Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

மாநகராட்சி மன்ற கூட்டம் தீர்மானம் கொசு தொல்லையை சமாளிக்க ஸீ7.5 கோடியில் வலைகள் கொள்முதல்

Print PDF

தினகரன்           27.06.2013

மாநகராட்சி மன்ற கூட்டம் தீர்மானம் கொசு தொல்லையை சமாளிக்க ஸீ7.5 கோடியில் வலைகள் கொள்முதல்

சென்னை, : கொசு தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஸீ7.5 கோடியில் 5 லட்சம் வலைகள் கொள்முதல் செய்ய மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநகராட்சி மன்ற கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் 72  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முக்கிய தீர்மானங்கள் வருமாறு:

  • கூத்தம்பாக்கம் மற்றும் மீஞ்சூர் வல்லூரில் குப்பை பதனிடுதல் திட்டத்தை செயலாக்க தொழில்நுட்ப ஒப்பந்தப்புள்ளிகள் சரிபார்ப்பு மற்றும் மதிப்பீட்டுக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் அனுமதி வழங்கப்படும்.
  • அடையாறு மண்டலத்தில் 170 முதல் 182 வரை உள்ள கோட்டங்களில் மலேரியா பணியாளர்கள் 150 பேரை ஒப்பந்ததாரர் மூலம் பணியமர்த்த ஸீ1 கோடியே 17 லட்சத்து 4,500 நிதி ஒதுக்கப்படும்.
  • சென்னை மாநகராட்சி மன்ற தீர்மானத்தின்படி 2000ல் கேபிள் தட வாடகை தொகை கி.மீ 1க்கு ஸீ9,400ல் இருந்தது. 2013ல் கேபிள் தட வாடகை கி.மீ 1க்கு ஸீ32,450 நிர்ணயம் செய்யவும், இனி ஒவ்வொரு ஆண்டும் கேபிள் தட வாடகை 10 சதவீதம் உயர்த்தி அதன் வீதத்தில் கேபிள் டிவி விநியோகஸ்தர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்க முறையான அரசின் ஒப்புதல் பெறப்படும்.
  • புதிதாக இணைக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஸீ300 கோடியில் 1,10,000 தெரு விளக்கு கம்பங்கள் அமைக்கப்படும்.
  • மழைநீர் கால்வாயில் கழிவு நீர் இணைப்பு கொடுத்துள்ள வர்த்தக நிறுவன உரிமம் ரத்து செய்து சீல் வைக்கப்படும்.
  • துப்புரவு பணிகளுக்கு தேவையான 1100 லிட்டர் கொள்ளளவுடைய 2,000 குப்பை தொட்டிகள் வாங்கப்படும்.
  • கொசு தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஸீ7 கோடியே 50 லட்சம் செலவில் 5 லட்சம் கொசு வலைகள் கொள்முதல் செய்யப்படும். மேலும் நொச்சி செடிகளும் வளர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • தற்போதுள்ள 200 அம்மா உணவகங்கள், புதிதாக தொடங்கப்படவுள்ள 800 அம்மா உணவகங்கள் என ஆயிரம் உணவகங்கள் சிறப்பாக செயல்பட தனித்துறை அமைக்கப்படும்.
இத்துறையில் திட்ட இயக்குனர்&1 (கூடுதல் மாநகர சுகாதார அலுவலர் நிலை), மண்டல சுகாதார அலுவலர்&1, துப்புரவு அலுவலர்&4, நிர்வாக அலுவலர் &1, இளநிலை உதவியாளர்&19, சுகாதார ஆய்வாளர் 46, தட்டச்சர் 19, அலுவலக உதவியாளர் 20 என மொத்தம் 111 பணியிடங்கள் உருவாக்கப்படும். இதற்காக ஸீ2 கோடியே 77 லட்சத்து 90 ஆயிரத்து 578 நிதி ஒதுக்கப்படும்.

