Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

மாநகராட்சி மண்டலம் 1-பகுதியில் ரூ.1.36 கோடியில் வளர்ச்சிப் பணி

Print PDF

தினமணி               18.06.2013

மாநகராட்சி மண்டலம் 1-பகுதியில் ரூ.1.36 கோடியில் வளர்ச்சிப் பணி

மதுரை மாநகராட்சி மண்டலம் 1 பகுதியில் ரூ. 1.36 கோடியில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

 வார்டு 18-ல் எஸ்.எஸ். காலனி சுப்பிரமணியப்பிள்ளை தெருவில் ரூ. 40.50 லட்சத்தில் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் தார்ச்சாலை, வார்டு 19-ல் பொன்மேனி முதல் தானதவம் வரை ரூ. 53 லட்சத்தில் தார்ச்சாலை, வார்டு 1-ல் பூமன் நகரில் ரூ. 11.75 லட்சத்தில் தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

 எல்லீஸ் நகர் புறவழிச் சாலையில் சர்வீஸ் சாலையில் ரூ. 30.80 லட்சத்தில பிக் பஜார் முதல் எல்லீஸ் நகர் சந்திப்பு வரை தார்ச்சாலை அமைக்கப்படுகிறது. இந்தப் பணிகளை திங்கள்கிழமை ஆய்வு செய்த ஆணையர் ஆர். நந்தகோபால், பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

 மண்டலம் 1- பகுதியில் வரி சீராய்வு செய்வது தொடர்பாக, வணிக நிறுவனங்களை அளவிடும் பணியையும் ஆணையர் ஆய்வு செய்தார். வரி சீராய்வு செய்யப்பட்ட பின்னர், குழு அமைத்து வரி சரியாக விதிக்கப்பட்டுள்ளதா என சரிபார்க்கப்பட இருப்பதால், முறையாக அளவிடும் பணியை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார்.

 உதவி ஆணையர் ரெகோபெயாம், செயற்பொறியாளர் அரசு, உதவி செயற்பொறியாளர் காமராஜ், பொறியாளர்கள் மயிலேறிநாதன், சர்புதீன், கந்தப்பன் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.

 

சிங்கப்பூர் போல மாறுது கோயம்புத்தூர்

Print PDF

தமிழ் முரசு                07.06.2013

சிங்கப்பூர் போல மாறுது கோயம்புத்தூர்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

கோவை: சிங்கப்பூரில் உள்ளாட்சி நிர்வாகங்களின் செயல்பாடுகளை பார்வையிட இந்தியாவில் இருந்து கோவை மேயர் வேலுச்சாமி, கமிஷனர் லதா உள்பட 11 மாநகராட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் சென்றனர். சிங்கப்பூரில் இருந்து திரும்பிய கோவை மேயர் கூறியதாவது: வசிக்க தகுந்த நாடுகள் பட்டியலிலும் சிங்கப்பூர் 2வது இடத்தில் உள்ளது. மொத்த பரப்பில் 40 சதவீதம் பசுமையாக உள்ளது. 94 சதவீத மக்கள் அரசு வழங்கிய வீடுகளில் வசிக்கின்றனர். 99 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் அரசே வீடு வழங்கியுள்ளது. 6 சதவீதத்தினர் மட்டுமே சொந்த வீட்டில் வசிக்கின்றனர். கடந்த 20 ஆண்டுகளில் சிங்கப்பூர் அபார வளர்ச்சி பெற்றுள்ளது.

சிங்கப்பூரில் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் திட்டங்களை கோவையிலும் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் தினமும் 2 ஆயிரம் டன் குப்பையில் இருந்து 20 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கின்றனர். கோவையில் தினமும் 800 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. 400 டன் மறுசுழற்சிக்கு உதவாது. மீதமுள்ள 400 டன் குப்பையை எரித்து அதில் இருந்து தினமும் 5 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க திட்டமிட்டுள்ளோம்.

அதேபோல அனைத்து மாநகராட்சி மற்றும் தனியார் கட்டிடங்களில் சோலார் பிளான்ட் அமைத்து மின்சாரம் தயாரிக்கவும் திட்டம் உள்ளது. 24 மணி நேர குடிநீர், கழிவுநீர் சுத்திகரிப்பு, போக்குவரத்து மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொலைநோக்கு பார்வையுடன் சிங்கப்பூரில் அமல்படுத்துவது போல கோவையிலும் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்காக புதிய மாநகர மேம்பாட்டு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மேயர் கூறினார்.

 

ஜயங்கொண்டம் நகராட்சியில் ரூ.38 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்

Print PDF
தினமணி        06.06.2013

ஜயங்கொண்டம் நகராட்சியில்  ரூ.38 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்


அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் நகராட்சியில் ரூ. 38 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

 அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் நகர்மன்றக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைவர் மீனாள் சந்திரசேகர் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பி.ஆர். செல்வராஜ், ஆணையர் நவேந்திரன் முன்னிலை வகித்தனர்.

 கூட்டத்தில் உறுப்பினர்களின் விவாதம்:

 வெ.கொ. கருணாநிதி: நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானங்கள் மட்டுமே வாசிக்கப்படுகிறது.

 நகராட்சியின் வரவு-செலவு கணக்குகளை ஒவ்வொரு கூட்டத்திலும் வாசிக்க வேண்டும் என கூறியிருந்தோம். அடுத்து வரும் நகர்மன்றக் கூட்டங்களில் வரவு-செலவு கணக்குகளை வாசிக்க வேண்டும்.

 துரை: நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் குறைவாகவே உள்ளனர். எனவே புதிதாக துப்புரவு பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும்.

 எஸ். மூர்த்தி: 6 மாதங்களுக்கு ஒரு முறையே நகர்மன்றக் கூட்டம் நடத்தப்படுகிறது.

 ஒவ்வொரு மாதமும் 10-ஆம் தேதிக்குள் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

 கணேஷ்குமார்: அண்ணாசிலை அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை மது அருந்தவும், சிலர் குளிக்கும் இடமாகவும் பயன்படுத்தி வருகிறார்கள் இதை தடுக்க வேண்டும்.

 ஆணையர் நவேந்திரன் உறுப்பினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறினார்.

 கூட்டத்தில் ரூ. 27 லட்சம் மதிப்பில் சாலைப்பணிகள், ரூ. 7 லட்சம் மதிப்பில் குடிநீர் பராமரிப்பு பணிகள், ரூ. 4 லட்சம் மதிப்பில் ஜெனரேட்டர் வாங்குவது உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 


Page 17 of 160