன்றிய தெற்குபள்ளியில் 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக ஆழ்குழாய் கிணறு அமைக்கப்படவுள்ளது.

பெரிய வேட்டுவபாளையத்தில் 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், தாளக்கரைப்புதூரில் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், கோட்டைமேடு காலனி பகுதியில் 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், அக்ரஹாரவீதி விநாயகர் கோயில் அருகில் 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் புதியதாக ஆழ்குழாய் கிணறு அமைக்கப்படவுள்ளது.

குன்னத்தூர் ரோட்டில் கள்ளியம்புதூர் பிரிவு, பழைய பஸ் ஸ்டாண்ட் கிழக்கு பகுதி ஆகிய இடங்களில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பழைய குடிநீர் குழாயினை மாற்றி புதியதாக குடிநீர் குழாய்கள் அமைக்கப்படவுள்ளது.

தோப்புப்பாளையம் உயர்நிலைப்பள்ளியில் 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சைக்கிள்கள் நிறுத்துமிடம் கட்டப்படவுள்ளது. பெருந்துறை பேரூராட்சி பகுதியில் 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 10 புதிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்கான பூமி பூஜைக்கு கலெக்டர் சண்முகம் தலைமை தாங்கினார். வருவாய்த்துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தலைமை தாங்கி இதற்கான பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ், பெருந்துறை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பெரியசாமி, பேரூராட்சி தலைவர்கள் பெருந்துறை சரஸ்வதி, கருமாண்டிசெல்லிபாளையம் ஜானகி, பெருந்துறை பேரூராட்சி செயல் அலுவலர் தன்னாசி, இளநிலை பொறியாளர் தியாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

ரூ.1.83 கோடியில் வளர்ச்சிப் பணிகள்

Print PDF

தினமணி               02.09.2013

ரூ.1.83 கோடியில் வளர்ச்சிப் பணிகள்

கிருஷ்ணகிரியில் ரூ. 1.83 கோடியில் சாலை மற்றும் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியை அமைச்சர் கே.பி.முனுசாமி ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தார்.

பழையபேட்டை வார்டு எண் 7-இல் நேதாஜி சாலை மற்றும் பைசுல்லா நகர் சாலை வரை ரூ. 76 லட்சத்தில் சாலை மற்றும் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி மற்றும் வார்டு எண் 22-இல் ரூ. ஒரு கோடியே 7 ஆயிரம் மதிப்பில் சாலை மற்றும் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியை அமைச்சர் கே.பி.முனுசாமி தொடக்கி வைத்தார். இந்தப் பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

மேலும், அந்தப் பகுதி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவை மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித் தலைவர் கே.அசோக்குமார், தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் பி.என்.ஏ.கேசவன், நகர்மன்றத் தலைவர் கே.ஆர்.சி.தங்கமுத்து, ஒன்றியக் குழுத் தலைவர்கள் கோவிந்தராஜ், ஜெயபாலன், முனியப்பன், நகராட்சி ஆணையாளர் டாக்டர். இளங்கோவன், நகராட்சிப் பொறியாளர் சிவக்குமார், நகர அமைப்பு அலுவலர் பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.’

 


Page 12 of 160