  • திட்ட இயக்குனருக்கு மாதம் ஸீ42,660, மண்டல சுகாதார அலுவலருக்கு ஸீ41,640, துப்புரவு அலுவலருக்கு ஸீ27,140 நிர்வாக அலுவலருக்கு ஸீ27,660 சம்பளம் வழங்கப்படும். சென்னை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவிகளுக்கு இலவச சானிடரி நாப்கின் 2013&14ம் ஆண்டிலும் வழங்கப்படும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

கொடைக்கானல் நகராட்சி பகுதியில் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் நகரசபை கூட்டத்தில் தீர்மானம்

Print PDF

தினத்தந்தி               25.06.2013

கொடைக்கானல் நகராட்சி பகுதியில் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் நகரசபை கூட்டத்தில் தீர்மானம்

கொடைக்கானல் நகராட்சி பகுதியில் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப்பணிகள் நடைபெற நகரசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நகரசபை கூட்டம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரசபை கூட்டம் தலைவர் (பொறுப்பு) எட்வர்டு தலைமையில் நடந்தது. ஆணையாளர் (பொறுப்பு) முகமது சாகுல் அமீது முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நடந்த விவாதம் விவரம் வருமாறு:–

மோகன்:–கொடைக்கானலுக்கு வரும் நுழைவு பகுதியில் உள்ள சுங்கவரி வசூல் மையத்தின் அருகில் தனியார் நிறுவனத்தின் சார்பில் விளம்பர போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி வாங்கப்பட்டுள்ளதா?

ஆணையாளர்:– அனுமதி பெறப்படவில்லை. இன்னும் ஒரு வாரத்திற்குள் இந்த போர்டுகள் அகற்றப்படும்.

மினி தியேட்டர்

ராஜ்குமார்:–நகராட்சி கலையரங்கம் அருகில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் மினி தியேட்டர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

ஆணையாளர்:– கோப்புகளை பார்த்து நடவடிக்கை எடுக்கப்படும்.

ரகுவரன்:–நகராட்சி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்குகள் அனைத்தும் பழுதடைந்துள்ளன. இதனை சப்ளை செய்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலைவர்:–வரும் காலங்களில் தரமான நிறுவனத்திடம் இருந்து மின்உபகரணங்கள் வாங்கப்படும்.

மழைநீர் சேகரிப்பு

ராஜ்குமார்:– நகராட்சி அலுவலகம் இடிக்கப்பட்டதில் உள்ள பொருட்கள் எங்கு உள்ளது. இதன் மதிப்பு எவ்வளவு?

தலைவர்:– பழைய நகராட்சி அலுவலக கட்டிடம் இடிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் தனியார் இடத்தில் பத்திரமாக உள்ளது. விரைவில் இந்த பொருட்கள் பொது ஏலத்தில் விடப்படும்.

ஆல்பர்ட்:– நகராட்சி பகுதியில் வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வாங்கி விட்டு தங்கும் விடுதிகள் கட்டி வருகிறார்கள். இதைத் தவிர்த்து உரிய முறையில் கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலைவர்:– இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பல கட்டிடங்களில் அமைக்கப்பட்டிருந்த மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் செயல்படாமல் உள்ளது. இதனை சீரமைக்க பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

ஆறுமுகம்:–கொடைக்கானல் நகரில் அரசு புறம்போக்கு இடங்களில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.

தலைவர்:– இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் பட்டா வழங்கப்படும்.

ஆல்பர்ட்:– பஸ் நிலையத்தில் தனியார் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலைவர்:– இதுகுறித்து பலமுறை அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த நிலை நீடித்தால் ஒப்பந்தத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

ரூ.1 கோடியே 20 லட்சம்

ஆரோக்கியம்:– கொடைக்கானல் நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளை தூர்வார வேண்டும்.

தலைவர்:– இதற்காக ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்தப் பணிகள் தொடங்கும். அத்துடன் நகரில் சாலைகளை பராமரிப்பு செய்ய ரூ.5 லட்சமும், பொது நிதியின் கீழ் ரூ.21 லட்சமும் ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்க உள்ளது. அத்துடன் நகரில் உள்ள 24 வார்டுகளுக்கும் தலா 5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற உள்ளது.

மேற்கண்டவாறு விவாதங்கள் நடந்தது. முடிவில் நகரமைப்பு ஆய்வாளர் சரவணக்குமார் நன்றி கூறினார்.
 

கனாட் பிளேஸ் மறுமேம்பாட்டு பணிகள் இந்த வாரத்தில் முடியும்

Print PDF

தினமணி         25.06.2013

கனாட் பிளேஸ் மறுமேம்பாட்டு பணிகள் இந்த வாரத்தில் முடியும்

கனாட் பிளேஸ் பகுதி மறுமேம்பாட்டுத் திட்டப் பணிகள் அனைத்தும் இந்த வாரத்திற்குள் முடிக்கப்படும்' என்று புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) அதிகாரிகள் தெரிவித்தனர்.

கனாட் பிளேஸ் பகுதியை அதன் பழைமை மாறாமல் புதுப்பிக்கும் வகையில், அங்கு குடிநீர், மின்சாரம், தொலைத்தொடர்பு உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை தரைக்கடியில்   

குழாய்கள் மூலம் ஏற்படுத்தும் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒராண்டு காலமாக பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகளை மேற்கொள்ளும் கன்சல்டன்ட் நிறுவனமான "என்ஜினீயரிங் இந்தியா லிமிடெட்' (இ.ஐ.எல்.) அதிகாரி ஒருவர் கூறியதாவது:

முக்கியமான பணிகள் அனைத்தும் இந்த வார இறுதிக்குள்ளும், தண்ணீர், மின்சாரம்  தொடர்பான பணிகள் அடுத்த வாரத்திலும் முடிவுறும்.

சுரங்கப் பாதையில் அடிப்படை கட்டுமானப் பணிகளை முடித்துவிட்டோம். எஸ்கலேட்டர்கள் நிறுவும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

கனாட் பிளேஸ் பகுதியில் கடைகளுக்கு தரைக்கடியில் இருந்து மின்சாரம் அளிக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளோம்.

மொத்தம் உள்ள 20 மின் மாற்றிகளில் 13 மின் மாற்றிகளுக்கு மின்சாரம் வழங்குவதற்கு அனுமதி பெற்றுள்ளோம். இவற்றில் 8 மின் மாற்றிகள் செயல்பாட்டில் உள்ளன.

எஞ்சியுள்ள மின்மாற்றிகள் அடுத்த வாரத்திற்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று அந்த அதிகாரி கூறினார்.

இது குறித்து, என்.டி.எம்.சி. அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தரைக்கடியில் மின்சாரம் கொண்டு செல்வதற்கு கேபிள்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. சில தினங்களில் இப்பணிகள் முடிவுறும்.

இப்பணிக்காக மின்சாரத்தை முழுவதும் நிறுத்த முடியவில்லை. அதனால் பணிகளில் சற்றுத் தாமதம் ஏற்படுகிறது.

மறுமேம்பாட்டுத் திட்டம் காரணமாக கனாட் பிளேஸ் பகுதியில் நேர்த்தியான வாகன நிறுத்துமிடங்கள், சாலைகளில் தரமிக்க மின் விளக்குகள், சீரான வெள்ளைநிற வர்ணப்பூச்சு, உரிய தகவல்கள் பலகைகள், புதிய தளம் உள்பட பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதி புதுப்பொலிவு பெற்றுள்ளது என்று அவர் கூறினார்.

புது தில்லி வர்த்தகர்கள் சங்கத் தலைவர் அதுல் பார்கவா கூறியதாவது:

மறுமேம்பாடு பணி காரணமாக கனாட் பிளேஸ் புதுப்பொலிவு பெற்றுத் திகழ்கிறது. இதனால், இங்கு வருவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

மின்கம்பிகள் பதிக்கும் பணியும், முட்டுத் தூண்கள் பதிக்கும் பணியும் செப்டம்பர் மாதத்திற்கு முன்பாக முடிக்கப்பட்டுவிடும் என்று நம்புகிறோம் என்று அதுல் பார்கவா கூறினார்.

 


Page 15 of 160